Archive for February 16th, 2009
16-02-2009
பட்ஜெட். இந்த வாரம் முழுவதும் சந்தையை ஆக்கிரமித்துக் கொள்ளப் போகும் சொல். பெரும்பாலான சமயங்களில் பட்ஜெட்டில் சொல்லப்பட்டதை முதல் சில நாட்கள் தவறாகவே புரிந்து கொள்ளும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக இந்த பட்ஜெட் தற்போதைய மத்திய அரசு தேர்தலை சந்திப்பதற்கு முந்தைய பட்ஜெட் என்பதால், நீண்ட கால நோக்கங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சலுகைகளை அள்ளி வாரி இறைத்திருப்பார்கள்.
அதனால் சந்தைகள் ஏறுமா? சந்தையை ஏற்றக்கூடிய பெரிய குழுமங்களை பாதிக்கா வண்ணம் இருந்தாலொழிய சந்தைகள் உயர போவது கிடையாது. ஒரு ஏற்றுமதி குழுமத்தின் பங்கு 20 சதவீதம் விலை ஏறுவதனால் நிப்டியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடாது.
எதிர்கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியில்தான் பங்கு சந்தையானது இவ்வளவு கீழே போனது என்ற குற்றச்சாட்டையும் வைக்கும் என்பதால் மிக எச்சரிக்கையாகதான் பட்ஜெட் போட்டிருப்பார்கள். இந்த குற்றச்சாட்டில் முழுக்க உண்மை இல்லையென்றாலும், முழுக்க பொய்யும் இல்லை. இது குறித்து எழுதலாம் என்றுள்ளேன். இந்த பட்ஜெட்டில் சலுகைகள் வாரி விடப்பட்டிருக்கும். நமது சந்தையானது 3000 என்ற நிலையை கடக்க இந்த பட்ஜெட் உதவும் என எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க அரசும் நாளை ஒரு பொருளாதார ஊக்கங்களை நடைமுறைப்படுத்த போவதாக உள்ளது. அதனால் இன்றைய அமெரிக்க சந்தை ஒரளவிற்கு உயர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது. இதனை எதிர்பார்த்து இன்றைய ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடன் ஆரம்பிக்கலாம்.
தற்போதைய ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன்தான் காணப்படுகின்றன. நமது சந்தையும் இன்று பல வித ஊசலாட்டத்தில் இருக்கும் என நினைக்கிறேன். முடிவு ஏற்றத்துடன் தான் அமையும்.
ப்யூச்சர்ஸ் முடியும் நாள் போன்றே இன்றைய தினமும் சந்தை எவ்வித டெக்னிகலுக்கும் கட்டுப்பட்டுபட்டது அல்ல என்பதால் நிப்டியின் ஆட்டத்தை வரையறுக்கவில்லை.
நிதானமாக அமர்ந்து பட்ஜெட்டில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என கவனிப்போம்.
Read Disclaimer
Good Morning to you All!
Post Market:
Judgement reserved!
2 comments February 16, 2009