Posts Tagged Tiger Cubs
Deccan Aviation II
தொலை தொடர்பு துறையின் அசுர வளர்ச்சியை போல விமான போக்குவரத்து துறையும் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.
இத்துறையில் உள்ள முக்கிய குழுமங்கள்
1) ஜெட் ஏர்வேஸ்
2) டெக்கான் ஏவியேஷன்
3) ஸ்பைஸ் ஜெட்
4) இந்தியன் ஏர்லைன்ஸ் ( பங்கு வெளியிடப்படவில்லை)
இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியிடப்படவில்லை என்பதால் அதை தற்சமயம் விட்டுவிடுவோம்.
மேலே குறிப்பிட்ட குழுமங்களில் Market Leader என்றால் ஜெட் ஏர்வேஸ் தான். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்களில் டெக்கான் ஏவியஷன் சரியான போட்டியை கொடுக்கும். கடைசி காலாண்டு அறிக்கைகளில் அதனுடைய வளர்ச்சி தெரிகின்றது. அதனுடைய நஷ்டத்தை வெகுவாக குறைத்து வருகின்றது. ஆம், டெக்கான் ஏவியேஷன் மார்ச் 2008 ஆண்டு காலாண்டு அறிக்கை வரை நஷ்டத்தில் தான் நடந்து வருகின்றது.
முன்று விமானப் படை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமம் “குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்” என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.(ஒபனிங்லா நல்லாதான் இருந்திருச்சி, பினிஷீங்தான் மாறிடுச்சி) லாபமிகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதைகளில் ( டெல்லி-மும்பை, மும்பை-கல்கத்தா, மும்பை-சென்னை) மட்டுமே முதலில் இயங்கி வந்தது. பின்னர் படிப்படியாய் மற்ற நகரங்களையும் இணைத்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் இரண்டாமிடம் பெற்றது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் திரு விஜய் மல்லையா இக்குழுமத்தின் 20 சதவித பங்குகளை வாங்கி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார். ஏனெனில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ்-ன் கொள்கையே டெக்கான் ஏவியேஷனின் கொள்கைக்கு நேர் எதிர். இக்குழுமத்தின் Vice-Chairman ஆக தற்போது திரு விஜய் மல்லையா இருக்கின்றார். கூடிய விரைவில் கிங் பிஷர் டெக்கான் ஏவியேஷனை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் (நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது. அதுவும் ஒரு formality என்றுதான் நினைக்கின்றேன்). பெயர் மாற்றம் பற்றிகூட ஆலோசனை நடந்து வருகின்றது.
இந்திய விமான ஆணையம் பத்து வருடங்களுக்கு உள்நாட்டு சேவை புரிந்த குழுமங்களுக்கு மட்டுமே அயல்நாட்டு பயண பாதைகளை தருவதாக விதி அமைத்துள்ள்து. கூடிய விரைவில் டெக்கான் ஏவியேஷனுக்கு லாபம் தரும் அயல்நாட்டு பாதைகளை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்ததால் மிக சிறப்பான மாற்றங்களை இக்குழுமம் பெற்றுள்ளது.
1) விளம்பரம்
2) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை
3) அழகிய விமான பணிப்பெண்கள் – இத்தகவல் மட்டும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.
தற்போதைய பங்கு சந்தை சூழலில் இப்பங்கினை :ரு 75 – 90 க்கிடையில் வரும்போது வாங்கினால் நல்ல முதலீடாக அமைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது நான்கு வருடங்களாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். டிவிடெண்ட் ஏதும் இக்குழுமம் இதுவரை கொடுத்ததில்லை. இன்று நான்கு காலாண்டு அறிக்கைகள் வரை டிவிடெண்ட் வழங்கும் என எனக்கு தோன்ற வில்லை.
இதன் போட்டியாளர்களை பற்றியும் பார்ப்போம்.
