Archive for April 15th, 2009

15-04-2009

      தொடர்ந்து மேலேறிக் கொண்டிருந்த சந்தைகள் இப்போது ஒரு குழப்பமான முடிவிற்கு வந்திருக்கின்றன.  அமெரிக்க சந்தை நேற்றைய தினம் 137 புள்ளிகள் இறங்கியிருக்கின்றது.  இன்றைய தினம் இன்போஸிஸ் முடிவு வெளியாகும் நாள்.

        சந்தையில் மெள்ள மெள்ள Selling Pressure உருவாகக் கூடும் என எதிர்பார்க்கிறேன்.  இன்போஸிஸ் முடிவுகள் பாதகமாக இருந்தால் சந்தை வெகு வேகமாக இறங்கக் கூடும். இன்போஸிஸ் முடிவுகள் சற்று பாதகமாகதான் இருக்குமென நினைக்கிறேன்.  தகவல் தொழில் நுட்பத் துறையானது 2009-10 ஆண்டு சற்று மந்தமாக இருக்குமென அறிக்கை கொடுக்க வாய்ப்பும் உண்டு.

       பொதுவாக Bear Market Rally -யில் தொடர்ந்து மேலேறிக் கொண்டிருக்கும் சந்தைகள் தீடீரென ஒரு கட்டத்தில் தள்ளாடும். அதற்கு பிறகு இறக்கம் ஏற்றத்தை விட வேகமாக நடக்கும் என்பது நமக்கு தெரியும் என்றாலும் தற்சமயம் மறந்து இருக்கலாம்.

       பொருளாதாரம் மேம்பட்டு விட்டது என்றாலும் இன்னும் சில தடைகள் இருக்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். 

     தொடர் சந்தை உயர்வுகள் தொடருமா என்ற கேள்விக்கு இன்றைய சந்தை பதிலளிக்கும் என நம்புகிறேன்.

Read Disclaimer.

Good Morning to you all!

5 comments April 15, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930