Deccan Aviation II

April 27, 2008 at 9:26 am 1 comment

தொலை தொடர்பு துறையின் அசுர வளர்ச்சியை போல விமான போக்குவரத்து துறையும் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.

 இத்துறையில் உள்ள முக்கிய குழுமங்கள்

1) ஜெட் ஏர்வேஸ்

2) டெக்கான் ஏவியேஷன்

3) ஸ்பைஸ் ஜெட்

4) இந்தியன் ஏர்லைன்ஸ் ( பங்கு வெளியிடப்படவில்லை)

 

 இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியிடப்படவில்லை என்பதால் அதை தற்சமயம் விட்டுவிடுவோம்.
மேலே குறிப்பிட்ட குழுமங்களில்  Market Leader என்றால் ஜெட் ஏர்வேஸ் தான். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்களில் டெக்கான் ஏவியஷன் சரியான போட்டியை கொடுக்கும். கடைசி காலாண்டு அறிக்கைகளில் அதனுடைய வளர்ச்சி தெரிகின்றது.  அதனுடைய நஷ்டத்தை வெகுவாக குறைத்து வருகின்றது.  ஆம், டெக்கான் ஏவியேஷன் மார்ச் 2008 ஆண்டு காலாண்டு அறிக்கை வரை நஷ்டத்தில் தான்  நடந்து வருகின்றது. 

      முன்று விமானப் படை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமம் “குறைந்த கட்டணத்தில்  விமானப் பயணம்” என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.(ஒபனிங்லா நல்லாதான் இருந்திருச்சி, பினிஷீங்தான் மாறிடுச்சி)  லாபமிகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதைகளில் ( டெல்லி-மும்பை, மும்பை-கல்கத்தா, மும்பை-சென்னை) மட்டுமே முதலில் இயங்கி வந்தது. பின்னர் படிப்படியாய் மற்ற நகரங்களையும் இணைத்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் இரண்டாமிடம் பெற்றது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் திரு விஜய் மல்லையா இக்குழுமத்தின் 20 சதவித பங்குகளை வாங்கி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.  ஏனெனில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ்-ன் கொள்கையே டெக்கான் ஏவியேஷனின் கொள்கைக்கு நேர் எதிர்.  இக்குழுமத்தின்  Vice-Chairman ஆக தற்போது திரு விஜய் மல்லையா இருக்கின்றார். கூடிய விரைவில் கிங் பிஷர் டெக்கான் ஏவியேஷனை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் (நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது. அதுவும் ஒரு formality  என்றுதான் நினைக்கின்றேன்). பெயர் மாற்றம் பற்றிகூட ஆலோசனை நடந்து வருகின்றது.

 

 இந்திய விமான ஆணையம் பத்து வருடங்களுக்கு உள்நாட்டு சேவை புரிந்த குழுமங்களுக்கு மட்டுமே அயல்நாட்டு பயண பாதைகளை தருவதாக விதி அமைத்துள்ள்து.  கூடிய விரைவில் டெக்கான் ஏவியேஷனுக்கு லாபம் தரும் அயல்நாட்டு பாதைகளை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்ததால் மிக சிறப்பான மாற்றங்களை இக்குழுமம் பெற்றுள்ளது.
1) விளம்பரம்

2) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை

3) அழகிய விமான பணிப்பெண்கள் – இத்தகவல் மட்டும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

 

தற்போதைய பங்கு சந்தை சூழலில் இப்பங்கினை :ரு 75 – 90 க்கிடையில் வரும்போது வாங்கினால் நல்ல முதலீடாக அமைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது நான்கு வருடங்களாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.  டிவிடெண்ட் ஏதும் இக்குழுமம் இதுவரை கொடுத்ததில்லை. இன்று நான்கு காலாண்டு அறிக்கைகள் வரை டிவிடெண்ட் வழங்கும் என எனக்கு தோன்ற வில்லை.
 இதன் போட்டியாளர்களை பற்றியும் பார்ப்போம்.
ஜெட் ஏர்வேஸ்

 இக்குழுமம் தான் தற்போதைய தனியார் சேவைகளில் முதலிடம் வகிக்கின்றது. இது தன் முதலிடத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது.  மேலும் அயல்நாட்டு விமானப் பாதைகளுக்கும் அனுமதி பெற்றுள்ளது.  சகாரா ஏர்லைன்ஸ் தன்னுடன் இணைத்து ஜெட் லைட் என பெயர் மாற்றம் செய்துள்ளது.  சகாரா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் இந்நிறுவனத்தின் வரக்கூடிய காலாண்டு அறிக்கையிலும் பெரிய அளவில் லாபம் காட்ட இயலாது என நினைக்கின்றேன்.

 

 இக்குழுமத்திற்கும் டெக்கான் ஏவியேஷனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனில் முழு வளர்ச்சி அடைந்த புலிக்கும், புலிக் குட்டிக்கும் உள்ளதுதான். இப்பகுதியின் தலைப்பிற்கேற்ப நான் புலிக்குட்டிகளையே பற்றியே எழுத உள்ளேன்.

 

ஸ்பைஸ் ஜெட்

 இதுவும் கூட நல்ல வளர்ச்சியடைய போகும் விமான போக்குவரத்து சேவை குழுமம். ஆனால் வருங்காலத்தில் இக்குழுமத்தை  இதனுடைய போட்டியாளர்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என நான் நினைக்கின்றேன்.

 

 இந்தியன் ஏர்லைன்ஸ்

  பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இருந்தாலும் இது ஒரு அரசு நிறுவனம்.  இதன் பங்களிப்பினை சாதாரணமாக எடைபோட இயலாது.  ஆனால் அரசு நிறுவனம் என்ற தகுதியே  இதன் சாதகம் மற்றும் பாதகம் எனலாம்.

 

 இக்கட்டுரையில் டெக்கான் ஏவியேஷன் குழுமத்தை பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே தந்துள்ளேன்.  இக்குழுமத்தை பற்றிய  Technical Details அனைத்தையும் நீங்கள்  www.bseindia.com, www.nseindia.com போன்ற தளங்களில் அறிந்து கொள்ளலாம்.  ஒரு குழுமத்தில் நீண்டகாலமுதலீடு செய்யும்போது   Company Profile, History போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். 

 திரு விஜய் மல்லையா-வின் வியாபார யுக்திகள் பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கின்றேன்.
      அதுபோன்று இந்திய குழுமங்களின் தலைமை அதிகாரிகளின் சாதனைகள், வியாபார யுக்திகள் பற்றியும்  எழுதலாம் என்று இருக்கின்றேன்.  அதற்கு முன் உங்களின் எண்ணங்களை பற்றி அறிய விரும்புகின்றேன்.

 இக்கட்டுரையை பற்றிய உங்கள் எண்ணங்களையும்  தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.  

 

 

Advertisements

Entry filed under: Tiger Cubs. Tags: .

Deccan Aviation 30.04.2008

1 Comment Add your own

  • 1. Batcha  |  June 21, 2008 at 1:28 pm

    sir plz update

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2008
M T W T F S S
    May »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: