#1 Why Fundamental Analysis
June 5, 2008 at 9:08 pm 3 comments
லார்சன் & டுப்ரோ( L & T) பங்கின் முக மதிப்பு (Face Value) ரு.2 ஆகும். பங்கு சந்தையில் ரு.2700-2800 என்ற அளவில் விற்பனையாகிறது. அக்குழுமத்தின் கணக்கு புத்தகங்களில் அனைத்திலும் இப்பங்கின் மதிப்பு ரு.2 என்ற குறிப்பிட படுகிறது. சந்தை மதிப்பில் கிட்டதட்ட 1400 மடங்கு அதிகமாக விற்பனை ஆகிறது. எப்படி?
Fundamental Analysis என்றால் என்ன? அதை கற்றுக் கொண்டு என்ன ஆக போகிறது? இதனால் எனக்கு என்ன இலாபம்? நான் படித்தது அறிவியல், கணக்கியலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, என்னால் எப்படி கற்றுக் கொள்ள முடியும்? கணக்கியலின் கோட்பாடுகள் மிகவும் கடினமானவை என்று கேள்வி பட்டிருக்கிறேன். சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் எல்லோரும் இதனை கற்றுக் கொண்டா வருகிறார்கள்? இதனை கற்றுக் கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று நினைக்கிறேன். ஏதாவது உபயோகம் இருக்குமா?
இத்தனை கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். நம்மில் பலர் சொந்த வியாபாரம், தனியார் நிறுவனங்களில் வேலை இது போன்ற நிலைகளில் இருக்கலாம். அதில் ஒரு முக்கியமான திறமை : மனிதர்களை எடை போடும் திறமை. மிகத் துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும் ஒரளவு நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை பற்றி ஒரு அபிப்பிராயம் நம்மால் சொல்ல முடிகிறது இல்லையா? இத்திறமை நம்மை அறியாமலே நம்மிடம் இருக்கிறது. இதில் பெண்களின் கணிப்பு மிகச் சரியாக இருக்கும் என்று பொதுவாக சொல்வார்கள்( சொந்த அனுபவம் ஏதும் இல்லை). நம்முடைய அன்றாட வாழ்வில் இத்திறமை நம்முடைய Survival காக பயன்படுகிறது. அதுபோல பங்கு சந்தையில் நாம் தாக்கு பிடிக்க இத்திறமையை கூர்திட்டி வைத்துக் கொள்வது நல்லது.
பங்கு சந்தையில் விற்பனையாகும் பங்குகளை பற்றி ஒரளவு கணிக்க இந்த உதவுகிறது. பங்கின் குணநலன்களை பற்றி ஒரளவு துல்லியமாகவே கணித்து விடலாம். எப்படி பங்குகளை பிரிக்கலாம்?
சில வகை பங்குகள் வடிவேலு மாதிரி (“பார்க்க ஸ்ட்ராங்கா இருக்கும், ஆனா பேஸ்மென்ட் வீக்”), கமல் மாதிரி ( சிறிது குழப்பமாக இருக்கும் கணக்கு வழக்குகள்), சூர்யா மாதிரி (ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒவ்வொரு மாதிரி). நீங்களும் சில வகை பிரிவுகள் சொல்லுங்களேன்.
கணக்கியலின் அத்தனை கோட்பாடுகளையும் (Principles) நான் கற்று கொடுக்க போவதில்லை. அத்தனையும் தேவையும் இல்லை. நாம் என்ன Company Accounts தயார் செய்ய போகிறோமா, இல்லையே! அவர்கள் தயார் செய்ததை மேற்பார்வை (Supervise) இட போகிறோம். அவ்வளவே! கணக்கியலின் சில கோட்பாடுகளை பற்றி மட்டும் மிக எளிதாக விளக்க முயற்சி செய்கிறேன்.
இதனை கற்றுத் தேற சிறிது காலம் பிடிக்கும் தான். அதனால் என்ன? நீச்சல் கற்றுக் கொள்ள சிறிது காலம் பிடித்தாலும், வெள்ளத்தை கண்டு பயப்படவேண்டியதில்லை அல்லவா!
உபயோகம் ஏதானும் இருக்குமா? கற்றுக் கொண்ட பிறகு நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இத்தொடரில் சில கணக்கியல் கோட்பாடுகள் (Accounting Principles), இனங்களை (Terms) முடிந்த மட்டில் தமிழில் மொழி பெயர்க்க முயல்கிறேன். அருகில் அதன் ஆங்கில சொல்லை கொடுக்கின்றேன். சில இனங்கள் மொழி பெயர்க்க இயலாவிடில், ஆங்கில சொல்லையே உபயோகப்படுத்துகிறேன்.
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் இத்தொடர் முடிவதற்குள் உங்களுக்கு தெரிந்து விடும். தற்போது யாருக்கேனும் தெரிந்தால் உடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Entry filed under: Fundamental Analysis.
1.
balakeethai | June 5, 2008 at 10:09 pm
வணக்கம் திருஅலெக்ஸ்,
எனது பள்ளிபருவத்தில் கணக்கு வாத்தியார் மரியாதைக்குரிய
திரு.குப்புரத்தினம் அய்யா,அவர்களை நினைவு படுத்தியுள்ளிர்கள்
மிக்க நன்றி….மேலும் உங்களது பாடங்களை அறிய ஆவலுடன் உள்ளேன்
2.
வடுவூர் குமார் | June 6, 2008 at 2:37 am
தொடருங்கள்.
நன்றி
3.
batcha | June 12, 2008 at 7:19 pm
Sir plz update