#5 Fundamental Analysis – Competition

June 24, 2008 at 9:37 pm 1 comment

ஒரு குழுமத்தினை தேர்ந்தெடுத்து அக்குழுமத்தின் கணக்கு புத்தகங்களை பார்த்து முதலீடு செய்வதற்கு ஏற்ற குழுமமா என்று பார்ப்பதற்கு Fundamental Analysis பயன்படுகிறது. நமது தேசிய பங்கு சந்தையில் 500 மேலான ( சின்ன வயதில் நான் கற்றுக் கொண்ட ஒரு வித்தையை நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன். புள்ளி விவரங்கள் சிறிது குழப்பமாகவோ, படித்தது மறந்து விட்டாலோ, தேசிய பங்கு சந்தையில் எத்தனை குழுமங்கள் பட்டிலிடப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சரியாக தெரிந்து கொள்வதற்கு சோம்பலாக இருந்தாலும், குறைந்த ஒரு எண்ணிக்கையை சொல்லி அதற்கு மேலாக என்று சொல்வது உத்தமம். இக்கட்டத்தில் 1000 என்பது ரிஸ்க். சரியான எண்ணிக்கை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்)  குழுமங்கள் பட்டிலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் அனைத்தையும் தேர்ந்தெடுத்து அலசிக் கொண்டிருக்க முடியாது. இத்தனை எண்ணிக்கையிலிருந்து ஒரு குழுமத்தை தேர்ந்தெடுப்பது நிறைய முறைகளில் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் ஒன்று போட்டி (Competition) .

 இவற்றில் முன்று விதமாக குழுமங்களை பிரிக்கலாம் :

1) போட்டியே இல்லாத சிங்கம்

2) போட்டியென்று வந்து விட்டா சிங்கம்

3) போட்டியென்று வந்து விட்டா அசிங்கம்

 

     முதல் வகையை பற்றி பார்ப்போம். இவ்வகை குழுமங்களை மோனோபொலி (Monopoly)  என்று சொல்வார்கள். பொதுவாக இந்த வகை குழுமங்கள் அரசு மற்றும் அரசு சார்புடையதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, இந்திய இரயில்வே (Indian Railways) . தனியார் குழுமங்கள் வேறு யாரும் இரயில்வே உடன் போட்டி போட முடியாது. தனியார் இருப்புப் பாதைகள் ஏதும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நம் நாட்டில் இதுநாள் வரை அமைத்தது இல்லை. தனியார் துறை நிறுவனங்களும் சில கால கட்டத்திற்கு இந்த நிலையில் இருக்கலாம். ஆனால் சிறிது காலத்திற்கு மட்டுமே அவர்களால் நீடிக்க முடியும். பொதுவாக, அரசு தவிர வேறு எந்த தனியார் நிறுவனங்களும் இந்த நிலையில் இருப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்காது. உதாரணத்திற்கு, மைக்ரோ சாப்ட் (Microsoft)  நிறுவனம் வின்டோஸ் மென்பொருள் (Windows Operating System) கண்டுபிடித்தபிறகு நிறைய ஆபரேடிங் சிஸ்டங்கள் இருந்தாலும், இந்தியாவில் இந்த நிலையை நிறைய காலம் Microsoft அனுபவித்தது. வின்டோஸ் தவிர வேறு ஆபரேடிங் சிஸ்டம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாமல் இருந்தது. தற்போது லினக்ஸ், ஆப்பிள் மெக் போன்று பல ஆபரேடிங் சிஸ்டங்கள் வந்து விட்டாலும் இன்னும் வின்டோஸ் நமது நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் வருங்காலத்தில் இந்நிலை கண்டிப்பாக மாறும்.
       இவ்வகை குழுமங்களில் போட்டியாளர் என்று யாரும் இன்மையால் தாராளமாக முதலீடு செய்யலாம் (பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் என்பதால் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதில்லை). அரசாங்க கொள்கை மாறி சரியான போட்டியாளர்கள் களத்தில் இறங்க தொடங்கினால் மீண்டும் நம் முதலீட்டினை மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும்.

