Archive for April 21st, 2009
21-04-2009
நேற்றைய தினம் ஐரோப்பிய சந்தைகள் சரிந்துக் கொண்டிருந்தபோதிலும், அமெரிக்க டோவின் ப்யூச்சர்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டும், நம் சந்தை அவ்வளவாக ரீயாக்ட் செய்யவில்லை.
மத்திய அரசின் கடைசி நாட்கள் எண்ணிப் பட்டுக் கொண்டிருக்கும்போது, சந்தையானது 7 சதவீதம் வளர்ச்சி என்ற கோஷத்திற்கேற்க மேலேறிக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க சந்தையானது 280 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்கு நிலையிலேயே இருக்கின்றன.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு நமது சந்தை இறக்கத்துடன் தொடங்கும் என்றாலும், சில ‘புதிய காளைகள்’ சந்தைக்கு வந்துள்ளதால் மேலேற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு தீர யோசித்து விடுவது நல்லது. வரவிருக்கும் மத்திய அரசு காங்கிரஸ் அல்லது பாஜக யாராக இருந்தாலும் பொருளாதார கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
தேர்தலுக்கு முந்தைய நாட்களில் காணப்படும் சுணக்கம் நமது சந்தையில் தற்போது காணப்படுவதில்லை. வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழைய கடன்கள் ஏதாவது இருந்தால் அடைத்து விடுவது நல்லது. (கடன் வாங்கி முதலீடு செய்வது பற்றி நிறைய பல அனுபவங்களை கேட்டிருக்கிறேன். இது பற்றி தனியாக எழுதலாம் என்றிருக்கிறேன். )
இன்றைய சந்தை இறக்கத்துடன் தான் ஆரம்பிக்கும். சென்ற நாட்களில் இருந்தது போல் பணப்புழக்கம் இருந்தால் சந்தை இறக்கத்துடன் ஆரம்பித்து முன்னேற ஆரம்பிக்கும். இல்லாவிட்டால் மெள்ள மெள்ள சரிவுகள் இவ்வாரம் முழுவதும் தொடர வாய்ப்புண்டு.
இன்றைய சந்தையானது -148 முதல் -75 வரை ஆட வாய்ப்புண்டு. ஒருவேளை ஏற்றத்துடன் முடிந்தால் இலாபத்தினை தவறாது உறுதி செய்து கொள்ளுங்கள்.
Read Disclaimer
Good Morning to you all!
4 comments April 21, 2009