Archive for January 20th, 2009

20-01-2009

     கடந்த நான்கு நாட்களாக இருந்த வேலைப் பளு காரணமாக சரிவர Update செய்ய இயலவில்லை. அதற்குள் இங்கே பலவிதமான வதந்திகள்.  இருக்கட்டும்.

      அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ஓபாமாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.  பொதுவாக அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா வைபவத்தன்று பங்கு சந்தைகள் சற்று சுணக்கமாகவே காணப்படும்.  

    அதேபோல் நேற்று ஐரோப்பிய சந்தைகளும், இன்று ஆசிய சந்தைகளும் சற்று சரிந்தே காணப்படுகின்றன.  நமது சந்தையும் நண்பகல் வரை சற்று சரிவுடனே காணப்படும் என நினைக்கிறேன்.  ஆனால் அதிலிருந்து மீள வாய்ப்பு இருப்பதாகவே நம்புகிறேன். நமது சந்தை இன்னும் சற்று அதிகமான புள்ளிகளை பெற்றே சரிய நேரிடும் என நினைக்கிறேன்.

       நமது சந்தையை சரிவிற்கு கொண்டுச் செல்லும் வகையிலான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.  ஆனால் அதுபோன்ற செய்திகள்/காலாண்டு அறிக்கைகைள் இருக்கின்றன.

      இன்றைக்கு நமது சந்தை -82 முதல் 48 வரை ஆடும் என நினைக்கிறேன்.

       நண்பர் ஜாபர் பங்கு சந்தை சார்ந்து ஒரு வலைப்பூவை ஆரம்பித்துள்ளார்.   அவருக்கு என்னுடைய மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

      மாலை விரிவாக எழுதுகிறேன். 

    Good Morning to You All!

Post Market:

     இன்றைய அமெரிக்க சந்தை சரிய வாய்ப்பிருக்கிறதென கருதி நம் சந்தை 80 புள்ளிகள் வீழ்ந்தாலும் மீண்டு 50 புள்ளிகளை இழந்து முடிந்துள்ளது.   சிறிய அளவு மீள வாய்ப்பு உள்ளது.  ஒருவேளை ப்ளாட்டாக முடிந்தால் நாளைய நம் சந்தைகள் உயர்வுடன் ஆரம்பிக்க வாய்ப்புகள் உண்டு. ஓபாமா வந்தவுடன் அமெரிக்க பொருளாதாரம் சீரடையும் என யாருமே நம்பவில்லை.  இன்னும் சொல்லப்போனால்  இன்னும் பெரிய ஊழல்களை எல்லாம் வெளியே கொண்டு வருவார். அவர் ஆட்சியில் அவைகள் நடக்க வில்லையென்பதற்காக.  அட, இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!

3 comments January 20, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031