ஜெட் ஏர்வேஸ்
இக்குழுமம் தான் தற்போதைய தனியார் சேவைகளில் முதலிடம் வகிக்கின்றது. இது தன் முதலிடத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது. மேலும் அயல்நாட்டு விமானப் பாதைகளுக்கும் அனுமதி பெற்றுள்ளது. சகாரா ஏர்லைன்ஸ் தன்னுடன் இணைத்து ஜெட் லைட் என பெயர் மாற்றம் செய்துள்ளது. சகாரா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் இந்நிறுவனத்தின் வரக்கூடிய காலாண்டு அறிக்கையிலும் பெரிய அளவில் லாபம் காட்ட இயலாது என நினைக்கின்றேன்.
இக்குழுமத்திற்கும் டெக்கான் ஏவியேஷனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனில் முழு வளர்ச்சி அடைந்த புலிக்கும், புலிக் குட்டிக்கும் உள்ளதுதான். இப்பகுதியின் தலைப்பிற்கேற்ப நான் புலிக்குட்டிகளையே பற்றியே எழுத உள்ளேன்.
ஸ்பைஸ் ஜெட்
இதுவும் கூட நல்ல வளர்ச்சியடைய போகும் விமான போக்குவரத்து சேவை குழுமம். ஆனால் வருங்காலத்தில் இக்குழுமத்தை இதனுடைய போட்டியாளர்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என நான் நினைக்கின்றேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ்
பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இருந்தாலும் இது ஒரு அரசு நிறுவனம். இதன் பங்களிப்பினை சாதாரணமாக எடைபோட இயலாது. ஆனால் அரசு நிறுவனம் என்ற தகுதியே இதன் சாதகம் மற்றும் பாதகம் எனலாம்.
இக்கட்டுரையில் டெக்கான் ஏவியேஷன் குழுமத்தை பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே தந்துள்ளேன். இக்குழுமத்தை பற்றிய Technical Details அனைத்தையும் நீங்கள் www.bseindia.com, www.nseindia.com போன்ற தளங்களில் அறிந்து கொள்ளலாம். ஒரு குழுமத்தில் நீண்டகாலமுதலீடு செய்யும்போது Company Profile, History போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
திரு விஜய் மல்லையா-வின் வியாபார யுக்திகள் பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கின்றேன்.
அதுபோன்று இந்திய குழுமங்களின் தலைமை அதிகாரிகளின் சாதனைகள், வியாபார யுக்திகள் பற்றியும் எழுதலாம் என்று இருக்கின்றேன். அதற்கு முன் உங்களின் எண்ணங்களை பற்றி அறிய விரும்புகின்றேன்.
இக்கட்டுரையை பற்றிய உங்கள் எண்ணங்களையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
1 comment April 27, 2008
Deccan Aviation
கி பி 1980 ஆண்டிகளின் ஆரம்பத்தில் விமான பயணம் என்பது பெருத்த செலவாகவும், மகத்தான சாதனையாகவும் இருந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். தலையின் பின் ஒளி வட்டம் இருக்கும். அவர்களின் பயண அனுபவங்களை கேட்க எப்போதும் ஒரு கூட்டம் பின்னால் அலையும்.
“முதல்ல ரெண்டு செட் பஞ்ச் கொடுப்பான். காதுல ரெண்டும் முக்கில ரெண்டும் வைச்சுகனும்.”
1990 ஆண்டுகளின் இறுதியில் நாம், இந்தியர்கள், ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்து கொண்டோம். நேர மேலாண்மை.
2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிரபல நிறுவனத்தின் வணிக நிருவாகி கூறுகின்றார்
” இரண்டு குழுமங்களை இணைப்பதன் தொடர்பாக எடுக்க வேண்டிய இறுதி முடிவினை எடுக்க எனக்கு 18 மணிநேரம் பிடித்தது. என் மனைவியை விவாக ரத்து செய்வது தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவினை இன்னும் 28 நிமிடங்களில் நான் எடுக்க வேண்டிய நிலையில் தள்ளப் பட்டேன். நான் கடைப்பிடித்து வரும் நேர மேலாண்மையால் என்னால் இரு முடிவுகளும் உரிய நேரத்தில் எடுக்கப் பட்டன.”
