Archive for January 21st, 2009

21-01-2009

      அமெரிக்க சந்தை 300 புள்ளிகள் அளவில் இழந்து முடிந்திருக்கிறது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இழப்புகளுடன் தொடங்கியுள்ளது.  ஆனால் பெரிய அளவில் இல்லை.

      இன்றும் நம் சந்தைகள் நேற்றைய கதை மாதிரிதான்.  இழப்புகளுடன் தொடங்க ஆரம்பிக்கும் நம் சந்தையானது நாளடைவில் மீள முயற்சிக்கும். நாளை வெளியாகும் ரிலையன்ஸ் முடிவுகள் நம் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். 

     சந்தையின் துவக்கமே 100 புள்ளிகளை இழந்து துவங்கினாலும், பெருத்த அளவில் சரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.  எல்லோரையும் 3000 என்ற நிலையில் நிறைய வாங்க வைத்துவிட்டு தான் சந்தை சரிய ஆரம்பிக்கும்.

       நிப்டி பங்குகளில் சில பங்குகள் நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்துள்ளன.  சில கொடுக்கவுள்ளன.  இது போன்ற சிறிய சரிவுகளில் அந்த வகையான பங்குகளை சிறிய அளவில் வாங்கி ஏற்றத்தில் விற்பது ஆரம்ப நிலையில் உள்ள முதலீட்டாளர்கள் செய்யலாம்.  இந்த நேரத்தில் தின வணிகம் ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு.

      நேற்றைய தினம் போலவே சந்தை மீள வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்ல இயலாது.  இன்று மாலை தொடங்கும் அமெரிக்க சந்தை மீள ஆரமபித்தால் நாளை நம் சந்தையிலும் ஷார்ட் கவரிங் இருக்கும் என்பதையும் மறந்து விடவேண்டாம்.  ஐரோப்பிய சந்தைகள் கடந்த இரு நாட்களாக இறக்கத்தில் இருந்தமையால், இன்று ஏற வாய்ப்பு இருக்கலாம்.

      இன்றைய நமது சந்தை -102 முதல் 28 வரை ஆடலாம். 

    Read Disclaimer.

    Good Morning To You All!

6 comments January 21, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031