Archive for February 4th, 2009
04-02-2009
நேற்றைய தினம் நம் சந்தை 60 புள்ளிகள் ஏற்றம் கண்டும், அவற்றை இழந்து 18 புள்ளிகளில் முடிவடைந்தது. அமெரிக்க சந்தை 8000 என்ற நிலையை உடைத்து முடிந்திருந்ததால், மேலும் இறங்குமோ என்ற கவலை வேறு. ஆனால் அமெரிக்க சந்தையானது 8000 என்ற நிலை மிக வலுவானது என நேற்று காட்டி விட்டது. நேற்றைய அமெரிக்க சந்தை 140 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. அடுத்த முறை இதே போல் நடக்கும் என எனக்கு தோன்றவில்லை. வெகு வேகமாக 7400 என்ற நிலைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய நமது சந்தை Short Covering மேலேற வாய்ப்பு உண்டு. நண்பகலில் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தை தொடர்ந்தால் நம் சந்தை இன்று 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடியவும் வாய்ப்புண்டு.
இன்றைய சந்தையானது 92 முதல் -18 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு ஏற்றத்துடன் இருக்க வாய்ப்புண்டு.
நிப்டியானந்தாவின் பரிந்துரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மாலை பார்ப்போம்.
Read Disclaimer.
Good Morning to you All!
Post Market:
Post Market Update இன்னிக்கு கிடையாது, ஏன்னா இன்னிக்கு பந்த்.
2 comments February 4, 2009