Archive for May 14th, 2009

14-05-2009

     ஒருவழியாக தேர்தல் முடிந்து விட்டது.  இன்றும், நாளையும் சந்தை வதந்திகளால் அலைகழிக்கப்படும் நிலை இருக்கிறது.

      நிலையான ஆட்சியே அமையும் சூழ்நிலை இருக்கிறது என்பது சமீபத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள்.  சந்தை இதை உள்வாங்கிக் கொண்டு மேல்நோக்கி செல்ல முயலும்.  இன்றைய உலக சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுவதால், அதையும் கணக்கில் கொண்டு சந்தை இன்று இறக்கத்துடன் துவங்கவே வாய்ப்புள்ளது.

      புதிய நிதி நிறுவனங்கள் வாங்க தொடங்கினால் சந்தை மேலேற வாய்ப்புள்ளது.  பிற்பகலுக்கு மேல் இவை நடக்கவும் வாய்ப்புள்ளது.  இவ்விரு நாட்களும் சந்தையில் தின வணிகம் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணங்கள்.  மதிய உணவுக்கு போய் வருவதற்குள் சந்தையின் நிலை தலைகீழாக மாறிவிடலாம். 

       குறுகிய கால வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிதானமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். இன்றைய சந்தை ஊசலாட்ட சந்தை. சில எதிர்பார்ப்புகளை முறியடிக்கக்கூடிய சந்தை என நினைக்கிறேன்.

    கவனமாக இறங்குங்கள்.

Read Disclaimer.

Good Morning to you all!

Add comment May 14, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2009
M T W T F S S
« Apr   Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031