Archive for January 22nd, 2009

22-01-2009

     நேற்றைய அமெரிக்க சந்தை 270 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது.  ஆப்பிள்தான் காரணம் என்கிறார்கள்.  இன்னிக்கு நம்மக்கிட்டயும் ஒரு பூசணியே (ரிலையன்ஸ் காலாண்டு அறிக்கை)  இருக்கு. தற்போதைய ஆசிய சந்தைகளும் உயர்ந்தே காணப்படுகின்றன.  நேற்று நமது சந்தையில் நிறைய விற்றுவிட்டார்கள்.  ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இன்று ஷார்ட் கவரிங் நடக்கும்.  அதனால் சந்தை நேற்று விட்ட புள்ளிகளை இன்று பெற முயற்சி செய்யும்.

      இன்றைய தினம் ரிலையன்ஸ் குழுமத்தின் காலாண்டு அறிக்கை வெளியாகும் நாள்.  பெரிய அளவில் எதுவும் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் 2-5 சதவீதம் இலாபத்தில் ஏற்றம் இருக்கலாம்.  அவ்வாறு இருந்தாலே சந்தை மேலும் முன்னேறும்.  இதில் சிறிய சுணக்கம் ஏற்பட்டாலும், சந்தை மீண்டும் பின்னோக்கி இறங்க ஆரம்பிக்கும். இது கரடிகளுக்கு கொடுக்கப்பட்ட சிக்னல் என எடுத்துக் கொள்ளலாம்.

     இன்றைய நமது சந்தை 115 முதல் 28 வரை ஆடும் என நினைக்கிறேன்.  முடிவு மங்களகரமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.  ரிலையன்ஸ் நமக்கு அல்வா கொடுத்து விடாது என நம்புவோமாக.

     Read Disclaimer

Good Morning to you All!

Post Market:

      இன்னிக்கு ரிலையன்ஸ் காலாண்டு அறிக்கை வரும் ஆனா வராது என்று சந்தையை அலைகழித்துக் கொண்டிருந்து, ஒருவாறாக வெளியிடப்பட்டது.  ஊடகங்களில் 18 சதவீதம் இலாபம் குறையும் என எதிர்பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.  ஆனால் எதிர்பார்ப்பிற்கு சற்று மேலாகவே இலாபத்தை கொடுத்திருக்கிறது.  நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்த யெஸ் பேங்க், வோல்டாஸ், ஐடியா போன்ற குழுமங்களை இன்னும் கரடிகள் தாக்கிக் கொண்டேயிருக்கின்றன.  சந்தை மீளும்போது இப்பங்குகள் மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். 

       இன்றைக்கு நல்ல நேரம் காலை 10.30 மணி அளவில் ஆரம்பிக்கும் என தெரிந்தும் சந்தையை காலை 9.55 மணிக்கே துவங்கியுள்ளதால் சந்தை இன்று போதுமான அளவு புள்ளிகளை கெலிக்க இயலவில்லை என நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.  :)

6 comments January 22, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031