மே 15, 2015

July 3, 2008 at 3:20 pm 10 comments

பெங்களுரு.மே மாதம் 15-ம் நாள், 2015.

ரத்னா டவர்ஸ் ஐந்து நட்சத்திர ஒட்டலில் கன்னா முகம் வெளிறி போயிருந்தான். அவனுடைய மேலதிகாரி  தொந்தி அதிர கத்திக் கொண்டிருந்தார்.

” அவனுக்கு தான் அறிவில்ல. உனக்கு எங்கே போச்சு புத்தி? ஒரு ஏற்பாடு சரியா பண்ண மாட்டிங்களா? வெட்டி சம்பளம் தான்யா வாங்கறீங்க. ஷர்மா எங்கே? இருக்கானா வீட்டுக்கு போய்ட்டனா?”

“சார், ஷர்மா  எப்படியாவது வாங்கிட்டு வந்துர்றான்னு சொல்லிருக்கான்.”

“கிழிச்சான். உங்களை கட்டிக்கிட்டு நான் மாரடிக்கிறன். எப்படிய்யா அரேன்ச் செய்வான்?”

“அவனுக்கு தெரிந்த மதறாசி ஒருத்தன் ஜலகல்லி-ல இருக்கானாம். அவங்க வீட்டுல சொல்லி …”

“ஒழுங்கா வந்து சேருல்ல அவனுக்கு மெமோ தான் சொல்லு. சமோசா எல்லாம் ரெடி ஆயிச்சா?”

” இன்னும் ஒரு மணி நேரத்தில வந்திரும் சார்.”

“யோவ், மினிஸ்ட்டரே இன்னும் அரை மணி நேரத்தில வந்துருவார். சென்னையிலேயிருந்து கிளம்பி வந்துட்டே இருக்காராம். பேனர் என்ன ஆச்சி? அது நாளைக்கு வந்துருமா?”

” இல்லை சார். இதோ இங்கே வைச்சுருக்கேன்.”

“சரியான இடம்யா. அப்டியே சுருட்டி வைச்சுரு. யாரும் பார்க்கக் கூடாது”

“சார்….”

“பேனர் எதுக்கய்யா? பிரி, பார்ப்போம். யோவ், என்னய்யா வார்மிங்க்கு  பதிலா வார்னிங் போட்ருக்கு”

“சார், அது எம் தான் சார்”

“மினிஸ்டர் கேட்டா சொல்றியா?”

“…”

“மினிஸ்டர் பேர விட இந்தாளு பேரு பெருசா இருக்கு. இதுவும் ஷர்மா வேலைதானா?”

” இல்லை.. சார்… வந்து ….”

 “சார், மினிஸ்டர் வர லேட்டாகும்.”

“ஏன்யா ..”

“சென்னையிலே பனிப்புயலாம். ப்ளைட்டெல்லாம் லேட்டாம்.”

“கடவுளே, இப்பதான்யா உயிரே வந்திச்சி”.

Advertisements

Entry filed under: கதை.

03-07-2008 04-07-2008

10 Comments Add your own

 • 1. செந்தழல் ரவி  |  July 3, 2008 at 3:51 pm

  ஒன்னும் புரியலையே !!!!

 • 2. யோசிப்பவர்  |  July 3, 2008 at 3:58 pm

  புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள்?

 • 3. Batcha  |  July 3, 2008 at 3:59 pm

  i go through this topic 2 or 3 times but still i cannot getting anything …can u cexplain me sir

 • 4. sharehunter  |  July 3, 2008 at 4:31 pm

  திரு. சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக் கதைகளை (Science Fiction Short Story) அனுப்புமாறு வலைவெளி நண்பர்களை கேட்டுள்ளார். அதற்காகதான் இப்படி கதையை எழுதி உங்களையெல்லாம் அதிர்ச்சியடைய வைத்துள்ளேன்.

  இன்னும் சில மாதங்களில் பங்கு சந்தை நமக்கு கொடுக்கப் போகும் அதிர்ச்சிகளையெல்லாம் தாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதை தாங்க மாட்டீர்களா, என்ன?

 • 5. Nandhu f/o Nila  |  July 3, 2008 at 4:31 pm

  வாவ் சிம்ப்ளி சூப்பர்ப்

 • 6. யோசிப்பவர்  |  July 3, 2008 at 4:38 pm

  ஐயா,

  //திரு. சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக் கதைகளை (Science Fiction Short Story) அனுப்புமாறு வலைவெளி நண்பர்களை கேட்டுள்ளார்.
  //

  அது தெரிந்துதான் வாசித்தேன். ஆனால் இதில் எங்கே அறிவியல் இருக்கிறது என்று கொஞ்சம் விளக்கினால் நலம்.

 • 7. இரா. வசந்த குமார்.  |  July 3, 2008 at 4:45 pm

  எனக்கு புரிஞ்சிடுச்சு…

  நாம எல்லாம் குளோபல் வார்மிங் பற்றி பேனரெல்லாம் எழுதி, ப்ளாஸ்டிக் மூடி போட்ட கண்ணாடி தம்ளர்ல மினரல் வாட்டர் ஊற்றி கான்ஃபரன்ஸ் எல்லாம் கூட்டி தயாராவதற்குள்ளேயே சென்னைல பனிப்புயல் அடிச்சு … ஐஸ் ஏஜ் கான்செப்ட் தானே இது… இல்லையா…?

 • 8. cvalex  |  July 3, 2008 at 8:29 pm

  //நாம எல்லாம் குளோபல் வார்மிங் பற்றி பேனரெல்லாம் எழுதி, ப்ளாஸ்டிக் மூடி போட்ட கண்ணாடி தம்ளர்ல மினரல் வாட்டர் ஊற்றி கான்ஃபரன்ஸ் எல்லாம் கூட்டி தயாராவதற்குள்ளேயே சென்னைல பனிப்புயல் அடிச்சு … ஐஸ் ஏஜ் கான்செப்ட் தானே இது… இல்லையா…?//

  இப்பத்தான் எழுதுனவருக்கே கத புரிஞ்சிருக்கு 🙂

 • 9. புபட்டியன்  |  July 17, 2008 at 7:12 pm

  எனக்கு படிச்சதுமே புரிஞ்சிடிச்சு.. கொஞ்சம் நீட்டியிருக்கலாமோ.. கதையை

 • 10. sharehunter  |  July 17, 2008 at 8:32 pm

  நன்றி, புபட்டியன், சிறுகதைதானே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: