Posts filed under 'Tiger Cubs'
Ballarpur Industries II
ஒரு துறையை சார்ந்த பங்கினை வாங்கும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்துறையின் வளர்ச்சி பற்றிய விவரங்களை கண்டிப்பாக நாம் அறிந்து கொண்டாக வேண்டும். ஐந்து ஆண்டுகள் என்பது பங்கு சந்தையில் ஒரு குறிப்பிடதக்க காலம்.
இத்துறையை பற்றிய நீங்கள் மேற்கொண்டு அறிய வேண்டிய விவரங்கள் :
பாரசீகர்கள் காலத்தில் காகிதங்கள் தயாரிக்க சரி… சரி….. காகித கூழ் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன என தற்போது பன்னாட்டு தன்னார்வு நிறுவனங்கள் போராட்டக் கொடி துாக்கியுள்ளன.
சுற்றுசூழல் பிரச்சினை காரணமாக காகிதத்தின் பயன்பாடு குறைக்க அரசு பன்னாட்டு நிறுவனங்களால் வலியுறுத்தப்படலாம். ஆனால் அப்படிபட்ட சூழலில் நாட்டின் அனைத்து பகுதிகளும் wi-Fi ஆகியிருந்தால் மட்டுமே காகிதத்தின் பயன்பாடு குறைய கூடும். ஆனால் அதற்கு குறைந்தது 5 வருடங்கள் வரை வாய்ப்பு இல்லை. இப்பவே அங்க போராட்டம் ஆரம்பிச்சுட்டாங்க. ( Harry Potter புத்தக விஷயத்தில் நடந்தது). நம்ம நாட்டுக்கு வர இன்னும் ஐந்து வருடம் வரை ஆகும். காகித கூழ் தயாரிப்பதற்காக காடுகளை அழிக்கக் கூடாது என்று நம் நாட்டிலும் போராட்டம் ஆரம்பிக்கலாம்.
மாற்று ஏற்பாடுகளை இத்துறையில் உள்ள குழுமங்கள் மறுசுழற்சி (Recycling) முறையில் காகித உற்பத்தி ஆரம்பிக்கலாம். ஆனால் இவ்விஷயத்தில் யார் முந்திகொள்ள போகிறார்கள் என்பது இனிமேல் தான் தெரியும். எப்படியிருப்பினும் காகிதத்தின் பயன்பாடு நம் நாட்டில் வரும் வருடங்களில் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், சுற்று சூழல் பிரச்சினை (Environmental concern) என்பது இனிவரும் காலங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்க போகின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
சுற்றுசூழல் குறித்தும் தனியாக எழுதலாம் என்று உள்ளேன். வருங்காலத்தில் பங்கினை வாங்கி விற்கும் முடிவுவெடுக்க இதுவும் ஒரு காரணியாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
இத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் இது குறித்து தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய தங்களது ஆராய்ச்சி துறையினை (Research and Development Dept.) முடுக்கி விட்டுள்ளன.
இனி போட்டியாளர்களை பற்றி :
1. தமிழ்நாடு நியுஸ்பிரிண்ட்
நம்ம ஏரியா கம்பெனி. நல்ல விற்பனை. ஒவ்வொரு காலாண்டும் நல்ல வளர்ச்சி. தற்சமயம் இரண்டாமிடத்தில் உள்ளது. நிர்வாக மேலாண்மை நன்றாக உள்ளது. அரசு நிறுவனம். முக மதிப்பு ரு.10/-
2. J. K. பேப்பர்.
ஜே. கே. குழுமத்தில் ஒர் அங்கமான ஜே.கே. பேப்பர் தற்போது முன்றாமிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்திற்கு தீவிரமாய் முயற்சி செய்து வருகின்றது. முக மதிப்பு ரு.10/-. நீண்ட கால முதலீட்டிற்கு இக்குழுமமும் ஏற்றது. திறமையான மேலாண்மை. தமிழ்நாட்டில் கூட நல்ல விற்பனை முகவர்களை கொண்டிருக்கின்றது. தற்போது புத்தக மதிப்பை விட சந்தை விலை குறைவாக உள்ளது.
Add comment May 12, 2008
Ballarpur Industries
பத்து வருடங்களுக்கு முன் தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அறிக்கை தயார் செய்யும் போது ஏதோ ஒரு பேப்பரில் (பெரும்பாலும் டிம்மி சைஸ்) தயார் செய்து அனுப்புவார்கள்.
தற்போது தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் அறிக்கைகள் அனுப்பும்போது A4 பேப்பரில் மட்டுமே அனுப்ப வேண்டும் என கோரப்படுவதாக அறிகின்றோம். “காகிதமில்லா அலுவலகம் (Paperless Office)” என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகுதான் காகிதத்தின் உபயோகம் அரசு அலுவலகங்களில் அதிகரித்தது. பேப்பர் சைஸ் கடைநிலை ஊழியருக்கும் தெரிகின்றது. கடந்த ஐந்து வருடங்களாக பிரிண்டர்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.
தெருவிற்கு ஒரு ஜெராக்ஸ் ( இது ஒரு தனி காமெடி. தற்போது ஜெராக்ஸ் மெஷீன் என்று அழைக்கப்படுவது கேனான். கேனான் காப்பியர்களின் விற்பனை இந்தியாவில் ஜெராக்ஸ் காப்பியர்களை விட அதிகம்) கடை உள்ளது. டி டி பி கடைகளும் தான். அவற்றில் விற்பனையும் அமோகம் என தெரிகிறது. அதற்கேற்றார் போல் ஸ்டேஷனரி கடைகளும் பெருகியிருக்கின்றன. எப்படியிருப்பினும், இன்னும் சில வருடங்கள் வரை காகிதத்தின் உபயோகம் அதிகரிக்க செய்யுமே தவிர குறையாது.
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பலார்புர் இன்டஸ்ரியும் பேப்பர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. பேப்பர் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது முதலிடம் இக்குழுமம் தான். இமேஜ் பிராண்டு இவர்களுடையது தான்.
இக்குழுமம் தன்னுடைய அடுத்த போட்டியாளரை விட முன்று மடங்கு விற்பனை செய்து வருகிறது. நிகர இலாபமும் முன்று மடங்கு அதிகம்.
காகிதங்கள் உற்பத்தியில் உலகில் முதல் இருநுாறு குழுமங்களில் இந்தியா சார்பில் இக்குழுமம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.
கடைசி காலாண்டு அறிக்கை வரை இக்குழுமத்தின் விற்பனை சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. காகித உற்பத்தி துறையில் இருக்கும் இதன் முக்கிய போட்டியாளர்கள் :
1. தமிழ்நாடு நியுஸ்பிரிண்ட்
2. ஜே.கே. பேப்பர்
இன்னும் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் மேற்கண்ட இரு குழுமங்கள் மட்டுமே இன்னும் சில வருடங்களில் பலார்புர் குழுமத்திற்கு கடும் போட்டியை கொடுக்கக் கூடியவை. இக்குழுமங்களை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
பலார்புர் குழுமம் ரு 28-30 விலையில் வாங்கலாம். நீண்ட கால முதலீட்டிற்கானது. குறுகிய காலத்தில் ரு 50 தாண்டும் சாத்தியகூறு உள்ளது. குறைந்தது இரு வருடங்கள் வரை வைத்து இருக்கும் அளவு பொறுமை இருந்தால் நல்ல இலாபம் கொடுக்கக்கூடியது. இப்பங்கின் முக மதிப்பு ரு 2. தற்போது (9.5.08 ) புக் வேல்யுவைவிட குறைவாக சந்தை விலை உள்ளது. வருடா வருடம் குறைந்தது 30% (ரு .60) டிவிடென்ட் கிடைக்கும் என நம்பலாம்.
அடுத்த ஐந்தாண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி மற்றும் இதன் போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
Add comment May 12, 2008
Deccan Aviation II
தொலை தொடர்பு துறையின் அசுர வளர்ச்சியை போல விமான போக்குவரத்து துறையும் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.
இத்துறையில் உள்ள முக்கிய குழுமங்கள்
1) ஜெட் ஏர்வேஸ்
2) டெக்கான் ஏவியேஷன்
3) ஸ்பைஸ் ஜெட்
4) இந்தியன் ஏர்லைன்ஸ் ( பங்கு வெளியிடப்படவில்லை)
இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியிடப்படவில்லை என்பதால் அதை தற்சமயம் விட்டுவிடுவோம்.
மேலே குறிப்பிட்ட குழுமங்களில் Market Leader என்றால் ஜெட் ஏர்வேஸ் தான். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்களில் டெக்கான் ஏவியஷன் சரியான போட்டியை கொடுக்கும். கடைசி காலாண்டு அறிக்கைகளில் அதனுடைய வளர்ச்சி தெரிகின்றது. அதனுடைய நஷ்டத்தை வெகுவாக குறைத்து வருகின்றது. ஆம், டெக்கான் ஏவியேஷன் மார்ச் 2008 ஆண்டு காலாண்டு அறிக்கை வரை நஷ்டத்தில் தான் நடந்து வருகின்றது.
முன்று விமானப் படை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமம் “குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்” என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.(ஒபனிங்லா நல்லாதான் இருந்திருச்சி, பினிஷீங்தான் மாறிடுச்சி) லாபமிகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதைகளில் ( டெல்லி-மும்பை, மும்பை-கல்கத்தா, மும்பை-சென்னை) மட்டுமே முதலில் இயங்கி வந்தது. பின்னர் படிப்படியாய் மற்ற நகரங்களையும் இணைத்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் இரண்டாமிடம் பெற்றது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் திரு விஜய் மல்லையா இக்குழுமத்தின் 20 சதவித பங்குகளை வாங்கி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார். ஏனெனில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ்-ன் கொள்கையே டெக்கான் ஏவியேஷனின் கொள்கைக்கு நேர் எதிர். இக்குழுமத்தின் Vice-Chairman ஆக தற்போது திரு விஜய் மல்லையா இருக்கின்றார். கூடிய விரைவில் கிங் பிஷர் டெக்கான் ஏவியேஷனை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் (நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது. அதுவும் ஒரு formality என்றுதான் நினைக்கின்றேன்). பெயர் மாற்றம் பற்றிகூட ஆலோசனை நடந்து வருகின்றது.
இந்திய விமான ஆணையம் பத்து வருடங்களுக்கு உள்நாட்டு சேவை புரிந்த குழுமங்களுக்கு மட்டுமே அயல்நாட்டு பயண பாதைகளை தருவதாக விதி அமைத்துள்ள்து. கூடிய விரைவில் டெக்கான் ஏவியேஷனுக்கு லாபம் தரும் அயல்நாட்டு பாதைகளை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்ததால் மிக சிறப்பான மாற்றங்களை இக்குழுமம் பெற்றுள்ளது.
1) விளம்பரம்
2) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை
3) அழகிய விமான பணிப்பெண்கள் – இத்தகவல் மட்டும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.
தற்போதைய பங்கு சந்தை சூழலில் இப்பங்கினை :ரு 75 – 90 க்கிடையில் வரும்போது வாங்கினால் நல்ல முதலீடாக அமைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது நான்கு வருடங்களாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். டிவிடெண்ட் ஏதும் இக்குழுமம் இதுவரை கொடுத்ததில்லை. இன்று நான்கு காலாண்டு அறிக்கைகள் வரை டிவிடெண்ட் வழங்கும் என எனக்கு தோன்ற வில்லை.
இதன் போட்டியாளர்களை பற்றியும் பார்ப்போம்.
ஜெட் ஏர்வேஸ்
இக்குழுமம் தான் தற்போதைய தனியார் சேவைகளில் முதலிடம் வகிக்கின்றது. இது தன் முதலிடத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது. மேலும் அயல்நாட்டு விமானப் பாதைகளுக்கும் அனுமதி பெற்றுள்ளது. சகாரா ஏர்லைன்ஸ் தன்னுடன் இணைத்து ஜெட் லைட் என பெயர் மாற்றம் செய்துள்ளது. சகாரா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் இந்நிறுவனத்தின் வரக்கூடிய காலாண்டு அறிக்கையிலும் பெரிய அளவில் லாபம் காட்ட இயலாது என நினைக்கின்றேன்.
இக்குழுமத்திற்கும் டெக்கான் ஏவியேஷனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனில் முழு வளர்ச்சி அடைந்த புலிக்கும், புலிக் குட்டிக்கும் உள்ளதுதான். இப்பகுதியின் தலைப்பிற்கேற்ப நான் புலிக்குட்டிகளையே பற்றியே எழுத உள்ளேன்.
ஸ்பைஸ் ஜெட்
இதுவும் கூட நல்ல வளர்ச்சியடைய போகும் விமான போக்குவரத்து சேவை குழுமம். ஆனால் வருங்காலத்தில் இக்குழுமத்தை இதனுடைய போட்டியாளர்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என நான் நினைக்கின்றேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ்
பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இருந்தாலும் இது ஒரு அரசு நிறுவனம். இதன் பங்களிப்பினை சாதாரணமாக எடைபோட இயலாது. ஆனால் அரசு நிறுவனம் என்ற தகுதியே இதன் சாதகம் மற்றும் பாதகம் எனலாம்.
இக்கட்டுரையில் டெக்கான் ஏவியேஷன் குழுமத்தை பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே தந்துள்ளேன். இக்குழுமத்தை பற்றிய Technical Details அனைத்தையும் நீங்கள் www.bseindia.com, www.nseindia.com போன்ற தளங்களில் அறிந்து கொள்ளலாம். ஒரு குழுமத்தில் நீண்டகாலமுதலீடு செய்யும்போது Company Profile, History போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
திரு விஜய் மல்லையா-வின் வியாபார யுக்திகள் பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கின்றேன்.
அதுபோன்று இந்திய குழுமங்களின் தலைமை அதிகாரிகளின் சாதனைகள், வியாபார யுக்திகள் பற்றியும் எழுதலாம் என்று இருக்கின்றேன். அதற்கு முன் உங்களின் எண்ணங்களை பற்றி அறிய விரும்புகின்றேன்.
இக்கட்டுரையை பற்றிய உங்கள் எண்ணங்களையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
1 comment April 27, 2008