      இரண்டாவது வகையானது ஒரு ஆரோக்கியமான சந்தைக்கு எடுத்துக் காட்டு. ஒரு குழுமம் செய்யும் வணிகத்தை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு அதன் மேலாண்மை சரியான திசைக்கு அக்குழுமத்தை வழிநடத்தி செல்கின்றதா என எளிதில் கண்டறியலாம். நிறைய உதாரணங்கள் உள்ளன. பயனாளர்கள் பொருள் உற்பத்தியில் (Fast Moving Consumer Goods FMCG) ஹீந்துஸ்தான் யுனிலிவர் (Hindustan Unilever)  மற்றும் ஐ.டி.சி. (I.T.C) நிறுனங்களை எடுத்துக் கொள்ளலாம். இவ்விரண்டும் மேற்கண்ட துறையில் தலைமை பொறுப்பினை வகிக்கின்றன. ஆனால், மாரிகோ (Marico), டாபர் (Dabur)  மற்றும் கோத்ரெஜ் (Godrej) போன்ற போட்டியாளர்களும் உண்டு. சிறிது அசந்தாலும் கூட, அவர்கள் முதலிடத்தை பிடிக்க கடுமையான போட்டி போடுவார்கள்.
      இவ்வகை குழுமங்களில் துறை தலைமை பொறுப்பை வகிக்கும் குழுமத்தில் முதலீடு செய்வதை விட முதலிடத்தை பிடிக்க போராடும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வதே சிறந்தது. மேலும் முதலீட்டினை வருடந்தோறும் பரிசீலனை செய்வது முக்கியம். குறிப்பாக ஆரோக்கியமான போட்டியுள்ள துறையானது மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு, காப்பீடு (Insurance)  பொறுத்த வரை நம்நாட்டில் 25 (முதல் பாராவில் சொன்ன வித்தை) சதவிகிதம் மட்டுமே வணிகம் நடந்துள்ளது. காப்பீடு பற்றி ஒரு விழிப்புணர்ச்சி பரவலாக ஏற்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் எல்.ஐ.சி. (L.I.C)  மட்டுமே கோலோச்சி கொண்டிருந்தது. அச்சமயங்களில் எல்லா காப்பீடு முகவர்களும் “நீங்க இப்ப இருங்கீங்கல்ல, தீடீரென்று போய் சேர்ந்துவிட்டீங்கனா ” பேச்சை ஆரம்பிப்பார்கள். ஆனால் தனியார் போட்டியாளர்கள் பஜாஜ் (Bajaj Allianz) , டாடா (Tata Aviva) , ரிலையன்ஸ் (Reliance Money), பாரதி (Bharti AXA) என்று வந்த பிறகு மேற்கண்ட அதே விஷயத்தை மிக நுட்பமாக சொல்கின்றார்கள். குறிப்பாக பாரதி விளம்பரம் பார்த்திருப்பீர்கள்.

 

     முன்றாவது வகை குழுமங்களை பொறுத்தவரை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. இவ்வகை குழுமங்கள் ஆரம்ப காலத்தில் போட்டியின்று வெற்றிகரமாக செயல்படும். ஆனால் போட்டியாளர்கள் களத்தில் இறங்கி விட்டால் “கைபுள்ள” மாதிரி ஆகிவிடும். இதற்காக முன்றாவது வகையை சேர்ந்த குழுமங்கள் அனைத்தும் மோசமானவை என்று கருதக்கூடாது. இலாபம் ஈட்டும் என்றாலும், போட்டியை சமாளிக்க இயலாமால் தடுமாறும் என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். உதாரணம், துார் தர்ஷன் (Doordarshan) . ஒலியும் ஒளியும், வயலும் வாழ்வும், திரைமலர்,எதிரொலி இதெல்லாம் இன்னும் எத்தனை பேருக்கு நினைவு இருக்கும். தனியார் தொலைக்காட்சிகள் வராத நாட்களில் கொடிகட்டி பறந்தது. இத்தனைக்கும் துார்தர்ஷன் பார்ப்பதற்கு முற்றிலும் இலவசம். இன்றைய பதினைந்து வயது சிறுவர்களுக்கு இந்நிகழ்ச்சிகளின் பெயரை சொன்னால் முற்றிலும் அந்நியமாக தெரியும். இதிலிருந்தே தெரியும் போட்டியாளர்களின் வருகை ஒரு குழுமத்தை எவ்வாறு மாற்றி விட்டதென்று.

 

Advertisements

Entry filed under: Fundamental Analysis.

24-06-2008 25-06-2008

1 Comment Add your own

  • 1. Batcha  |  June 29, 2008 at 8:25 am

    அருமையான விளக்கம் என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும்படி உள்ளது. உங்களுடைய சேவை மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: