Feedback 13.05.2008

May 13, 2008 at 5:50 pm 1 comment

நண்பர் புவனுக்கு,

வாங்கலாமா என்ற உங்கள் கேள்வியில் நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்க போகிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை.

நீங்கள் முதலீடு செய்ய உத்தேசிக்கும் குழுமங்கள் ஒரே துறையில் முத்திரை பதிக்கும் அரசு நிறுவனங்கள்.ஒரே துறையில் இருக்கும் முன்னணி குழுமங்களில் அத்தனையிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது என்று நான் கருதுகின்றேன்.

 இக்குழுமங்களில் எவற்றை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனில் வெகு எளிதாக தீர்வு காணலாம்.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ்கானும் கேள்விகளுக்கு விடை கண்டு பிடிப்பதுதான்.

1) மேற்கண்ட குழுமங்களில் எது புத்தக மதிப்பிற்கு குறைவாக அல்லது அதற்கு அருகில் விற்பனையாகின்றது?

2) எக்குழுமம் கடந்த ஆறு காலாண்டு அறிக்கைகளில் விற்பனையை கணிசமாக உயர்த்தி காட்டியிருக்கின்றது?

3) எக்குழுமத்தில் ரிசர்வ் தொகை பங்கு முலதனத்தை விட அதிகமாக இருக்கின்றது? கடைசியாக போனஸ் கொடுத்த குழுமம் எது? போனஸ் கொடுத்த கால இடைவெளி?
4) கடந்த நான்கு மாதங்களில் எக்குழுமங்களில் மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன? அல்லது பெரிய அளவில் விற்பனை செய்துள்ளன?

5) எக்குழுமம் ஒரு வருட குறைவு தொகைக்கு அருகில் விற்பனையாகின்றது?

6) அரசின் மாற்று எரிபொருள் கொள்கை பற்றி ஏதேனும் விவரம். முதலீடு ஒரு வருடத்திற்கு மேல் எனில் இக்கேள்விக்கு விடை கானுவது தற்போது அவசியமில்லை.
 இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாலே போதும்.
 
நல்லது, புவன். நான் இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் எனக்கு என்ன பதில் கூற போகிறீர்கள்?

நண்பர் பாலகீதைக்கு,

பங்கு சந்தை எனது முழு நேர தொழில் அல்ல.

 

Advertisements

Entry filed under: Hunter's Mind.

13.05.2008 14.05.2008

1 Comment Add your own

  • 1. bhuvan  |  May 14, 2008 at 4:43 pm

    நண்பரே தங்கள் விளக்கத்துக்கு முதலில் நன்றி நன்றி.நான் பங்கு சந்தையை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்துருக்கிறேன். (பாதி கிணறு ).3 கம்பெனிகளும்
    ஒரு வருடைய குறைந்த விலைக்கு அருகில் இருப்பதால் short term காக கேட்டேன்.
    தங்கள் பதிவினை தினமும் படித்து வருகிறேன் . அனைவரும் விரும்பும் வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது .தொடர்ந்து எழுத முயலுங்கள் . நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: