Archive for April 24, 2008
Bear’s Footsteps
பெளர்ணமி. காடு. பெரும் புதரின் ஒரு புறம் நீங்கள். மறுபுறம் உலவி கொண்டிருக்கும் ஒரு புலி.
உங்கள் துப்பாக்கியில் ஒரு தோட்டாதான். என்ன செய்ய போகிறீர்கள்?
இத்தளத்தில் நம் பங்கு சந்தை குறித்த என்னுடைய புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். சில பங்குகள் பற்றிய என்னுடைய விரிவான பார்வையையும்தான். தின வர்த்தகம் குறித்து தற்போது எழுதும் உத்தேசமில்லை.
தற்போதைய சூழலில் கரடிகள் குளிர்கால துாக்கத்திலிருந்து எழுந்து விட்டன என்றுதான் நான் நினைக்கின்றேன்.
நாளைய தினம் நம் பங்கு சந்தையை பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான நாள்.
கையிருப்பிலுள்ள பங்குகளை விற்று ரொக்கம் வைத்திருப்பவர்களுக்கு சந்தை சரிந்தால் தங்க வெள்ளி. இதற்கு எதிர்மாறான நபர்களுக்கு கறுப்பு வெள்ளி. சந்தையில் இரண்டாம் வகை மனிதர்களே அதிகம் இருப்பதனால் கறுப்பு வெள்ளி, திங்கள் என்பவை நிரந்தரம் பெற்று விடுகின்றன.
சந்தையை பொறுத்த மட்டில் அது ஒரு சாதாரண வெள்ளி கிழமை.
நல்லது. முதலில் கேட்ட கேள்விக்கு பதில்.
தேர்ந்த வேட்டைகாரரும், அனுபவமில்லாத வேட்டைகாரரும் வேட்டையை தவிர்த்து விடுவார்கள். காரணம், முதலாமவருக்கு அனுபவம், பிந்தையவருக்கு பயம்.
தேர்ந்த வேட்டைகாரர் என நம்பி கொண்டிருப்பவர்கள் மட்டுமே புலியின் நடையை கவனித்து ஒரு Pattern உருவாக்கி வேட்டையாட முயன்று தோற்று அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள்.
Recent Comments