Archive for February 10th, 2009
10-02-2009
பொருளாதார ஊக்கங்கள் வரும் ஆனா வராது என்ற நிலையில் இருப்பதால், நேற்றைய அமெரிக்க சந்தை விளிம்பில் ஊசலாடி முடிந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அவ்வாறே இருக்கின்றன.
சந்தைக்கு ஊக்கமளிக்கும் செய்திகள் எதுவுமே தீர்மானம் ஆகவில்லையென்ற வகையில் இன்றைய சந்தை துவக்கத்திலேயே கடுமையான Selling Pressure சந்திக்க நேரிடும். இலாபத்தை உறுதி செய்ய ஆரம்பிப்பதும் நடப்பதால், துவக்கத்திலேயே சந்தையானது தள்ளாடும். ஒருவேளை (ஏனென்றால் சந்தையில் எதுவுமே சாத்தியமே என்பதால்) இந்த செல்லிங்கை சந்தை சமாளித்து 2975 என்ற நிலையை எட்டினால் சந்தை இன்றே 3000 என்ற நிலையை கடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு கடக்க மட்டுமே வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன். தக்க வைத்துக் கொள்வது இப்போதைய சூழ்நிலையில் கடினமே.
சந்தையில் சில குழுமங்கள் மீது செபி விசாரணை என்ற வகையில் வணிக தொலைக்காட்சிகளில் தீடீரென சில அறிவிப்புகள் வருவதால் சந்தை அலைகழிக்கப்படுகின்றதை பார்த்திருப்பீர்கள். இது போன்ற அறிவிப்புகளில் உண்மை நிலவரம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்டே விற்பதை பற்றி யோசியுங்கள்.
இன்றைய சந்தையானது -78 முதல் 32 வரை ஆட வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன். முடிவு -25 முதல் -48 புள்ளிகளில் இறக்கத்துடன் முடிய வாய்ப்புள்ளது. சந்தையின் வால்யூம் மிகக் குறைவாக இருப்பதால், டெக்னிகல் விவரங்களை எவ்வாறு வேண்டுமானாலும் சந்தை திரித்து விடலாம்.
Read Disclaimer.
Good Morning to You All!
Post Market:
இன்றைய சந்தை 14 புள்ளிகளுடன் ஏற்றத்தில் முடிந்துள்ளது. இன்றைய அமெரிக்க சந்தையின் ப்யூச்சர்ஸ் சரிந்துள்ள போதிலும், பொருளாதார ஊக்கங்கள் கண்டிப்பாக நடக்குமென்று நம்புவதால் ஒரளவு நம்பிக்கை இருக்கின்றது. நேற்றைக்கே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மேலேறி இருக்க வேண்டும். வணிக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளால் சிறிதளவு நிலைகுலைந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம்.
பொருளாதார ஊக்கங்கள் பற்றிய அறிவிப்புகள் வர தாமதமாகும் என்பதை வேறுவிதமாக இவர்கள் சொல்ல ஆரம்பித்தால் சந்தை சரிய வாய்ப்புள்ளது. இன்றைய ஏற்றம் நம்பிக்கை தருவதாக இல்லை. உள்ளூர ஒரு பயம் இருக்கிறது. இன்றைய அமெரிக்க சந்தை 80 புள்ளிகளுக்கு மேல் இழக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஒருவேளை அவ்வாறே நடந்தால் நாளை நமது சந்தை மேலும் புள்ளிகளை இழக்க நேரிடும்.
ரவிசங்கர், சந்தையின் வால்யூம் பற்றிய விவரங்களை அறிய www.nseindia.com என்ற தளத்திற்கு செல்லுங்கள். கேட்கும் விவரங்கள் தேடுவதற்கு கடினமான வடிவமைப்பு இருந்தாலும், அதிகாரபூர்வமான விவரங்கள்.
Good Night!
4 comments February 10, 2009