Conquer the Monkey

May 3, 2008 at 6:21 pm 3 comments

முதன் முதலாய் பங்கு சந்தையில் வணிகம் செய்யும் ஒரு முதலீட்டாளர், தன் நெருங்கிய நண்பரிடமிருந்தோ, முகவரிடமிருந்தோ அல்லது ஊடகங்களிலிருந்தோ ஒரு recommendation tip பெற்று அது சரியாக நடந்து லாபம் ( இலாபமானது அவரின் பாதி மாத அல்லது ஒரு வார ஊதியமாக இருக்கலாம்) பெறும்போது அவரின் நடவடிக்கைகள் :
1) இவ்வளவு காலம் நமக்கு இந்த சந்தை பற்றிய தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம
2) யாரிடமிருந்து பெற்றாரோ அதை மறைத்து தன்னுடைய சொந்த ஆராய்ச்சி காரணமாகவே அந்த இலாபத்தை பெற்றதாக நம்புவது, மற்றவரிடமும் சொல்வது
3)மற்ற முதலீடுகளில் உள்ள தொகையை எடுத்து எவ்வாறு பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்ற திட்டம்?
4)பெற்ற நண்பரிடமிருந்து, முகவரிடமிருந்து அல்லது ஊடகங்களிலிருந்து மேலும் tips எதிர்பார்ப்பது மற்றும் அவற்றை முற்றிலும் நம்புவது

 முதலீட்டாளர்கள் ஆரம்ப காலத்தில் இலாபம் பெறும்போது அவர்கள் மனத்தில் பங்கு சந்தையை பற்றி obession வரும். தினமும் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும். அவரின் உத்தியோகம் இரண்டாம் பட்சமாக போய்விடும்.
சந்தை ஏற்ற இறக்கங்களில் முதலில் பாதிக்கப்படுவது இவர்கள்தான்.
என்னதான் செய்ய வேண்டும்?
 
இலாபம் பெற்றதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமா?
அவசியமில்லை.
என்னதான் வெளியே நீங்கள் tip பெற்றாலும், சரியான விலைக்கு வாங்கி, விற்ற உங்களுடைய முடிவில்தான் அந்த இலாபம் கிடைத்தது. மற்றவரிடம் சொல்லி மகிழலாம். ஆனால் அந்த இலாபம் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ள சிறிதளவாது முயற்சி செய்ய வேண்டும்.
ஏன் அந்த பங்கின் விலை அன்றைய தினம் ஏறிற்று? இனிவரும் நாட்களில் மேலும் ஏறுமா? ஏறக் காரணங்கள் உள்ளனவா?
சந்தையை பற்றி தெரிந்து கொள்ள மகத்தான ஆங்கில அறிவு மற்றும் கணிதவியல் தெரிந்து இருக்க வேண்டியதில்லை. ஆங்கிலம் சிறிதளவு பரிச்சயம் ஆகியிருந்தால் போதும். ஆனால் ஆங்கிலம் அவசியம். அடிப்படை கணிதவியலும்தான். கற்றுக் கொள்ள ஆர்வம் வேண்டும். பங்கு சந்தையை சூதாட்டமாக பார்க்கக் கூடாது. ( இந்த பாராவில் எத்தனை அறிவுரைகள்!)
 
தினமும் பங்கு சந்தையில் வணிகம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பத்தில் முழு நேர வணிகராக இருக்கும்போதும், தினமும் வணிகம் செய்யாமல், சில நாட்கள் ஒதுங்கியிருந்து பார்க்கலாம். மிகவும் கடினமான காரியம் அதுதான். விலகியிருந்து பார்ப்பது. மற்றவர்கள் வாங்கி விற்கும்போது உங்கள் மனம் உங்களையும் இறங்க சொல்லும். பெரும்பாலும் இறங்கியும் விடுவீர்கள்.
மனம் அப்போது கூறும் சில ஆலோசனைகள்
1) 100, 200 என்று வாங்காமல் ஒரு 25 வாங்கி பார்ப்போம்.
2)நஷ்டப்பட்டாலும் சிறிதளவுதான். ஆனால் நேற்று நமக்கு நல்ல இலாபம் வந்தது அல்லவா?
சில நேரங்களில் சந்தை choppy ஆக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். அத்தருணங்களில் உங்கள் முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் இருத்தலே நலம்
 வேட்டையராக விரும்புவர்களுக்கு முதல் பாடமும் அதுவே. உங்கள் மனதை வெற்றி கொள்ளுங்கள்.
அப்போது சாமியார்கள்தான் வணிகம் செய்ய வேண்டும் என்கிறீர்களா? சில உதாரணங்களுடன் தொடர்ந்து பார்ப்போம
 
 

 

 

Advertisements

Entry filed under: Hunter's Mind.

03.05.2008 04-05-2008

3 Comments Add your own

  • 1. m.saravanan  |  May 7, 2008 at 4:44 pm

    you are 100 persent right. plz keep it up.

  • 2. Batcha  |  July 6, 2008 at 11:33 am

    i accept with u sir

  • 3. naveen  |  August 30, 2008 at 10:07 am

    very helpful to me. thank you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: