Archive for March 2nd, 2009
02-03-2009
கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையானது இறக்கத்தில் முடிந்து 12 வருட குறைந்த புள்ளிகளுடன் உள்ளது. அனைத்து பங்குகளும் விற்ற நிலையில் இருப்பதால், இன்றைய தினம் ப்யூச்சர்ஸ் ஏற்றத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் பொருட்டு நண்பகல் ஆரம்பிக்கும் ஐரோப்பிய சந்தைகளும் அவ்வாறே ஆரம்பிக்க வாய்ப்புண்டு.
ஒரு நாட்டின் நிதியாதார முதுகெலும்பே அந்நாட்டின் வங்கிகள்தான். அந்த வங்கிகளே திவால் நிலையில் இருக்கும்போது எவ்வாறு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளே வருவார்கள்? இந்த பிரச்சினையை தீர்க்கதான் ஒபாமா மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். திவால் நிலைக்கு வங்கிகளை கொண்டு செல்ல மாட்டார் எனினும், சென்ற வருடங்களில் செய்த பல முக்கிய முடிவுகள் இன்னும் அந்த வங்கிகளை பாதித்துக் கொண்டுதான் இருக்கும்.
நமது மத்திய அரசு அடுத்த தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது போன்ற சமயங்களில் சந்தையானது கரடிகளின் பிடிகளில்தான் இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அரசு சார்பாக புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாது என்பதால். எனினும், தற்போதைய காங்கிரஸ் அரசு முதலீட்டாளர்களின் ஒட்டினை பெறுவது சார்பாக ஏதேனும் பல திட்டங்களை மறைமுகமாக செயல்படுத்தும் என நினைக்கிறேன்.
விமான எரிபொருள் கட்டணம் குறைந்தது ஒரளவு அத்துறை பங்குகளுக்கு ஏற்றத்தை கொடுக்குமென நினைக்கிறேன்.
இன்றைய நமது சந்தை ஆரம்பத்தில் இறக்கத்துடன் ஆரம்பித்து நாளடைவில் மீளக் கூடும். சந்தையானது தற்போது முக்கிய சப்போர்ட் நிலையில் இருப்பதால் 75 புள்ளிகளுக்கு மேல் இழக்கும் பட்சத்தில் கரடிகளின் கை ஒங்கி சரிவுகள் வேகமாக இருக்கும்.
இன்றைய சந்தையானது -69 முதல் 48 வரை ஆடுமென நினைக்கிறேன்.
Read Disclaimer
Good Morning to you all!
4 comments March 2, 2009