Apollo Tyres III
June 30, 2008 at 8:51 pm 1 comment
அனைத்து டயர் குழுமங்களுமே தற்போது புத்தக மதிப்பை விட குறைவாக தற்போது விற்பனையாகின்றன ( எம்.ஆர்.எப்-ஐ தவிர).
போட்டியாளர்களில் முதல் முன்று போட்டியாளர்களை பற்றி மட்டும் பார்ப்போம். மற்ற குழுமங்கள் அனைத்தும் மாநில அளவில் மட்டுமே விற்பனையாகின்றன.
1) எம். ஆர். எப் (M.R.F.)
Madras Rubber Factory என்ற பெயர் கொண்ட எம் ஆர் எப் (M.R.F.) குழுமம் இந்தியாவில் தற்போது முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவெங்கும் தனது விற்பனை அங்காடிகளை கொண்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக இக்குழுமத்தின் Capital Structure -ல் எந்தவித மாற்றமும் இல்லையென்பதால், தற்போது அதிக விலையில் விற்பனையாகின்றது. கூடிய விரைவில் தன்னுடைய Capital Structure மாற்றக் கூடும். Rights Issue எதிர்பார்க்கலாம். இக்குழுமத்தின் சொத்து மதிப்பு அதிகம். இந்தியாவில் அதிகம் விரும்பக் கூடிய கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு பிரபலமான எம் ஆர் எப் அகாதெமி (M.R.F. Pace Academy) நடத்தி வருகின்றது. Funskool Toys என்ற விளையாட்டு பொருட்கள் விற்பனை குழுமம் இவர்களுடையதுதான். தற்போதைய விலையில் வாங்காமல் சந்தை சரிவில் வாங்கலாம். நீண்ட நாள் முதலீடாக வைத்திருந்தால் மட்டுமே இலாபம் தரக்கூடியது.
2) ஜே கே டயர்ஸ் (J.K. Tyres)
லாலா ஜக்கிலால் சிங்கானியா மற்றும் அவர் புதல்வர் லாலா கமலாபட் சிங்கானியா என்பாருடைய பெயர்களின் முதலெழுத்தை கொண்டு தொடங்கப்பட்ட இக்குழுமம் இந்தியாவில் மிக முக்கியமான தொழிற் குழுமம் (Industrial Conglomerate) ஆகும். மிகுந்த நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த இக்குழுமத்தை திறமையான மேலாண்மை திட்டங்கள் முலம் தற்போது ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறந்த இலாபங்களை கொடுத்து மீண்டும் முன்னேற்ற பாதைக்கு தற்போதைய மேலாண்மை அழைத்துச் செல்கின்றது. புத்தக மதிப்பை விட கிட்டத்தட்ட ரு.100 குறைவாக விற்பனையாகிறது. ( இதை எழுதுவது 30-6-2008 அன்று). புகழ் பெற்ற ரேசிங் அகாதெமி இவர்களால் நடத்தப்படுகிறது.
3) சியட் (CEAT)
ஆரம்பத்தில் இத்தாலி நாட்டில் தொடங்கப்பட்ட இக்குழுமம் பின்னர் இந்தியாவில் ஆர்பிஜீ நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. காண்டாமிருகத்தை விற்பனை லோகோவாக உருவாக்கி விற்பனை செய்து வந்த இக்குழுமம் தற்போது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இக்குழுமம் பங்கு சந்தையில் விலை ஏற்ற இறக்கத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரிக்கப்பட்டு பங்கு சந்தையிலிருந்து சிறிது நாட்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தற்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது. இப்பங்கின் விலை இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. இப்பங்கினையும் நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கலாம். இப்பங்கானது தற்போது ஒரு வருட குறைவான விலையில் தான் விற்பனையாகின்றது என்றாலும் எனது பரிந்துரை விலையாக ரு 55-65 நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கலாம்.
ஏதேனும் ஒரு டயர் பங்குகளை வாங்கி நீண்ட கால கையிருப்பாக வைத்திருந்தால் முதலீடு puncture இல்லாமல் செல்லும் என்று நம்பி நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் ( இங்கு நீண்ட காலம் என்று குறிப்பிடப்படுவது குறைந்தது இரு வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை) வாங்கலாம்.
Entry filed under: Tiger Cubs.
1.
oscarbharathi | July 30, 2008 at 4:39 pm
hai,
thanks.