Archive for March 6th, 2009
06-03-2009
நேற்றைய சந்தை தீடீர் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவினால் சந்தை நேற்று தடுமாறி விட்டது. அமெரிக்க சந்தை இவ்வளவு கீழே சென்று விட்டதால், அவர்கள் அங்கு முதலீடு செய்ய விரும்புவது எதிர்பார்த்திருக்க வேண்டும்தான்.
இன்றைய சந்தையில் தின வணிகர்கள் சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தொடர்ந்து இரண்டு நாட்கள் அதற்கப்புறம் இரண்டு நாட்கள் என விடுமுறை தினங்கள் வருவதால் சந்தையின் போக்கை இன்று சரியாக கணிக்க முடியாது.
ஷார்ட் கவரிங் ஒரளவு இருக்கும் என நினைக்கிறேன். முதல் அரை மணிநேரத்திற்கு பின்தான் சந்தையின் போக்கை கணிக்க முடியும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றும் விற்க ஆரம்பித்தால் சந்தையின் சரிவு கிட்டதட்ட 100 புள்ளிகளுக்கு மேல் இருக்கும். ஆனால் அமெரிக்க சந்தை ப்யூச்சர் இன்று மேலேற கூடும் என்பதால் சிறிதளவு மீளவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இன்றைய ஊஞ்சல் சந்தையிலிருந்து விலகியிருப்பதே நல்லது.
மாலை விரிவாக எழுதுகிறேன்
Read Disclaimer.
Good Morning to you all!
1 comment March 6, 2009