Archive for January 26th, 2009
வேதாள நகரம் 12 – டூயட்
ஒரு கயவன் வீசியெறிந்த பிச்சுவா இலட்சிய வீரன் விஷ்வாவின் மார்பை நோக்கி வேகமாக வந்தது.
இது நடப்பதற்கு பதிமூன்று நிமிடங்களுக்கு முன்பு …….
அறையில் அமர்ந்திருந்த இலட்சிய வில்லன் செழிக்கு அறையிலே அடைந்து கிடப்பது சோர்வாக இருந்தது. எனவே ஒரு பீர் வாங்கி வரலாம் என எண்ணி கீழே இருந்த பாருக்கு சென்றார்.
‘ஒரு பீர் கொடுங்க. எவ்வளவு?’
‘மூன்று டாலர்கள் தான் சார். ஆனால் இப்போது கம்பெனி சார்பாக ஒரு புதிய தள்ளுபடி கொடுக்கிறோம். மூன்று பீர் பாட்டில்கள் வாங்கினால் வெறும் பத்தே டாலர்கள்தான்.’
‘அடடே, ரொம்ப நல்ல திட்டமா இருக்குதே. எனக்கு மூன்றே கொடுங்க. உங்களுக்கு எப்படி கட்டுபடியாகுது?’
‘ஏதோ உங்கள மாதிரி கஷ்டமருக்கு சேவை செய்யதான் நாங்க இருக்கோம்.’
ஒரு பீர் பாட்டிலை சுவைத்துக் கொண்டே மாடிக்கு சென்ற செழி வழிமறித்து நிறுத்தியது கலவர சத்தம். போதையில் பீதியுடன் ஓடிய செழி நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சாட்டிலைட் போல பிச்சுவாவின் பாதையில் புகுந்தார்.
விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் … செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.
‘அய்யோ’
அலறியது யார்? விஷ்வாவா? செழியா? இல்லை. கத்தியை எறிந்த கயவன் தன் குறி தப்பியதை எண்ணி அலறிய சத்தமே அது.
‘அய்யோ’
அலறியது யார்? கத்தியை எறிந்த கயவனா? விஷ்வாவா? இல்லை. செழியின் பின்னால் பாய்ந்திருந்த பிச்சுவாவை பிடிங்கி அந்த கயவனின் நெஞ்சை நோக்கி விஷ்வா விட்டெறிந்ததால் ஏற்பட்ட வலியில் செழி போட்ட அலறல்தான் அது.
‘அய்யோ’
யோசிக்கவே வேண்டாம். இது பிச்சுவா அந்த கயவனின் காலில் பாய்ந்ததால் ஏற்பட்ட அலறல்.
‘அய்யோ’
ஹலோ! இது ரொம்ப ஓவர். கதை படிக்கும்போது நீங்க ஏன் சத்தம் போடுறீங்க?
——————————————————————————————————
‘சதீஷ், என் உயிரை காப்பாற்றியவர் இவர். இவருக்கு சிகிச்சை அளித்து இவரின் உயிரை நான் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளேன். ஒரு நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்.’
‘யாருமே இல்லை. நான்தான் இந்த சிக்கலான ஆபரேஷனை தனியா மேற்கொள்ள வேண்டும்’
எல்லோரும் செழியை பரிதாபமாக பார்த்தனர். செழி மனதை உருக்கும் குரலில் சதீஷை கேட்டார்.
‘டாக்டர், இனி பெண்களை நான் கசமுசா செய்ய முடியுமா?’
‘தம்பி, பிச்சுவா ஆழமாக பாய்ந்திருக்கிறது. குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் உன்னை கசமுசா செய்யாமல் பார்த்துக் கொள்.’
‘எனக்கென்னவோ இந்த கதையில் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது’ என கலீல் தன் உள்ளத்தை திறந்தார்.
——————————————————————————————————
வேகமாக வந்த கோச்சு வண்டி அவர்களிடையே நின்றது. கதவை திறந்த பாப்பா …..ச்சீச்சீ… ஸ்டெல்லா ‘அனைவரும் வண்டியில் ஏறுங்கள். கலவரம் இன்னும் பெரிய அளவில் வரும் போலிருக்கிறது. வாங்க, ஓடி போய்டலாம்.’
