Bear Market III

May 19, 2008 at 5:53 pm Leave a comment

     ஒரு துறையை சார்ந்த ஒரு பங்கு அல்லது பல பங்குகள் கரடிகளின் பிடிக்குள் வருவது என்பது ஒரே நாளில் நடக்கும் செயல்  கிடையாது. மிக தெளிவான திட்டமிடல் வேண்டும். சிறிது பிசகினாலும் காளைகள் கிழித்து விடுவார்கள். கால அளவை பொறுத்த வகையில் இரு வகையில் கரடிகள் தாக்குதல் நடக்கும்.

1. ஒரு நாள் – தின வணிகம்
2. டெலிவரி ( Delivery Based)
     முதலில் தின வணிகத்தில் கரடிகள் எவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என பார்க்கலாம். தின வணிகத்தில் காலையில் விற்க ஆரம்பித்தால், சந்தை முடிவதற்குள் மீள வாங்கியாகி வேண்டும். கால அளவு மிக சொற்பமே. காலையில் எந்த துறையில் ஒரு தெளிவற்ற தகவல் வருகிறது என்று காத்திருந்து அந்த துறையை சார்ந்த ஒரு பங்கினையோ, பல பங்குகளையோ உடனே short-selling செய்ய ஆரம்பிப்பார்கள். இது போல் தின வணிகத்தில் கரடிகள் தாக்குதல் நடத்தும்போதும், இலாபமானது விற்கும் எண்ணிக்கைகையை பொறுத்தே அமையும் என்பதால் விற்பனை அதிக எண்ணிக்கையில் இருக்கும். தின வணிகத்தை பொறுத்த வரை பொதுவாக Futures & Options Group இருக்கும் பங்குகளை தான் குறி வைப்பார்கள். அது என்ன தகவல் என்பதை பல முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் முன்னேயே மின்னல் வேகத்தில் short-selling பண்ண ஆரம்பித்து விடுவார்கள். இது போதுமே ஊடகங்களுக்கு, உடனே பல்வேறு ஊகங்களை வெளியிட்டு அனைவரையும் குழப்ப ஆரம்பித்துவிடுவார்கள். நிறைய பேர் டை கட்டி கொண்டு, சீரியஸாக இது குறித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். நிறைய படம் எல்லாம் போட்டு, a+b+c  என்று பார்முலா எல்லாம் சொல்லி அந்த பங்கை வாங்கி இருப்பவர்கள்  வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  ( இந்த சமயத்தில் நான் மிகுந்த கவனத்துடன் சேகரித்த ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறேன். பங்குகள் கரடிகள் தாக்குதலுக்கு ஆளாகையில் செய்தி சேனல்களில் பெண்கள் “இந்த பங்கு புட்டுகிச்சு” சொல்லும்போது முதலீட்டாளர்கள் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. இதையே டை கட்டிகொண்டு யாரேனும் ஆண் சொன்னால் திகிலடைந்துவிடுகிறார்கள்.)

      இதை நம்பி சிறு முதலீட்டாளர்களும் விற்று வைத்து விடுவார்கள். மறுநாள் பார்த்தால் வணிக செய்தி தாளில் அந்த தகவல் குறித்து விவரமாய் எழுதி, அது ஒருமாதிரி Positive தகவல் என்று புரியும். சரி, விட்டதை பிடிக்கிறேன் என்று சொல்லி திரும்ப பழைய விலைக்கு ஏற்றி விடுவார்கள். சிறு முதலீட்டாளர்களின் அப்போதைய மனநிலை எப்படி இருக்கும் என்றால், அப்பங்கு ஒரு ருபாய் ஏறினால் கூட விற்று விட்டு loss booking பண்ணி விடுவார்கள். அவ்வளவு எரிச்சல் அப்பங்கின் மீது. பயமும் கூட.

     தற்போது செபி (SEBI) பெரிய நிறுவனங்களும் short selling பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு.  எளிமையாக சொல்வதென்றால்,  முதலீட்டாளர்களிடமிருக்கும் நீண்ட கால முதலீட்டிற்கென வாங்கி வைத்த பங்குகளை அவர்கள் அந்நிறுவனங்களுக்கு Leaseக்கு கொடுக்கலாம். இந்நிறுவனங்கள்  தற்போது அப்பங்குகளை விற்று பின்னர் அதனை குறைந்த விலைக்குவாங்கி இலாபம் பெற்று, முதலீட்டாளர்களுக்கு leaseக்கு பெற்றதற்காக ஒரு தொகையினை அளிக்கும். சும்மா கையில் வைத்திருப்பதற்கு குத்தகை விட்டு சம்பாதிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தானே. இது போன்று குத்தகை விடுவதற்கு பத்து, இருபது என்ற எண்ணிக்கையில் பங்குகள் வைத்திருந்தால் ஆட்டத்தில் நம்மை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பெரிய பத்து, இருபது என்ற எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

20.05.2008 21.05.2008

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: