28-01-2009

January 28, 2009

      அமெரிக்க சந்தை 50 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது.  நமக்கோ F & O முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இன்று நம் சந்தை மேலேற வாய்ப்பு இருக்கிறது.  குறிப்பாக வங்கி பங்குகளில் நிறைய விற்றநிலையில் உள்ளதாலும், நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்ததாலும் அத்துறை பங்குகள் மேலேற வாய்ப்பு உள்ளன.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யெஸ் பேங்க் போனற பங்குகளை கூர்ந்து கவனியுங்கள்.

       ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பெருத்த மாற்றத்தை எதுவும் ஏற்படுத்தாது என நினைக்கிறேன்.  எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவ்வளவுதான்.  காலையில் சற்று சுணக்கமாக தொடங்கினாலும், போகப்போக மேலேற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.

     இன்றைய நமது சந்தை 95 முதல் 25 வரை ஆடும் என எதிர்பார்க்கிறேன்.  இதுபோன்ற சமயங்களில் வால்யூம் குறைவாக இருப்பதால், சந்தை இன்னும் அதிகமாக மேலேறவோ அல்லது கீழிறிங்கவோ வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

       நம் அரசியல்வாதிகளுக்கு  வரலாற்றை பற்றி அக்கறை இல்லை. நாளை நம்மை வரலாறு எவ்வாறு சித்தரிக்கும் என்பதில் ஆர்வமும் இல்லை.  அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் … சரி விடுங்கள். ஆனால் நேற்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு ஆர் வி வெங்கட்ராமன் அவர்களை பொறுத்த வரையில் அவர் தொலை நோக்கு பார்வையில் தீட்டிய திட்டங்கள் மற்றும் உணவு பற்றாக்குறை இருந்தபோது அவர் செயல்பட்ட விதங்கள் அனைத்தையும் வரலாற்றை புரட்டி பார்த்ததால் நாம் இன்று எப்படிப்பட்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம் என தெரியும்.

         பொதுப்பணித் துறை மற்றும் நிதி அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவரும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான திரு ஆர் வி வெங்கட்ராமன் ( 98 ) மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   சிறந்த நிர்வாகி மற்றும் Visionary  என்ற அம்சங்களை கொண்ட சில அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பதால் இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகின்றேன்.

Entry Filed under: Market Analysis. .

5 Comments Add your own

  • 1. batcha  |  January 28, 2009 at 9:49 am

    thx hunter

  • 2. rajendrann  |  January 28, 2009 at 3:26 pm

    thanks

  • 3. Rajkumar  |  January 28, 2009 at 3:41 pm

    good prediction 25-95 .Keep it up

  • 4. Chandramohan  |  January 28, 2009 at 10:03 pm

    To day also your prediction is good about Market
    Thanking you
    Dr Chandramohan
    Salem

  • 5. Anonymous  |  January 29, 2009 at 7:37 am

    rameshmaduri.blogspot.com, ETHI PARUNGKA

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031