ஒரு இளம்பெண் இவ்வாறு சொன்னபிறகு அதை பெருந்தன்மையாக மறுக்க நம் இலட்சிய வீரர்கள் என்ன கனவான்களா? இல்லையே. உடன் அனைவரும் செழியை கோச்சு வண்டியின் உள்ளே படுக்க வைத்து (மல்லாக்க) அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
அந்த சமயத்தில் ஸ்டெல்லா கை நம் இலட்சிய வீரன் விஷ்வாவின் கையுடன் உரச, ஒரு கனவுலக டூயட் சிச்சுவேஷன்ஐ எப்படி தவற விட முடியும்?
பாடல் வகை = டூயட் ஆண்=விஷ்வா, பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.
இராகம்=கபோதி, பாடல் ஆசிரியர்=நாந்தேன். கோரஸ் வரிகளை எழுதியவர்=தற்சமயம் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.
பெ : டேய் விச்சு, வாடா வாடா ஆ……..ஆ
இச்சு ஒன்னு தாடா தாடா ஆ……..ஆ
சத்.கலீ.செழி கோரஸ். போங்கண்ணா விச்சு, குடுங்கண்ணா இச்சு
ஆ விச்சு நான் வந்துட்டேன் ஆ……..ஆ
பிச்சு பிச்சு நான் தந்துட்டேன் ஆ……..ஆ
சத்.கலீ.செழி கோரஸ். தள்ளிக்கடா விச்சு, நாங்க கொடுக்கப் போறம் இச்சு
பெ நேத்து பெஞ்ச மழையிலே ஆ……..ஆ
நனைஞ்ச எனக்கு அச்சு அச்சு ஆ……..ஆ
சத்.கலீ.செழி கோரஸ்.ஜிங்கு ஜிக்கு ஜிக்கு நாங்க பூசி விடுவோம் விக்ஸு
ஆ அச்சு அச்சு இருந்தாலும் நான் ஆ……..ஆ
உனக்கு இச்சு இச்சு தரேன் ஆ……..ஆ
சத்.கலீ.கோரஸ். இச்சு இச்சு விச்சு, ஆஃப் பண்றம் லைட் சுவிட்ச்சு
பெ எங்கப்பன் நொச்சு நொச்சுனு ஆ……..ஆ
உன்னப் பாத்த பிச்சு பிச்சு ஆ……..ஆ
ஆ அவன பாத்தா நான் நச்சு நச்சு ஆ……..ஆ
அவந் மக உனக்கு தாரென் இச்சு இச்சு ஆ……..ஆ
————————————————————————————————
கோச்சு வண்டி அந்த நகரத்தின் எல்லையை தாண்டிய உடனே கோச்சு வண்டியை ஒட்டிய ஒட்டுநர் ‘வண்டிய எந்தபக்கம் திருப்பணும்?’ என வினவினார்.
ஸ்டெல்லா நம் இலட்சிய வீரர்களை பார்க்க, அவர்களும் இவளை மையலுடன் பார்த்தனர். ஒரு ஐந்து நிமிடம் கழித்து குறுக்கே புகுந்த கோச்சு வண்டியின் டிரைவர் ‘யோவ், புண்ணாக்குகளா, வண்டிய எந்தபக்கம் திருப்பறதுன்னு மேடம் உங்களை பாத்தா, இப்டி பதிலுக்கு ஏன்யா ரொமன்டிக் லுக் வூடுறீங்க’ என கேட்டு அந்த மையல் பார்வையை கலைத்தார்.
விஷ்வா திரும்பி எஸ்கோபாரை காதில் ‘நிறைய பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கு. இந்த கோச்சு வண்டி நம்ம கூடவே இருந்தா நல்லாருக்கும் இல்ல. கிடைக்கிற புதையல்ல இவங்களுக்கு கொஞ்சம் குடுத்துறுவோம். என்ன சொல்ற’ என கிசுகிசுத்தார்.
எஸ்கோபாரும் தீவிர யோசனைக்கு பிறகு சம்மதித்தார். பிறகு வண்டி ஒட்டியிடம் திரும்பி ‘வண்டியை கிழக்கே பாலைவனத்தை நோக்கி விடு. ’
‘பாலைவனத்திற்கா? யோவ், அங்க யாருய்யா இருக்கா?’
விஷ்வா ஸ்டெல்லாவை பார்த்து ‘இப்போது எதுவும் கேட்காதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு சொல்கிறேன். அப்போதும் எதுவும் கேட்காதீர்கள்.’
‘சரி, இவர்கள் சொல்கிற பக்கமே வண்டியை திருப்பு.’
கோச்சு வண்டி பாலைவனத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.
(தொடரும்)
10 comments January 26, 2009