Archive for May 4, 2008

05.05.2008

 

சந்தை mood positive ஆக உள்ளது.  Gap up ஆக துவங்கும் என நினைக்கிறேன். Momentum counters Noida Toll Bridge சேர்ந்துள்ளது.  இன்றைய சந்தையில் இப்பங்கினை கவனிக்கலாம்.

 சந்தை 5375 தாண்டும் பட்சத்தில் மட்டுமே காளைகள் ஆதிக்கம் அதிகரிக்கும்.  ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என நான் கருதுகின்றேன்.

கரடிகள் கையில் செல்வது தற்போதைய நிலவரம் வரை தவிர்க்க முடியாமல் இருக்கிறது.  அனைத்து முன்னணி குழுமங்களும் நல்ல காலாண்டு அறிக்கையை கொடுத்துள்ளன. சிறப்பான காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டன.

முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு முடிவுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். 

தற்போதைய சூழலில் நீண்ட கால முதலீட்டுக்கு மாரிகோ பங்குகளை வாங்கலாம்.  இப்பங்கு குறித்து Tiger Cubs பகுதியில் பிறகு எழுதலாம் என்று உள்ளேன்.

May 4, 2008 at 4:58 pm Leave a comment

04-05-2008

 

தற்போது விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருக்கும் Indian Premier League 20-20 கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறீர்களா?  நானும்தான்.  இவ்வளவு கோடிகள் செலவழித்து  ஏன் Sponsorship எடுக்க வேண்டும்?

 
 இது குறித்து இன்னொரு நினைவு :

 சர்வதேச 20-20 போட்டிகளில் இந்தியா விளையாடிய போது இந்தியா வெற்றி பெறும் என ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை co-sponsor செய்தது ரிலையன்ஸ் கம்யுனிகேஷன். போட்டிகள் நிறைவுக்கு வந்து இந்தியா கோப்பையை கைப்பற்றியபின் அந்த பங்கின் விலை வெகுவாக உயர்ந்தது.
 இப்போது IPL 20-20 போட்டிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

May 4, 2008 at 10:22 am Leave a comment


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
May 2008
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031