Archive for January, 2009

வேதாள நகரம் 12 – டூயட்

       ஒரு கயவன் வீசியெறிந்த பிச்சுவா இலட்சிய வீரன் விஷ்வாவின் மார்பை நோக்கி வேகமாக வந்தது.

இது நடப்பதற்கு பதிமூன்று நிமிடங்களுக்கு முன்பு …….

      அறையில் அமர்ந்திருந்த இலட்சிய வில்லன் செழிக்கு அறையிலே அடைந்து கிடப்பது சோர்வாக இருந்தது. எனவே ஒரு பீர் வாங்கி வரலாம் என எண்ணி கீழே இருந்த பாருக்கு சென்றார்.

‘ஒரு பீர்  கொடுங்க. எவ்வளவு?’

‘மூன்று டாலர்கள் தான் சார். ஆனால் இப்போது கம்பெனி சார்பாக ஒரு புதிய தள்ளுபடி கொடுக்கிறோம். மூன்று பீர் பாட்டில்கள் வாங்கினால் வெறும் பத்தே டாலர்கள்தான்.’

‘அடடே, ரொம்ப நல்ல திட்டமா இருக்குதே. எனக்கு மூன்றே கொடுங்க. உங்களுக்கு எப்படி கட்டுபடியாகுது?’

‘ஏதோ உங்கள மாதிரி கஷ்டமருக்கு சேவை செய்யதான் நாங்க இருக்கோம்.’

     ஒரு பீர் பாட்டிலை சுவைத்துக் கொண்டே மாடிக்கு சென்ற செழி வழிமறித்து நிறுத்தியது கலவர சத்தம்.  போதையில் பீதியுடன் ஓடிய செழி நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சாட்டிலைட் போல பிச்சுவாவின் பாதையில் புகுந்தார்.

       விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் …  செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.

‘அய்யோ’

    அலறியது யார்?  விஷ்வாவா?  செழியா?  இல்லை. கத்தியை எறிந்த கயவன் தன் குறி தப்பியதை எண்ணி அலறிய சத்தமே அது.

‘அய்யோ’

     அலறியது யார்?  கத்தியை எறிந்த கயவனா? விஷ்வாவா?  இல்லை.  செழியின் பின்னால் பாய்ந்திருந்த பிச்சுவாவை பிடிங்கி அந்த கயவனின் நெஞ்சை நோக்கி விஷ்வா விட்டெறிந்ததால் ஏற்பட்ட வலியில் செழி போட்ட அலறல்தான் அது.

‘அய்யோ’

      யோசிக்கவே வேண்டாம். இது பிச்சுவா அந்த கயவனின் காலில் பாய்ந்ததால் ஏற்பட்ட அலறல்.

‘அய்யோ’

     ஹலோ! இது ரொம்ப ஓவர்.  கதை படிக்கும்போது நீங்க ஏன் சத்தம் போடுறீங்க?

——————————————————————————————————

             ‘சதீஷ், என் உயிரை காப்பாற்றியவர் இவர்.  இவருக்கு சிகிச்சை அளித்து இவரின் உயிரை நான் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்.’

         ‘யாருமே இல்லை.  நான்தான் இந்த சிக்கலான ஆபரேஷனை தனியா மேற்கொள்ள வேண்டும்’

     எல்லோரும் செழியை பரிதாபமாக பார்த்தனர்.  செழி மனதை உருக்கும் குரலில் சதீஷை கேட்டார்.

     ‘டாக்டர், இனி பெண்களை நான் கசமுசா செய்ய முடியுமா?’

     ‘தம்பி,  பிச்சுவா ஆழமாக பாய்ந்திருக்கிறது.  குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் உன்னை கசமுசா செய்யாமல் பார்த்துக் கொள்.’

      ‘எனக்கென்னவோ இந்த கதையில் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது’ என கலீல் தன் உள்ளத்தை திறந்தார்.

——————————————————————————————————

         வேகமாக வந்த கோச்சு வண்டி அவர்களிடையே நின்றது.  கதவை திறந்த பாப்பா …..ச்சீச்சீ… ஸ்டெல்லா ‘அனைவரும் வண்டியில் ஏறுங்கள். கலவரம் இன்னும் பெரிய அளவில் வரும் போலிருக்கிறது. வாங்க,  ஓடி போய்டலாம்.’

       ஒரு இளம்பெண் இவ்வாறு சொன்னபிறகு அதை பெருந்தன்மையாக மறுக்க நம் இலட்சிய வீரர்கள் என்ன கனவான்களா? இல்லையே.  உடன் அனைவரும் செழியை கோச்சு வண்டியின் உள்ளே படுக்க வைத்து (மல்லாக்க) அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.

     அந்த சமயத்தில் ஸ்டெல்லா கை நம் இலட்சிய வீரன் விஷ்வாவின் கையுடன் உரச, ஒரு கனவுலக டூயட் சிச்சுவேஷன்ஐ எப்படி தவற விட முடியும்? 

         பாடல் வகை = டூயட்     ஆண்=விஷ்வா,  பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.

இராகம்=கபோதி,  பாடல் ஆசிரியர்=நாந்தேன்.  கோரஸ் வரிகளை எழுதியவர்=தற்சமயம் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.

பெ :                               டேய் விச்சு, வாடா வாடா ஆ……..ஆ
                                          இச்சு ஒன்னு தாடா தாடா ஆ……..ஆ

    
சத்.கலீ.செழி கோரஸ்.     போங்கண்ணா விச்சு, குடுங்கண்ணா இச்சு

     
ஆ                                    விச்சு நான் வந்துட்டேன் ஆ……..ஆ
                                          பிச்சு பிச்சு நான் தந்துட்டேன் ஆ……..ஆ

சத்.கலீ.செழி கோரஸ்.    தள்ளிக்கடா விச்சு, நாங்க கொடுக்கப் போறம் இச்சு

      
பெ                                 நேத்து பெஞ்ச மழையிலே ஆ……..ஆ
                                       நனைஞ்ச எனக்கு அச்சு அச்சு ஆ……..ஆ

 

சத்.கலீ.செழி கோரஸ்.ஜிங்கு ஜிக்கு ஜிக்கு நாங்க பூசி விடுவோம் விக்ஸு

        
ஆ                               அச்சு அச்சு இருந்தாலும் நான் ஆ……..ஆ
                                     உனக்கு இச்சு இச்சு தரேன் ஆ……..ஆ
 
சத்.கலீ.கோரஸ். இச்சு இச்சு விச்சு, ஆஃப் பண்றம் லைட் சுவிட்ச்சு

பெ                                  எங்கப்பன் நொச்சு நொச்சுனு ஆ……..ஆ
                                         உன்னப் பாத்த பிச்சு பிச்சு ஆ……..ஆ

ஆ                                 அவன பாத்தா நான் நச்சு நச்சு ஆ……..ஆ
                                       அவந் மக உனக்கு தாரென் இச்சு இச்சு ஆ……..ஆ

————————————————————————————————

      கோச்சு வண்டி அந்த நகரத்தின் எல்லையை தாண்டிய உடனே கோச்சு வண்டியை ஒட்டிய ஒட்டுநர்  ‘வண்டிய எந்தபக்கம்  திருப்பணும்?’ என வினவினார்.

     ஸ்டெல்லா  நம் இலட்சிய வீரர்களை பார்க்க, அவர்களும் இவளை மையலுடன் பார்த்தனர்.  ஒரு ஐந்து நிமிடம் கழித்து குறுக்கே புகுந்த கோச்சு  வண்டியின் டிரைவர் ‘யோவ், புண்ணாக்குகளா, வண்டிய எந்தபக்கம் திருப்பறதுன்னு மேடம் உங்களை பாத்தா, இப்டி பதிலுக்கு ஏன்யா ரொமன்டிக் லுக் வூடுறீங்க’ என கேட்டு அந்த மையல் பார்வையை கலைத்தார்.

     விஷ்வா திரும்பி எஸ்கோபாரை காதில்  ‘நிறைய பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கு.  இந்த கோச்சு வண்டி நம்ம கூடவே இருந்தா நல்லாருக்கும் இல்ல.  கிடைக்கிற புதையல்ல இவங்களுக்கு கொஞ்சம் குடுத்துறுவோம்.  என்ன சொல்ற’  என  கிசுகிசுத்தார்.

      எஸ்கோபாரும் தீவிர யோசனைக்கு பிறகு சம்மதித்தார்.  பிறகு வண்டி ஒட்டியிடம் திரும்பி ‘வண்டியை கிழக்கே பாலைவனத்தை நோக்கி விடு. ’

      ‘பாலைவனத்திற்கா? யோவ், அங்க யாருய்யா இருக்கா?’

      விஷ்வா ஸ்டெல்லாவை பார்த்து ‘இப்போது எதுவும் கேட்காதீர்கள்.  எல்லாம் முடிந்த பிறகு சொல்கிறேன்.  அப்போதும் எதுவும் கேட்காதீர்கள்.’

       ‘சரி, இவர்கள் சொல்கிற பக்கமே வண்டியை திருப்பு.’

      கோச்சு வண்டி பாலைவனத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

 

                                                                                                                                            (தொடரும்)

10 comments January 26, 2009

இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை?

      உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம்.  லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள்.  விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா? 

       இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர்.      அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.                                                       

சூப்பர் மேன்
சூப்பர் மேன்

முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.

        சென்னை மெரினா கடற்கரையின் அருகே உள்ள ஒரு கடையில் ஆட்டுக்கால் பாயாவை சூப்பிக் கொண்டு இருக்கிறார் சூப்பர் மேன்.  அப்போது அவரின் அசாதாராணமான கேட்கும் திறனில் கீழ்க்கண்ட உரையாடல் கேட்கிறது.
   ”  Control Tower, This is Air India Flight IC 420 Calling,…..”
  
  (   எளிமை கருதி கீழ்க்கண்ட உரையாடல் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)
 
‘என்னாய்யா’
   
‘என்னோட பிளேன்ல ஒரு என்ஜின் ஆஃப் ஆயிடுச்சி.’
    
‘அப்ப அத ஆன் பண்ண வேண்டியதுதானே முண்டம்’
    
‘முடியலை.  என்ஜின் எரிஞ்சிக் கிட்டு இருக்கு. ரெண்டாவது என்ஜினுக்கு நெருப்பு பரவிடுச்சி.’
   
‘அப்படியா (உணவு மெல்லும் சத்தம்)  இப்ப எங்க இருக்கே.’
    
’நான் நங்கநல்லுர் மேலே இருக்கேன்.’
    
‘ஐய்யய்யோ, நான் அங்கதான் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்.  நீ முதல்ல மெரினா கடல் பக்கம் போயிடு.’
   
‘சரி போயிட்டேன். இப்ப என்ன பண்றது?’
   
‘என் டூயிட்டி டைம் முடிஞ்சிடுச்சி. குமார் தான் அடுத்து வருவான்.  இன்னிக்கு என்னவோ ஒன் அவர் பர்மிஷன்னு சொன்னான். அப்ப நான் கிளம்புறேன்.  யாராவது உனக்கு பேச்சி துணைக்கு வருவாங்க.’
    
‘யோவ், என்னதுய்யா இது,  Mayday, Mayday’
    
‘யோவ் மாங்காய், இது ஜனவரி மாசம்ய்யா.  மே டேக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு.’
    
         இந்த உரையாடலை கேட்ட சூப்பர் மேனின் சூப்பர் ப்ரெயின் அந்த விமானத்திற்கு ஆபத்து என பல சிக்கலான கணக்குகளை போட்டு கண்டுபிடித்தது.  உடனே தன் ஆடைகளை மாற்ற படகின் பின்புறம் சென்றார்.  பின்னர் அசடு வழிந்துக் கொண்டே, ‘சாரிங்க, நீங்க இருக்கறத நான் கவனிக்கல’ என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்து புதருக்கு சென்றார்.  அங்கும் அதே கதைதான்.
 
       வேறுவழியில்லாமல் கட்டண கழிப்பிடத்திற்கு சென்று, அதிகப்படியான கட்டணம் செலுத்தி, கழிப்பறை வாசலில் உடைமாற்றுவதற்காக நின்றுக் கொண்டிருக்கிறார். 
   
        உங்களில் யாராவது கட்டண கழிப்பிடத்தில் கழிப்பறை திறப்பதற்காக நிற்கையில் உங்கள் அருகில் நிற்பவர்களில் யாரேனும் ஒருவர் சூப்பர் மேனாக கூட இருக்கலாம்.
     
 
batman        அடுத்தது பேட்மேன்.  இரவு நேரம்.  அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு கூக்குரல் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு பாய்ந்து செல்கிறார் இரவின் பாதுகாவலர், நீதியின் செல்வர் பேட்மேன். 
   
    அங்கு அவர் கண்டது ஒரு வயதான பெரியவர் வெத்திலை பெட்டியுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை.
    
   ‘வயதில் மூத்தவரே, இங்கு ஒரு அபல குரல் எழுந்ததே, யார் அது?’
   
 ‘யாரு அது, எசக்கி மவனா?’
         
  ‘இல்லை.  நான் பேட்மேன்’
      
  ‘பத்மநாபனா?’
    
  ‘ நான் பேட்மேன்யா. பேட்மேன்.’
    
   ‘சரியா கேக்கலை.  திருப்பி சொல்லுடா அம்பி’
    
   ‘கட்டையில போறவனே,  நான்தாண்டா பேட்மேன்.  இங்க எந்த நாயோ கத்திச்சின்னு ஓடிவந்து உன்னோட எழவெடுத்துக் கிட்டு இருக்கேன்.  யார்ரா அது?’
     
 ‘பாக்கு நசுக்கும்போது எங்கையில உரல் பட்டுடுச்சி.  அதான் கத்தினேன்.’
    
