Archive for March 24th, 2009

24-03-2009

      அமெரிக்க அரசு அறிவித்த ஊக்கத் திட்டங்களால் அமெரிக்க சந்தையானது நேற்று 490 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது.  ஆனால் இது தற்காலிகமே.  8000 புள்ளிகளில் வலுவாக இருந்தது என நிபுணர்களால் சொல்லப்பட்ட சந்தை ஒரே வாரத்தில் 7000 புள்ளிகள் வரை சரிந்தது அச்சந்தை அடிப்படையில் இன்னும் பலவீனமாகவே உள்ளதை காட்டுகிறது.

        இந்த பொருளாதார சீர்குலைவிற்கு பின் வேகமாக முன்னேற்றம் அடையும் சந்தையாகவே இதுவரை அமெரிக்க சந்தை பார்க்கப்பட்டு வந்தது.  இந்நிலைமை சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருக்கிறது.  அடுத்த பொருளாதார மந்தத்திற்கு ஆசிய சந்தைகளையே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

      நேற்றைய சந்தை மிக மிக உற்சாகத்துடன் ஷார்ட் கவரிங் காணப்பட்டது.  3000 என்ற இலக்கு வெகு எளிதில் என்ற பேச்சும் அடிப்படுகிறது.  3000 என்ற நிலையில் நிறைய இலாபம் உறுதி செய்யும் நோக்கு இருக்கும். சந்தை அந்த நிலையில் சிறிது தடுமாறவே செய்யும் என நினைக்கிறேன். அதனை தக்க வைத்துக் கொள்ளும் நிலையும் இன்று உள்ளது.  ஒருவேளை அந்நிலையை கடந்து முடியுமானால் மேலும் ஒரு சிறிய ஷார்ட் கவரிங் ஏற்பட்டு சந்தையானது 3100 வரை போகுமென நினைக்கிறேன்.

       இன்றைய சந்தையானது ஆரம்பத்தில் ஏற்றத்துடன் தொடங்கினாலும், போகப்போக செல்லிங் பிரஷர் சந்தை ஏற்றத்தினை தடுக்குமென தோன்றுகிறது.  மேலும் ஆபரேட்டர்கள் காளை மன ஒட்டத்தையே சந்தையில் பிரதிபலிக்கின்றார்கள்.  ப்யூச்சர்ஸ் முடியும் நாள் இந்ததடவை மிகவும் சுவாரஸ்யமாக இருக்குமென தோன்றுகிறது.

      தின வணிகர்கள் மற்றும் ஸ்விங் ட்ரேடர்கள் மிகவும் எச்சரிக்கையாக சந்தையை அணுகுங்கள். இன்றைய சந்தையானது 68 முதல் -28 வரை ஆடுமென நினைக்கிறேன்.

 Read Disclaimer.

Good Morning to you all!

5 comments March 24, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031