Archive for April 20th, 2009
20-04-2009
வலுவான சந்தை ஏற்றத்திற்கு பிறகு வரும் திங்கள் கிழமை. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. பொருளாதார நிலை இன்னும் சீரடையாத பட்சத்தில் இது போன்ற சந்தையேற்றங்கள் எல்லாம் நிரந்தரமாக நீடிப்பது இல்லை. (சரி விடுய்யா, எத்தனை தடவை தான் சொல்லுவ)
இன்றைய ஆசிய சந்தை சற்று சுணக்கமாக உள்ளது. அமெரிக்க சந்தையின் ப்யூச்சர்ஸ்ம் இறக்கமாகவே உள்ளது. சில முக்கிய இரண்டு நிப்டி பங்குகளின் (TCS, Axis Bank) ஒன்று தகவல் தொழில் நுட்ப பங்குகளும், வங்கி துறை பங்குகளும் இன்று இதன் காலாண்டு அறிக்கைகளை பொருட்டே நிர்ணயிக்கப் படும். இவ்விரு துறைகளும் தான் பொதுவாக கரடிகளால் பிடிக்குள் சந்தை போகும் போது தாக்கப்படும். தொடர்ந்து லாபத்தையே காட்டி வரும் துறைகள் இவை. இலாபத்தில் சிறிதளவு இறக்கம் இருந்தாலும் சந்தை வெகுவாக ரீயாக்ட் செய்யும்.
சந்தை ஊசலாட்டத்தில் காணப்படும். இலாபத்தை தவறாது உறுதி செய்யுங்கள். தின வர்த்தக சந்தை இது. உண்மையான முதலீட்டாளர்கள் (சரி, சரி) சற்று ஒதுங்கியிருப்பது நல்லது.
கோடை விடுமுறையில் எந்த ஊர்களுக்கு போகலாம் என யோசித்து வையுங்கள்.
Read Disclaimer
Good Morning to you al!
5 comments April 20, 2009