2015 இந்தியா – கொசுக்களை காப்போம்

March 14, 2009

       2015-ம் ஆண்டில் இந்தியாவில்  அதிக விற்பனையாகும் ஆங்கில தினசரியில் வெளியான முக்கிய செய்தியின் தமிழாக்கம் :

      ‘இந்தியாவில் கொசுக்களின் இனவிருத்தி அறவே குறைந்து கொசுக்கள் அழியும் உயிரினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  இது குறித்து ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.  நமது நிருபர் குழு சேகரித்த விவரங்களின்படி, இந்திய அரசாங்கம் தொடர்ந்து கொசுக்களை ஒழித்த வண்ணம் தான் உள்ளது என்றும், இந்நிலைமை நீடித்தால் கொசு என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்ற திடுக்கிடும் விவரத்தினை கண்டறிந்துள்ளார்கள். ’

        இந்த கொசு அழிப்பை குறித்து பெல்ஜிய நாட்டை சேர்ந்த    குண்டர் பஸ்டர் எழுதிய ‘The Rise and Fall of Mosquito’  என்ற 100 பக்க புத்தகம் (விலை ரூ.4,800-) இந்தியாவின் சிந்தனைவாதிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.  இந்த புத்தகத்தின் காம்ப்ளிமென்ட் காப்பியை பெற்ற ஒரு பிரபல மருத்துவர் இந்த புத்தகமானது பல்வேறு விஷயங்களின் மீது ஒரு தெளிவினை உண்டாக்குகிறது என்ற குழப்பமான தகவலை வெளியிட்டார்.

           ‘மஸ்க்கி – மை பிரண்ட்’ என்ற தலைப்பில் பாலிவூட்டின் பிரபல இயக்குநர் கொசுவிற்கும் ஒரு சிறுவனிற்கும் உள்ள நட்பை பற்றி விளக்கும் படம் ஒன்று எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார்.   கதை நாயகனிற்காக  நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள், தகுந்த கொசு அகப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் தெரிவிக்கிறது ஒரு திரைப்பட்சி.

      இது குறித்து இந்திய அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலிருந்து :

      ‘கொசு, மக்கள் இரண்டுமே இந்த அரசாங்கத்தின் இரு கண்கள்.  கொசு தற்போது அழிவு நிலையில் இருப்பதால் அரசாங்கம் அந்த அப்பாவி ஜீவராசியின் அழிவினை தடுக்க கடுமையான சட்டத்தினை அமுல் படுத்தப் போகிறது. ’

        கொசுக்களை அழிவினை தடுக்க புதிதாக M.O.S.A (Mosquitto Act) என்ற புதிய சட்டத்தினை கொண்டு வந்திருக்கிறது. கொசுக்களை அழிப்பவர்கள் மீது இச்சட்டம் பாயும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து நடந்த அதி இரகசிய சட்ட அமைச்சக கூட்டத்தில் முதலில் இந்த சட்டமானது S.A.M.O.S.A. (Special Anti Mosquitto Act) என கொண்டுவரப்பட்டதாகவும், அங்கே டீ கொடுக்க வந்த பையன் கெக்கெ பிக்கென்னு சிரிக்க ஆரம்பித்ததால் அது M O S A என ஆக்கப்பட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

      புது டெல்லியில் இருக்கும் பிரபல பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் திரு குப்தா அவர்கள்     மனிதர்கள் ஒரு வகையான மனப்பிரமையில் எப்போதுமே இருக்கிறார்கள் என்றும், மனிதன் தன் பத்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எவ்வளவு தொலைவு போய்விட்டான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கொசு அழிப்பு என்றும் குறிப்பிட்டார்.  டைனோசர் அழிவிற்கு கூட மனிதர்கள் தான் காரணம் என தான் நம்புவதாக கூறினார்.  