     கொலைவெறியுடன் பேட்மேன் கோதம் சிட்டிக்கே திரும்பி செல்கிறார்.
     
steelclaw
நம் அனைவரின் மனங்கவர்ந்த இரும்புகை மாயாவி. 
       
          ஒரு வெளிநாட்டு சதியின் ஆணிவேரை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள சாத்தான் குளத்திற்கு நம் இரும்புகை மாயாவி வருகிறார்.  அவரின் துப்பறியும் நோக்கத்தை எதிரி கண்டறிந்து விடுகிறான்.  அவரை இருபது பேர் கொலைவெறியுடன் லுங்கிக் கட்டிக் கொண்டு துரத்துகிறார்கள்.  அவர்களிடம் தப்பி ஒடும் மாயாவி சற்று தொலைவில் ஒரு மின்சார ட்ரான்பார்மரை பார்க்கிறார்.  அவரின் இதழில் புன்முறுவல் பூக்கிறது.
     
       சூப்பர் ஹீரோக்களின் குல வழக்கப்படி மின்சார ட்ரான்பார்மரின் அருகே நின்றுக் கொண்ட மாயாவி கீழ்க்கண்டவாறு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
     
     ‘சாத்தான் குளத்தில் சாகசம் புரியவந்த என்னை சாகடிக்க பார்க்கும் சண்டாளர்களே,  இரும்புகை மாயாவியிடமா குறும்பு செய்கிறீர்கள்?’
      
        ஆனால் அவர் இருப்பது தமிழ்நாடு. அவரின் பஞ்ச் டயலாக் முடிந்தவுடன் மின் வெட்டு ஆரம்பமானது.  அவர் லுங்கிவாலாக்களால் சிதைக்கப்படும் முன் பேசிய கடைசி டயலாக்.
      
      ‘அடங்கொக்க மக்கா’
      
hulk
    அடுத்து கோபம் வந்தால் ஒரு சுற்று பெருத்து விடும்  ஹல்க். 
    
     சென்னை, தி நகரில் உள்ள இரங்கநாதன் தெருவில் ஹல்க் நடந்துக் கொண்டிருக்கிறார்.  எதிரே வந்த ஒருவர் இடித்தவுடன் கோபம் கொண்டு ஹல்க் பெருக்கிறார்.
    
      அப்போது அவர் அருகில் இருந்த 60-வயது பெண் கடுப்பாகி, ‘டேய் நாற கம்னாட்டி,  எருமை மாதிரி இருந்துக்கீனு ஒரு வயது பொண்ணை இடிக்கிறேயே, அறிவு கீதா?’ என கேட்டார்.
      
      அதற்கு ஹல்க், கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘தாய்க்குலமே, நான் ஹல்க்.  என்னை கோபப்படுத்தி விட்டார்கள்.  நான் என்ன செய்வது?’ என வினவினார்.
     
      ‘பேர பாரு, அல்க் சில்க்னு.  டேய் எருமைக்கடா, போய் ஒன் டவுசர ஒழுங்கா போட்டுகினு வா.’
     
    ஹல்க் வேதனையுடன் சென்னை மீனம்பாக்கம் சென்று அமெரிக்காவிற்கு டிக்கெட் வாங்க செல்கிறார்.
     
      இன்னும் பல சூப்பர் ஹீரோக்கள் ஏன் இந்தியாவிற்கு வரவில்லை என்பதை ஆராய்ந்து வெளியிடுவேன் என்பதை மட்டும் தற்சமயம் சொல்லிக்கொள்கிறேன்.

19 comments January 23, 2009

23-01-2009

      நேற்றைய சந்தையில் Selling Pressure கடுமையாக இருந்தது குறிப்பிடதக்கது. தற்சமயம் ஏறக்குறைய எல்லா முன்னணி குழுமங்களின் காலாண்டு அறிக்கைகளும் வந்துவிட்ட நிலையில், சந்தை இன்று சிறிது மேலே செல்ல முயல வாய்ப்பு இருக்கிறது.

      அமெரிக்க சந்தை 250 புள்ளிகளை இழந்து, பின்னர் 105 புள்ளிகள் வரை மீண்டு முடிந்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் இறக்கத்துடனே ஆரம்பித்திருக்கின்றன.  ப்யூட்சர்ஸ் முடிய இன்னும் மூன்று செஷன்களே உள்ள நிலையில்,  இன்றைய சந்தை சற்று மேலேற வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன்.

       இன்றைய சந்தை -55 முதல் 68 வரை ஆடும் என நினைக்கிறேன்.  ஏற்றத்துடன் முடிய வாய்ப்புண்டு.

       வேலைப்பளு காரணமாக விரிவாக எழுத முடியவில்லை. மாலை பார்க்கலாம்.

    Good Morning to you All!

2 comments January 23, 2009

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031