நிறுவனங்கள் பெருகின. நிருவாகிகளும்தான். நேர மேலாண்மை காரணமாக வான்வழி போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது.
உள்நாட்டிலும் விமான நிலையங்கள் அதிகரித்தன. முதல் தர நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் தர நகரங்களிலும் விமான போக்குவரத்து அதிகரிக்கலாயிற்று.
“காடாம்புலியுர் பக்கத்திலிருக்கும் 25 ஏக்கர் புறம்போக்கு நிலத்துல பண்ருட்டி நகராட்சி சார்பாக ஏர்போர்ட் கட்ட டெண்டரை ………..கம்பெனிக்கு வுட ஏகமனதாக முடிவெடுக்கப்படுகிறது.
இதை நான் வழிமொழிகின்றேன்.”
இது போன்ற தீர்மானங்களை சில வருடங்களில் நாம் பார்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.
விமான கட்டணங்களும் போட்டியின் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டன. சென்னை உள்ளுர் விமான நிலையம் எதிரே உள்ள கையேந்தி பவன்களில் இடியாப்பமும், பாயாவும் சாப்பிட்டுவிட்டு விமானத்தை பிடிக்க விரைக்கின்றார்கள்.
“I have a plane to catch”.
என்ற புகழ் பெற்ற வாக்கியம் நடைமுறை வாக்கியம் ஆயிற்று.
Part 1 of 2
Add comment April 25, 2008
Tiger Cubs
இப்பகுதியில் நான் அவ்வப்போது சில பங்குகள் மற்றும் துறைகள் பற்றிய என்னுடைய புரிதலை எழுதலாம் என்று இருக்கின்றேன்.
இப்பகுதியில் குறிப்பிடப்படும் பங்குகளை நீங்கள் உடன் வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மேலும் அவை பரிந்துரைகளும் அல்ல. ஒரு பங்கினை பற்றி என்னுடைய புரிதலே.
இப்பகுதியில் வரவிருக்கும் பங்கினுடைய EPS, Inline Growth, P/E, Bar Patterns, Candlestick patterns, Hockystick pattern, Matchstick pattern etc போன்ற Technical Details எழுத போவதில்லை. ஆரம்ப காலத்தில் அவைகள் எனக்கு அலர்ஜீயை ஏற்படுத்தியன.
தொழில்நுட்ப விவரங்கள் முக்கியம்தான். ஆனால் அத்தொழில்நுட்ப விவரங்கள் பற்றி ஊடகங்களில் அறிந்து, அந்த பங்கினை பற்றிய Commonsense Approach இல்லாமல் வாங்கும்போது சந்தை ஏற்ற இறக்கங்களில் வாங்குதல்-விற்றல் பற்றிய தெளிவான முடிவுகள் நம்மால் எடுக்க இயலாமல் போகலாம்.
இப்பதிவில் குறிப்பிடும் பங்குகள் அனைத்தும் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே. நீண்ட காலம் என்பது குறைந்தது நான்கு வருடங்கள் (கஷ்டந்தான் இல்ல), சரி, நாற்பது மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் முதலீடு பெருக வாய்ப்பு உண்டு.
குறைந்தது வங்கி வைப்பு சேமிப்பு வட்டியை விட அதிகமாக கிடைக்கும். ஆரம்ப காலத்தில் Intraday, Swing Trade போன்றவற்றில் இலாபம் வருவதை போல் தெரிந்தாலும் நீண்ட கால முதலீட்டில் வரும் consistency இவற்றில் இருக்காது.
அது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் உண்டு.
புள்ளி விவரங்களை கூடிய மட்டும் இப்பகுதியில் தவிர்க்க இயலுகிறேன்.
Ok, let’s sharpen our weapons. Targets coming…………………..
Add comment April 25, 2008