         இது குறித்து மற்றொரு பேராசிரியர் திரு  சந்திரா அவர்களிடம் கேட்டபோது, திரு குப்தா கூறிய கருத்துகளை தான் ஏற்றுக்  கொள்ள வில்லையென்றும், டைனோசர் காலத்தில் மனிதர்கள் வாழவில்லை என்றும், அவர் ஒரு மாங்கா மடையர் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

     இவரின் கருத்துகளை பேராசிரியர் குப்தாவிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, பேராசிரியர் சந்திராவின் பிறப்பினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சந்தேகம் எழுப்பினார்.

       பிரபல வட இந்திய கட்சி ஒன்று தமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தினை கீழ்க்கண்ட ஸ்லோகனை வைத்தே தொடங்க போவதாக அறிவித்துள்ளது :

     ‘ஓ மேரா மஸ்கிட்டோ, ஆ தேரா விஸ்கிட்டோ’

Entry Filed under: நகைச்சுவை. .

7 Comments Add your own

  • 1. SHANKAR VISVALINGAM  |  March 14, 2009 at 2:46 pm

    கொசுக்கள் வாழ்க, வளர்க.

    நாங்கள் கொசு வதை தடுப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். விரும்பினால் நீங்கள் நிதி உதவி செய்யலாம். ரசீதிற்கு பதிலாக மாஸ்கிடோ சாம்பரில் ஒரு நாள் ஜாலியாக கழிப்பதற்கு வாய்ப்பு தருகிறோம். அனுபவித்துப் பாருங்கள் ஒன்ஸ் மொஸ்கி மோர் கேட்பீர்கள்.

    சில பன்னாட்டு நிறுவனங்கள், எங்கள் ஆருயிர்களான மாஸ்கிக்களை அழிப்பதையே கண்ணாக கொண்டு, ஒர் வல்லரசின் உதவியுடன் ஒர் புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.1990 களில் தமிழ் சினிமாவில் பட்டை கிளப்பிய காப்டன் மற்றும் விடிஆர் ஆகியோரின் கிளிப்புகளை தொடர்ந்து ஒர் அறையில் ஹொலொகிராம்காஸ்ட் செய்ய, அறையில் இருந்த எங்கள் கண்மணிகள் உடல் கருகி இறப்பது, ஐயகோ கோரக் காட்சி.

    மாஸ்கி டைம்ஸ்க்காக நிருபர் கொஸ்வாண்டி.

  • 2. தண்டபானி ராஜகோபால்  |  March 14, 2009 at 9:14 pm

    அப்பாடா………உன்மையிலேயே பயனுள்ள பதிவுதான். நம்ம நாட்டுல கொசுதான் அதிக சதவிகிதத்தில வளர்ந்துள்ளது. நாடு முழுவதும் சுத்தம் சுகாதாரம் எதுவுமே இல்லை. அதைப் பற்றி அரசாங்கத்துக்கு கவலை இல்லை. நாயைப் பற்றி கவலைப் படும் ஒரு சிலர் மனிதனைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த பகுதியில் ஸேர் மார்கெட்டைத் தவிற மர்ற பதிவுகளுக்கு வேண்டாம் என்று சொன்ன நான் இந்த கொசுவைப் பற்றி சிந்திக்க தூண்டிய இக்கட்டுரையை வரவேற்கிறேன். நன்றி .

  • 3. ramprasad.v  |  March 15, 2009 at 3:14 am

    Hi

    So,… u r SIMPLY back-on TRACK after several weeks.

    But people in power won’t give EFFORT** to reduction of Mosquitos.

    Note:-
    EFFORT** = Effort given by them to slap a mosquito bitting them :-(

  • 4. Ganesh  |  March 15, 2009 at 1:58 pm

    Romba Nalla rasikka thakuntha athudan sinthikka thoodum oru pathivu, Week end daysil relaxa padithu rasikkalam.

  • 5. Karthikeyan G  |  March 16, 2009 at 9:53 am

    //இவரின் கருத்துகளை பேராசிரியர் குப்தாவிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, பேராசிரியர் சந்திராவின் பிறப்பினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சந்தேகம் எழுப்பினார்.//

    :) :) :)

  • 7. பூங்காவனம்  |  March 21, 2009 at 7:03 pm

    லெட் த கும்மி ஸ்டார்ட்.


    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031