Archive for May 15th, 2009

15-05-2009

      தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன.  சந்தையோ பெரிய அளவில் ரீயாக்ட் எதுவும் செய்யவில்லை.  காங்கிரஸ் அல்லது பிஜேபி இருவரில் ஒருவரே மெஜாரிட்டியை பெறுவார்கள் எனவும், மூன்றாவது அணியானது சிதறி இவர்களில் யாரையாவது ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வார்கள் எனவும் கருத்துக் கணிப்புகளில் காணப்படுகின்றன.

       எது எப்படியோ, எந்த கட்சி ஜெயித்தாலும் தனியாக 200 இடங்களை வென்றாலே நமது பங்கு சந்தை மேலேறி விடும்.  நாளை பார்க்கலாம்.   எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.  மூன்றாவது அணி என்று சொல்லிக் கொள்ளும் அணியைத் தவிர.  சந்தையின் மிகப் பெரிய பயமே இதுதான். அவை ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என கடைசிக் கட்ட தேர்தல்களின் போதே தெரிந்து விட்டதால் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை என தோன்றுகிறது.

     இன்றைய உலக சந்தைகள் ஏற்றத்துடன் இருக்கின்றன.  நமது சந்தை இன்றும் ஊசலாட்ட சந்தையாகவே காணப்படும்.  நாளைய முடிவினை வைத்து தொடர்ந்து அடுத்த வாரமும் தொடரலாம்.  பெரும்பாலும் ஞாயிறன்றே எக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிந்துவிடும் என நம்புகிறேன்.

      இன்றைய சந்தையானது ஆரம்பத்தில் ஏற்றத்தில் துவங்கி பின்னர் இறங்க வாய்ப்புண்டு.  ஊசலாட்டம் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன்.  விலகியிருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது.

Read Disclaimer.

Good Morning to you all!

2 comments May 15, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2009
M T W T F S S
« Apr   Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031