02.06.2008 Post Market

June 2, 2008 at 9:04 pm Leave a comment

     சந்தையின் முதல் சப்போர்ட் லெவல் தகர்ந்து விட்டது. நிப்டி குறியீட்டில் உள்ள சில பங்குகள் வருட குறைந்த விலையின் அருகில் உள்ளன. தற்சமயம் வரை அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்து இருக்கிறது. இதே நிலையில் முடிந்தால், நாளைய சந்தை ஆரம்பத்திலேயே சரிய கூடும். சரிந்தால் எது வரை முடியும் என்பது தெரியவில்லை. சந்தையில் இருக்கும் காளைகள் ( இருந்தால்?) கடைசியாக ஒரு போராட்டத்தை நடத்தக் கூடும்.

      இந்த நிலையில் பதற்றத்துடன் சந்தையை எதிர்கொள்ளாமல் நிதானத்துடன் அனுகவேண்டும். ரொக்கம் வைத்திருப்பவர்கள் நிதானமாக தங்கள் வேட்டையை தொடங்கலாம். பங்குகள் வைத்திருப்பவர்கள் பதற்றமடைந்து கையிலிருக்கும் பங்குகளை அடிமாட்டு விலையில் விற்கவேண்டாம். (சொல்வது எளிது செய்வது கடினம் என்று தோன்றுகிறது அல்லவா? ஆரம்ப நிலைகளில் நானும் இத்தவறுகளை செய்திருக்கிறேன்.)  இந்நிலை தற்காலிகமானதே. கையிலுள்ள பங்குகள் நல்ல அடிப்படையை கொண்டிருப்பின் மீண்டும் பழைய விலைக்கு போக அதிக நாட்கள் எடுத்து கொள்ளாது. சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கடன் வாங்கியெல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.  பருவ மழை போன்ற Positive காரணங்கள் கரடியின் பிடியில் இருந்து சந்தையை தற்சமயம் விடுவிக்காது என தோன்றுகிறது. தற்போதைய சந்தையில் மழை காலத்தில் கூட குடை கம்பெனி  விலை ஏறாது என்று தான் தோன்றுகிறது.

 

    உங்களிடம் உபரியாக உள்ள, இரு வருடங்கள் வரை அவசர தேவையில்லாத ரொக்கத்தினை மட்டுமே முதலீடு செய்யுங்கள்.  காலையில் விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.

 

Sleep Well and Good Night!

 

Advertisements

Entry filed under: Market Analysis.

Enter with Joy II 03-06-2008

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: