சித்தர் பாடலும், சீவக சிந்தாமணியும் சூப்பர் ஹீரோக்களின் சஞ்சலங்களும்
January 30, 2011 at 2:04 pm 9 comments
கேளடா, மானிடா, காதலெண்ணும் ஒரு கண்ணி
வெளியே சுற்றித் திரியும் ஒரு பன்னி,
வீணாக பெண்களை மனதில் எண்ணி
துடிக்கிறடா கனவில் உந்தன் ……………..
- தாடிச் சித்தரின் முழுமை பெறாத ஒரு பாடல், பழங்கால ஒலைச்சுவடியில் காணப்பட்டது. காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
உங்களில் பலருக்கு மாணவ பருவத்தை அறவே மறந்து போயிருக்கலாம். பள்ளிகளில் கூடப் படித்த பெண்களை தவிர கற்றவை அனைத்துமே மறந்து போயிருக்கலாம். அது நியாயம்தான். பரீட்சையின்போது நினைவுக்கு வராத ஒரு விடை பள்ளிக்கு வெளியே சென்றதும் நினைவு வரும் அனுபவம் அனைவரும் அடையும் ஒன்றே. ஆனால் ஒரு மழைக்கால இரவில் (ஒவ்வொரு பிரபல கதாசிரியருக்கும் உள்ள தனித்துவம் போல, எனக்கு மழைக்கால இரவு) உறக்கம் வராத நேரத்தில் எனக்கு தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் யாவை என்ற கேள்விக்கு பதில் பளீரென இருபது ஆண்டுகளுக்கு பிறகு நினைவு வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. சீவகன் என்னும் இளவரசனே கதை நாயகன். இந்த இளவரசன் எவ்வாறு அரசானாகிறான் என்பதுதான் இக்காப்பியத்தின் கதை. சுப முடிவுள்ள காப்பியம்.
சித்தர்கள் சொன்னார்கள் என தமிழகத்தில் நிறைய சொற்றொடர்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. சித்தர் பாடல்கள் எனவும் புத்தகங்கள் பல உள்ளன. உண்மையில் சித்தர்கள்தான் இவற்றை எழுதினார்களா என்பது முற்றிலும் நம்பிக்கை சார்ந்ததாகவே உள்ளது.
சீவகன் மாபெரும் வீரன். இளவசரனாக பிறந்தும் கர்வம் கிஞ்சித்தும் இல்லாதவன். பிறன்மனை நோக்காதவன். எட்டு மனைவிகள். வாரத்திற்கோ ஏழு நாட்கள்தான்.
சித்தர்களை யாரும் பார்த்ததில்லை என்பதால் இத்தகைய பாடல்களுக்கு பெரிய மரியாதை இருந்தது. இதுவே இப்பாடல்களின் நம்பகதன்மையை பெரிதும் சந்தேகத்துள்ளாகி விட்டது. அடாபுடாவென எழுதினால் சித்தர் பாடல் என்ற கட்டுக்கோப்பினை உருவாக்கி புதிய பாடல்கள் இதில் வந்து கலந்து விட்டன.
குதிரையின் மீதேறி கடும் துரத்தலுக்கு பிறகு வனக் கொள்ளையர் கும்பலை காவல் துறையினரிடம் ஒப்படைத்த முகமூடி வீரர் மாயாவி ஆயாசத்துடன் தன் குகைக்கு திரும்பி, தன் உதவியாளரிடம் தவிடு ஒத்தடத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இன்னும் சில நாட்களுக்கு உள்ளாடை அணிவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டார்.
கோதம் நகரில் தன் நண்பி மேரி ஜேனுடன் சரசத்தில் ப்ரூஸ் வாய்னே இருந்தபோது அவரின் ஜன்னல் வழியே வவ்வால் படம் போட்ட விளக்கு எரிய ஆரம்பித்தது. “தாயோளி, எந்த நேரத்தில் கூப்டறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை” என அலுத்துக் கொண்டே தன்னுடைய சீருடையை அணிய விரைந்து சென்றார். சீருடை போடுறவன்களை இனிமே சிநேகம் பண்ணிக்கக் கூடாது என முடிவு செய்த மேரி ஜேன் குப்புற படுத்துக் கொண்டாள்.
மிஸ்டர் பன்டாஸ்டிக் என்றழைக்கப்படுகிற ரீட் ரிச்சர்ட்ஸ் தன்னை யாரும் கவனிக்கவில்லை என ஊர்ஜிதம் செய்துக் கொண்டு அந்த மூத்திர சந்தில் நுழைந்தார். கதவிலக்கம் 58-ஐ நெருங்கிய அவர் கதவை தட்ட, கதவும் திறந்தது. கதவை திறந்தவனுக்கு வயது நாற்பத்தியெட்டு இருக்கலாம். கூட இரண்டோ, மூன்றோ குறையலாம். அவன் பார்வையில் கேள்வி இருந்தது. “”உடும்பு தைலம் ஒரு பாட்டில் அவசரமாக வேண்டும்" என்று கேட்ட ரீட் ரிச்சர்ட்ஸ் குரலில் கெஞ்சல் இருந்தது. நாளைய தினம் அவரின் கல்யாண நாள்.
பின் குறிப்பு இந்த பதிவு நான்-லீனியர் என்ற முறையை பின்பற்றி எழுதப்பட்டது. இதை நீங்கள் படித்து ஏதாவது புரிந்துக் கொண்டால் இதை முதன் முறையாக எழுதிய என்னுடைய தவறுதான். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாது என உறுதியளிக்கிறேன்.
“சீவக சிந்தாமணி” என்று வார்த்தையை கூகிளில் தேடி இந்த பதிவை கண்டடைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Entry filed under: இலக்கியம், நகைச்சுவை, Non-linear Writing. Tags: .
1.
shankar visvalingam | January 30, 2011 at 2:22 pm
நண்பரே,
புத்தக கண்காட்சிக்கு நீங்கள் சென்று அந்த புத்தகத்தை வாங்கிப் படித்த நாளிலிருந்து உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது.
வேகத்தில் ஒரு எழுத்தை மாற்றினால் நீங்கள் வாங்கிப்படித்த அந்த புத்தகத்தின் பெயர் தெரிய வரும்.
நான் லீனியர் மற்றும் நான் லீனியர் அல்ல வகை எழுத்துக்களில் சீவக சிந்தாமணி போன்ற பழம் பெரும் காப்பியத்தையும் சமகால சூப்பர்நாயக [ர்களின்] வாழ்வின் குறுக்கு வெட்டு பார்வையையும் கொண்டு மாறுபட்ட தரிசனமாக, நிழலின் உள்ளே ஒட்டியிருக்கும் ஒளியாக பதிவைப் வடித்திருக்கிறீர்கள்.
சீவகசிந்தாமணியின் வரிகளினுள் ஓடும் மாய உண்மைகளின் பிம்பங்களை தெளிந்தோடும் நீரின் பிம்ப பிரதிபலிப்புக்களாக வரிகளினுள் வழிந்தோடச் செய்திருக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
அனுதாபங்களிற்கு நன்றி.
2.
sharehunter | January 30, 2011 at 2:33 pm
ஷங்கர்,
நன்றி, காலமென்னும் பாலத்தில் கோலம் போட நினைத்தவனின் ஒரு முயற்சியாக இதை சமகால இலக்கியர்கள் கருத வேண்டுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தை நான் படித்ததில்லை என்பதை அதிகாரபூர்வமாக இங்கே பதிவு செய்கிறேன். இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுவது ஒரு நல்ல மனிதருக்கு அழகல்ல.
3.
Karthikeyan G | February 1, 2011 at 7:25 pm
Superuu..
)))
புத்தக கண்காட்சியின்போது ‘கடல்காற்று’ பதிப்பகத்தில் இருந்த ‘சீவகசிந்தாமணி’ புத்தகத்திலிருந்து 27-36 வரையான பக்கங்களையும், ‘சித்தர் பாடல்கள்’ என்ற புத்தகத்திலிருந்து 45-56 வரையான பக்கங்களையும் யாரோ நைசாக கிழித்து சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அது நீங்களாக இருக்க கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
)
4.
sharehunter | February 1, 2011 at 7:31 pm
@ Karthi,
தீடிரென ஆளையே காணோம். இதுக்குதான் விஜய் படமெல்லாம் வரையக்கூடாதுன்றது. ட்விட்டருல ரகளை பண்ணீங்கன்னு ஆளை துரத்திட்டாங்கன்னு நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன்.
அடுத்தது கவிதைதான். விடறதா இல்ல.
5.
KARTHIKEYAN G | February 1, 2011 at 10:49 pm
/ ட்விட்டருல ரகளை பண்ணீங்கன்னு ஆளை துரத்திட்டாங்கன்னு நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன்./
)))))
அது ஒன்னுமில்லைங்க.. சின்ன பிரச்சனைதான்.. யாரோ டுவிட்டர் ஓனரோட பொன்னு கைய புடுச்சு இழுத்துருக்காங்க.. அவரு அது நாந்தானு தப்பா நெனச்சுட்டாரு.. அப்புறம் பின்னால நாட்டாம இந்த பிரச்சனைல தலையிட்டு ஒரு வழியா சுமூகமா முடிஞ்சுது..
6.
Rafiq Raja | February 2, 2011 at 3:29 pm
வேட்டையரே, புத்தக கண்காட்சி சென்று வந்ததிலேயிருந்து சம்பந்தா சம்பந்தா இல்லாமல் பேசி கொண்டு அலைவதாக பாண்டி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது… இப்போது பதிவுலகத்திலும் அது தொடர்வதை பார்த்தால், நிலமை ரொம்பவும் மோசம் தான் போல.
லீனியர், நான லீனியர் என்று என் சிறு அறிவு பெட்கத்திற்கு புரியாத வார்த்தைகளை தெளித்துள்ளீர்கள்.. அனேகமாக உமக்கு எழுதும் போது இருந்த எண்ணத்தை, விட ஷங்கருக்கு தான் படிக்கும் போது அதிக அர்த்தங்கள் கிட்டியிருக்கின்றன, என அவரது கருத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மீ த எஸ்கேப்
7.
sharehunter | February 2, 2011 at 10:10 pm
@rafiq,
நான்-லீனியர் எழுத்துகளை புரிந்துக் கொள்ள ஒரு சிறப்பான உத்தி உள்ளது. எக்காரணம் கொண்டும் தலைப்பை படிக்காதீர்கள்.
//
சீவகசிந்தாமணியின் வரிகளினுள் ஓடும் மாய உண்மைகளின் பிம்பங்களை தெளிந்தோடும் நீரின் பிம்ப பிரதிபலிப்புக்களாக வரிகளினுள் வழிந்தோடச் செய்திருக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
//
இந்த வரிகளுக்கு அர்த்தம் ஷங்கருக்கும், எனக்கும் தெரியாது.
8.
Prabakaran | March 10, 2011 at 4:35 pm
blog na enna epadi creat panuvathu .naan niraya blog parthen evalavu tamil web sitea naan aachiriyathil kankalai moodave illai ……
9.
प्रिय कुमारा | January 29, 2012 at 3:15 am
mudiyala, i was cheated