Archive for February 6th, 2009
06-02-2009
அமெரிக்கா அறிவிருக்கவிருக்கும் பெயில் அவுட் திட்டங்கள் எப்போது வரும் என அனைத்து சந்தைகளும் காத்திருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க சந்தையானது 8000 என்ற நிலையில் ஊசலாடி கொண்டிருக்கிறது.
கடந்த நான்கு நாட்களும் நமது சந்தையில் விற்ற நிலையே அதிகமாக இருக்கின்றபடியால், இன்று ஷார்ட் கவரிங் ஏற்பட்டு சந்தையானது மேலேற வாய்ப்பு உண்டு. விலைவாசி புள்ளி விவரம் நேற்று வந்தும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 40 டாலர் என்ற நிலையில் இருப்பதும் சந்தைக்கு நல்லது. ஆனால் இந்த நிலையிலிருந்து சடாரென்று மேலேற வாய்ப்பும் இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களுக்கு சந்தை ஏறுமுகமாகவே இருக்குமென்று டெக்னிகல் விவரங்கள் தெரிவிப்பதால், நமது சந்தை இன்று மேலேற வாய்ப்புண்டு. இது போன்ற சமயங்களில் நிப்டி பங்குகளில் அதிகமாக விற்கப்பட்ட பங்கு எது என ஆராய்ந்து அந்த பங்கினை வாங்கி வைத்தோமென்றால், ஒரே வாரத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை இலாபம் பார்க்கலாம். ஆனால் அதற்கு பலவித சார்ட்களை பார்க்க வேண்டுமென்ற பயத்தில் நிறைய பேர் பார்ப்பதில்லை. தற்சமயம் அனைத்தும் கணினி மயமாகி விட்டதில் எல்லாமே எளிதாகி விட்டதால், பங்கு விலை சார்ட்களை ஒருமுறையேனும், புரியாவிட்டாலும் பார்ப்பது நல்லது.
உதாரணத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கானது கடந்த ஆறு தினங்களாக விற்று வரும் நிலையிலேயே இருக்கிறது. சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தில் நன்கு மேலேற வாய்ப்பு இருக்கிறது என டெக்னிகல் லெவல் சார்ட் எடுத்துக் காட்டுகிறது.
இன்றைய நமது சந்தையானது 78 முதல் -18 வரை ஆடக்கூடும். முடிவு ஏற்றமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
Read Disclaimer
Good Morning To You All!
4 comments February 6, 2009