Archive for May 11th, 2009
11-05-2009
கடைசிக்கட்ட தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வாரம் இது. சந்தையானது அலைகழிக்கப்படும் வாரம் என எதிர்பார்க்கக்கூடிய வாரம். சந்தையை பல்வேறு வதந்திகளின் மூலம் திசைதிருப்பி லாபத்தை சம்பாதிக்க ஆபரேட்டர்களுக்கு நிறைய காரணங்கள் உருவாகும் வாரம்.
மார்ச் மாத காலாண்டு அறிக்கைகள் அவ்வளவு மோசமாக எதுவும் காணப்படவில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சந்தை சரியாது என நினைத்தாலும், ரிலையன்ஸ் குழும பங்குகளை (குறிப்பாக ரிலையன்ஸ், பெட்ரோலியம், கம்யூனிகேஷன் ) பார்க்கும்போது சிறிது கவலையாகதான் உள்ளது. முதலில் அவர்களை தாக்க ஆரம்பித்தால் சந்தை தானே விழுந்து விடும் என்றே தோன்றுகிறது.
இன்றைய ஆசிய சந்தைகள் உற்சாகமாகவே ஆரம்பித்திருக்கின்றன. இதன் விளைவை இன்றைய சந்தையில் பார்க்கலாமா என்பது கேள்விக்குறித்தான். எல்லோரும் ஒருவித பதட்டத்தில் இருக்கின்றார்கள். சந்தை எத்தனை புள்ளிகள் இறங்குமோ என தெரியவில்லையே என.
ஆரம்பத்தில் ஒரு செல்லிங் பிரஷர் உருவாகும். அதை சந்தை எவ்வாறு சமாளிக்கப்போகின்றதோ அதை வைத்தே இன்றைய சந்தையின் பாதை உருவாகும். எனவே எச்சரிக்கையாய் இறங்குங்கள். சிறிது காத்திருந்து இறங்கினால் நல்லது.
சந்தையானது எத்தனையோ சரிவுகளை சந்தித்து மீண்டிருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு சரிவிலும் ஒரு வித பய உணர்வு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. சரிவுகளை கண்டு பயப்படாமல் சந்தையை எதிர்கொள்ளும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு முக்கிய விஷயம், எக்காரணம் கொண்டும் தேர்தலில் வாக்களிக்க தவறாதீர்கள். ஒரு முறை கூட நான் தவறியதில்லை என்பதால் இதை சொல்லும் தகுதி எனக்கிருப்பதாக நினைக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning to you all!
1 comment May 11, 2009