Archive for March 18th, 2009
18-03-2009
நேற்றைய தினம் இலாபத்தை உறுதி செய்ததால் சந்தை 19 புள்ளிகளை இழக்க நேரிட்டது. தொடர்ந்து உலக சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதால் இன்றைய தினம் நமது சந்தை புத்துணர்ச்சியுடன் தொடங்க நேரிடும்.
2800 என்ற நிலையை வெகு எளிதில் தாண்டிவிடுமெனதான் நினைக்கிறேன். குறிப்பாக ரிலையன்ஸ் குழுமங்களில் காளை ஓட்டத்தை எதிர்பார்க்கிறேன். அவ்வாறு இருக்குமாயின் இன்றைய நமது சந்தையானது 78 புள்ளிகளுக்கு மேலேறி முடிய வாய்ப்புண்டு.
இன்றைய தினம் Selling Pressure வர வாய்ப்பில்லை என்றாலும், சில ம்யூச்சுவல் நிதி நிறுவனங்கள் மிகுந்த நஷ்டத்தில் இருப்பதனால் சில பங்குகளை வெகுவாக விற்கக் கூடும். இருப்பினும் காளை மனநிலையே பொதுவாக சந்தையில் விரவிக் கிடப்பதால் இன்றைய சந்தை உற்சாகமாகவே ஆரம்பிக்க வாய்ப்புண்டு.
இன்றைய சந்தையானது 78 முதல் -12 வரை ஆடலாம். முடிவு ஏற்றத்துடன் இருக்குமென நினைக்கிறேன்.
நன்றி, திரு ஜாபர், நேரமிருப்பின் இந்த வாரக்கடைசியில் எழுத முயற்சிக்கிறேன்.
Read Disclaimer
Good Morning to you all!
1 comment March 18, 2009