Archive for April 9th, 2009
09-04-2009
கிட்டத்தட்ட 200 புள்ளிகளுக்கு மேலாக நேற்று நிப்டி மேலேறி முடிந்திருக்கிறது. அமெரிக்க, ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் முடிந்திருந்த போதிலும், நமது சந்தை அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு இவ்வாறு மேலேறியிருப்பது ஆச்சர்யம்தான். உலக சந்தைகளின் ஏற்றத்தை தொடர்ந்தே முன்னேறி வந்த நம் சந்தை எவ்வித வலுவான காரணங்களன்றி 200 புள்ளிகள் மேலேறி முடிந்திருப்பது இன்றைய வணிக பத்திரிக்கைகளில் வியப்புக்குரிய செய்தியாக வந்திருப்பதில் ஆச்சயரியமில்லை. நிறைய பேர் அதை எதிர்பார்க்கவுமில்லை.
இது மகிழ்ச்சிக்குரிய செய்தியா? காளைகள் மீண்டும் வந்து விட்டார்கள் என உற்சாகம் அடையலாமா? இதை எச்சரிக்கையாக அணுகவேண்டும் என்றே நினைக்கிறேன். தற்போதைய டெக்னிகல் விவரங்களின்படி நிப்டி 3750 என்ற நிலையை தாண்டும் எனவும், 3400 என்ற நிலையை கடந்தால் 3500 மற்றும் 3600 என்ற நிலைகள் தான் அடுத்தக்கட்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வணிக தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாட்களிலும் பரவலாக காணப்படுகிறது. இதைப் படிக்கும் நிறைய முதலீட்டாளர்கள் அடுத்தது 3400, 3500,3600 போய் கடைசியில் 3750 ல் முடியும் அதிலிருந்து வேணா இறங்க வாய்ப்பு உள்ளது என்ற பிம்பத்தை உண்டு பண்ணிக் கொள்வார்கள். நண்பர்களே, நிப்டி ஒன்றும் புகைவண்டி கிடையாது. மேற்கண்ட நிலைகள் வரிசையாக வரும் ஸ்டேஷன்களும் கிடையாது. எந்த நேரத்திலும் யு டர்ன் அடிக்கலாம்.
இது போன்ற சூழ்நிலைகளில் டெக்னிகல் விவரங்கள் அவ்வளவாக பயன்தராது என்றே தோன்றுகிறது. ஊடககங்களில் தொடர்ந்து இது போன்ற விவரங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுவதால் நம் மனதில் ஒருவித 3750 என்ற பிம்பமானது அழுத்தமாக படிந்து விடுகிறது. அதாவது வெற்றிநடை போடுகிறது என விளம்பரம் வருமே அது போல.
தற்போது என்னதான் செய்யலாம் என்றால் உங்கள் கையில் லாபத்துடன் கூடிய பங்குகள் ஏதேனும் இருந்தால் மெள்ள மெள்ள விற்க ஆரம்பிக்கலாம். ரொக்கத்துடன் இருப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். பணத்துடன் காத்திருத்தல். மிகவும் சிரமமமான விஷயம்தான்.
பொதுவாக தேர்தல் காலங்களில் சந்தை அலைகழிக்கப்படும் என்பது தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள். இதுவரை நடந்த நிகழ்வுகளில் சந்தை கீழ்நோக்கி இறங்கியே காணப்பட்டிருக்கின்றன. வரும் நாட்களிலும் அவ்வாறே நடக்க வாய்ப்பு இருக்கின்றன. தற்போது இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளில் யார் வந்தாலும் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு வராது என்பது உண்மைதான்.
ஆனால், தொங்கு பாராளுமன்றம் என நிலை வருமாயின் சந்தை வெகுவாக கீழிறிங்க வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது. Political Uncertainty என்பது சந்தையை வெகுவாக பாதிக்கக் கூடிய ஒரு அம்சம்.
அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது அந்நிலையே நிலவி வருகிறது. நல்லது தானே? இல்லை. அவர்களிடம் நாசகாரி ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன. அவை தவறான மனிதர்களிடம் சிக்கிக் கொண்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். We are the biggest Bull’s Eye for them
இன்றைய சந்தையை பொறுமையாக வேடிக்கை பார்ப்பதே நல்லது.
Our Market’s currently in uncharted waters. Let’s wait and watch where it goes!
Read Disclaimer.
Good Morning to you All!
3 comments April 9, 2009