Bulls, Bears, Monkeys and Tigers

May 1, 2008 at 5:09 pm 5 comments

முதலில் ஒரு கேள்வி.

பங்கு சந்தை என்பது சூதாட்டமா?

 

நான் பங்கு சந்தையில் முதன்முதலாக இறங்கும்போது (1996-97) நான் பார்த்த சக முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அப்போது தின வணிகம் பெருமளவில் தமிழ்நாட்டில் இல்லை.

ஆனால் ஊக வணிகம் பெருமளவில் விளையாடியது. அதை நம்பி “மன்னார் கம்பெனி” களை நிறைய வாங்கி நஷ்டப்பட்டார்கள்.
“சார்,  இந்த விலையில So and So Company வாங்குங்க. இன்னும் ஒரு மாசத்தில அவன் எங்கேயோ போக போறான்”.
உண்மை. காணாமலே போனது.
 இப்போதைய முதலீட்டாளர்களில் பலர் தற்போதைய காளை சந்தையை நம்பி ( ஆகஸ்ட் 2007 முதல்) இறங்கியுள்ளனர்.  அவர்கள் பங்கு சந்தையை  Fast Food மாதிரி பார்க்கின்றார்கள்.  ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டின்போது எத்தனையோ ஆயிரம்  புதிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இணைந்தார்கள்.  அவர்களில் பெரும்பான்மையோர் ( நான் பார்த்தவரை) ரு.450க்கு பங்கு  வெளியிட்டில் பெற்று பங்கு சந்தையில் பட்டியலிடும்  தினமே ரு.800 அல்லது ரு.1000-ல் விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் விண்ணப்பம் அனுப்பினர்.

ஊடகங்களும்  தங்கள்  Recommendations ஒரு மாத காலம் முதல் ஆறு மாத காலம் வரை கொடுக்கின்றார்கள். 
டிசம்பர் 2007-ஆம் மாத வணிக ஊடகங்களின் பதிவுகளையும் சனவரி 2008 மாத வணிக ஊடகங்களின் பதிவுகளையும் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு முரண்பாடு தெரியும். 

  

காளை தெரியும். கரடி தெரியும். குரங்கு? ஆம். குரங்கு கூட பங்கு சந்தையில் உண்டு.  நம் மனதில் உள்ளது.  ஒரு பங்கினை வாங்கி விற்கும்போது நம் மனதில் குரங்கின் லீலைகளை  நாம் காணலாம்.

 இது சரியான விலைதானா?
 இப்போ விற்கலாமா?
 பத்து நிமிடம் கழித்து விற்றால் இன்னொரு 5 பர்சென்ட் ஏறுமோ?
 போச்சு. நல்லா மாட்டிக்கிட்டேன்.

 

 குரங்கின் லீலைகளையும், புலியின் வேட்டை நுட்பங்களையும் போக போக இப்பகுதியில் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் :
“ஆம், நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பும் பட்சத்தில்.”

Advertisements

Entry filed under: Hunter's Mind.

02.05.2008 03.05.2008

5 Comments Add your own

  • 1. m.saravanan  |  May 7, 2008 at 4:49 pm

    today only i saw ur site. ur words are impressed me. thank you

  • 2. Viswa  |  July 6, 2008 at 8:52 am

    Very useful information.. Thank you

  • 3. Batcha  |  July 6, 2008 at 11:30 am

    its really good info

  • 4. naveen  |  August 30, 2008 at 10:04 am

    அற்புதமாக எழுதுகிறிர்கள். மிக்க நன்றி.

  • 5. Anonymous  |  August 21, 2014 at 10:41 am

    மிக அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: