22-06-2009
June 22, 2009
காளைகளின் ஒட்டத்திற்கு இந்த வாரம் தடைபோடுமென நினைக்கிறேன். சில முக்கிய நிகழ்வுகள் இந்த வாரம் நடக்கவுள்ளன.
முதலில் நம் நாட்டில். நிதிநிலை அறிக்கை. இன்னும் நாட்கள் இருக்கிறது என்றாலும் சந்தை மெள்ள மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல் விலை ஏறும் பட்சத்தில், பண வீக்க விகிதம் மீண்டும் 1 சதவீதத்திற்கு மேல் முடிய வாய்ப்புள்ளது.
சில முக்கிய அமைச்சகத்திலிருந்து முக்கிய முடிவுகள் வெளிவர உள்ளன. அவைகள் சந்தையை கீழே கொண்டுச் செல்லவே வாய்ப்புள்ளன.
Futures & Options இந்த வாரமே முடிவடைய உள்ளது. சந்தையின் ஊசலாட்டத்தை இது அதிகரிக்கும்.
சந்தையானது 3500 என்ற நிலையில் நிலைபெறுமென தற்போதைய டெக்னிகல் தெரிவிக்கிறது. அதிலிருந்து இறங்கவே வாய்ப்பு தற்சமயம் அதிகமாக உள்ளது. என்னதான் புதிய அரசாங்கம் முழு மெஜாரிட்டியுடன் இருந்தாலும், அதன் கொள்கைகள் பலனளிக்க இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளாவது ஆகும்.
பாரதீய ஜனதா கட்சியில் ஏற்பட்டு வரும் உள்கட்சி பூசலினால், மத்திய அரசாங்கம் சில துணிகர முடிவுகளை நிதி நிலை அறிக்கையில் எடுக்கவே வாய்ப்புள்ளது. எதிர்க்க எதிர்க்கட்சிகள் (குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள்) இல்லாதது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். சொல்லப்போனால் இப்போது அவர்கள் எடுக்கும் சில முடிவுகளே இந்தியாவின் அடுத்த ஐந்து வருடங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் என நான் நம்புகிறேன்.கண்டிப்பாக ஆரம்பத்தில் அவை சந்தைக்கு கசப்பு மாத்திரைகளாகவே இருக்கும்.
மிக கவனமாக வணிகம் செய்ய வேண்டிய வாரம். கவனமாக இருங்கள்.
சந்தையை பாதிக்கும் முக்கிய செய்தி ஏதேனும் இருந்தாலொழிய தினம் எழுதுவதில் பலனில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம்.
Have a happy week!
Entry Filed under: Market Analysis. .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Rafiq Raja | June 22, 2009 at 5:06 pm
// இப்போது அவர்கள் எடுக்கும் சில முடிவுகளே இந்தியாவின் அடுத்த ஐந்து வருடங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் என நான் நம்புகிறேன். //
நானும் அந்த முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நிரந்தரமில்லா சந்தைக்கு அவை சற்று ஆறுதலை தர கூடும்.
2.
பயங்கரவாதி டாக்டர் செவன் | June 24, 2009 at 4:04 pm
//சில முக்கிய அமைச்சகத்திலிருந்து முக்கிய முடிவுகள் வெளிவர உள்ளன.//
முடிவுகள் கூட முக்கினால் தான் வெளிவருமா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
3.
Surya | June 25, 2009 at 1:06 pm
நண்பர் ‘கிங் விஸ்வா’ மூலம் தங்கள் வலை அறிந்தேன். மகிழ்ச்சி.
தாங்கள் சொல்வது போல் நிதி நிலை அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
பட்ஜெட்டிற்கு பிறகு Infrastructure பங்குகள் விலை கவனிக்கபடவேண்டியது என்பது எனது அனுமானம்.
நன்றி.
வாழ்த்துகள்.