Enter with Joy
May 11, 2008 at 1:57 am 4 comments
உங்களில் பலர் தொலைபேசி முலம் வணிகம் செய்பவராக இருக்கலாம். அல்லது தினம் முகவர்களின் அலுவலகம் சென்று வணிகம் செய்யலாம். எப்படி இருப்பினும், வணிகம் செய்வதற்கு முன் நான் பயன்படுத்தும் Relaxation Techniques பற்றி சொல்லலாம் என்று இருக்கின்றேன்.
தலைப்பில் கூறியவாறு மிக்க சந்தோஷத்துடன் நுழையுங்கள். சந்தையின் முடிவில் மகிழ்ச்சியை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்லுங்கள். உங்கள் முடிவுகளில் சில தவறாக போகியிருக்கலாம். அதனால் என்ன? சந்தை நமக்கு எப்போதும் நிறைய சந்தர்ப்பங்கள் தரும். பயன்படுத்தி கொள்ளலாம்.
காலையில் சந்தை துவங்குவதற்கு முன் 10 நிமிடங்கள் முன் போய்விடுவது நல்லது. நேரில் வர்த்தகம் செய்பவர்கள். உங்கள் முகவரிடமிருந்து உங்களுக்கு Cash Exposure கிடைத்துள்ளதா, காசோலைகள் உரிய கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். Pre Market Orders எவ்வித தடங்கலின்றி சொல்வதற்கு வசதியாக இருக்கும். ( Pre Market Orders நிறைய யுக்திகள் உள்ளன. அவற்றை தனி பகுதியில் சொல்கின்றேன்.)
உங்களுக்கு பிடித்த சினிமா பாடல்களை கேளுங்கள் அல்லது பாருங்கள். குத்து பாடல்கள் என்றால் நல்லது. அல்லது வடிவேல் காமெடி பார்க்கலாம். எந்த காட்சி அல்லது பாடல் உங்களுக்கு நிரம்ப பிடிக்குமோ அதை பார்க்கலாம்.
என்னுடைய Favorite Bryan Adams Summer of 69 தான். அப்பாடலை கேட்பேன். அல்லது பார்ப்பேன். Shakira’s Whenever, Wherever பிடிக்கும்.
சிலருக்கு கஜல் பிடிக்கும். சாஸ்த்ரீய சங்கீதம். இது போன்று மனதை இலகுவாக்கும் எதையும் கேட்கலாம். பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு இவை ஏதும் பழக்கமாகி இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.இசை ஆர்வம் முக்கியம். நல்லது.
நான் சமயத்தில் குத்து பாடல்களையும் கேட்பது உண்டு. ஆனால் Bryan Adams Summer of 69 மேல் ஒரு பித்து. அப்பாடலை கேட்கும் போது உற்சாகம் தொற்றி கொள்ளும். உங்கள் Favorite இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
தயவு செய்து “சட்டி சுட்டதடா” போன்ற வகையறாக்கள் வேண்டாம்.
உற்சாகமாக நுழையுங்கள்
Entry filed under: Hunter's Mind.
1.
balakeethai | May 12, 2008 at 7:06 am
மன்னிக்கவும்,எனக்கு ஆங்கில அறிவு கிடையாது.
பாலகீதையில் ,முன்பாதி எனது பெயர் பின்பாதி எனது
மகளின்பெயர்.மேலும் உங்களை அலெக்ஸ் என அழைக்கலாமா?
நன்றி………….
2.
sharehunter | May 12, 2008 at 8:40 am
அழைக்கலாம், நண்பரே.
3. Hava Nagila – Song « Share Hunter | May 25, 2009 at 11:38 pm
[…] 1 Enter with Joy […]
4.
Rafiq Raja | May 26, 2009 at 2:21 pm
நான் பெரும்பாலும் இணையத்திலேயே வர்த்தகத்தை மூட்டை கட்டி விடுவதால், சந்தை சாவடியில் நேரடி தொடர்பு இல்லை. இழப்போ, லாபமோ, சைடில் ஒரு பாட்டை கேட்டு கொண்டே வேலை செய்வது தான் எனக்கு பிடித்தம். அது எவ்வகை பாட்டாயினும் சரி.
Summer of 69 எனக்கும் பிடித்த பாடலே. கல்லூரி கால நாட்களில் நம்மவர்கள் கிட்டாரை பிடித்தால் பாடியது இரண்டு பாடல்களே…. ஒன்று இளைய நிலா, இன்னொன்று சம்மர் 69… மறக்க முடியுமா அந்நாட்களை.
ÇómícólógÝ