Archive for February 2nd, 2009

02-02-2009

     இந்திய குழுமங்களில் முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் திருப்திகரமாகவே வந்துள்ளன.  உதாரணத்திற்கு, ரிலையன்ஸ், ஹின்டால்கோ போன்றவை.  சில காலாண்டு அறிக்கைகள் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.  உதாரணத்திற்கு டாடா மோட்டார்ஸ், எம்  அன் எம்.  இவற்றில் டாடா மோட்டார்ஸ் மட்டும் நஷ்டம் காண்பித்திருக்கிறது.  ஆட்டோ துறை சிறிய அளவில் கரடிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என தோன்றுகிறது.

      அமெரிக்க சந்தை இறங்கியிருந்த போதிலும், இந்த வாரம் பொருளாதார ஊக்கத்தால் இந்த வாரம் மேலேறும் என எதிர்பார்ப்பதால், நம் சந்தையில் ஒரு குறுகிய கால காளை ஒட்டத்தை எதிர்பார்க்கலாம்.

      நீண்ட துாரம் ஒடுமென எதிர்பார்க்க இயலவிட்டாலும், 3000 என்ற இலக்கை தாண்டி ஒடும் என டெக்னிகல் லெவல்கள் தெரிவிக்கின்றன.  பார்க்கலாம்.

      இன்றைய சந்தை சிறிது குழப்பமான நிலையில் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.  பிறகு மெல்ல மெல்ல மேலேற ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.  சந்தையானது 86 முதல் -28 வரை ஆடும் என நினைக்கிறேன்.

        மாலை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்

Good Morning To You All!

Post Market:

     இன்றைக்கு துவக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தினை கரடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.  60 புள்ளிகள் இழப்பிற்கு பின் குறுகிய கால முதலீட்டாளர்களும் லாபத்தை உறுதி செய்துக் கொண்டதால், சந்தை மேலும் புள்ளிகளை இழக்க வேண்டியதாயிற்று.

      ஆனாலும், இன்னும் வலுவாக இருப்பதையே உணர்கிறேன்.  ஒரு சிறிய நல்ல செய்திக்கு சந்தை வெகு வேகமாக ரீயாக்ட் செய்யக்கூடும்.  பொறுமை.  அதுதான் நமக்கு இப்போது வேண்டும்.

1 comment February 2, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728