Archive for January 15th, 2009

15-01-2009

      அமெரிக்க சந்தை நேற்று மங்களகரமாக முடிந்திருக்கிறது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அவ்வாறே தொடங்கியுள்ளன.  நேற்றைய தினம் நமது சந்தை Short Covering எல்லாம் முடித்து விட்டதால், இன்றைய தினம் சறுக்கு மரம் விளையாட ஆசைப்படுவது இயல்பே.

       இந்த சரிவுகள் 2550 வரை போகும் என நினைக்கிறேன்.  பிறகு வழக்கம்போல் Short Covering தொடங்கி சந்தை மீண்டும் மேல் நோக்கி செல்லும்.  இந்த சரிவுகளில் பலத்த அடி வாங்கப் போவது தகவல் தொழில்நுட்ப துறை இன்டெக்ஸ் என நினைக்கிறேன்.  பாவம், அவர்களுக்கு சத்ய சோதனைதான்.  நல்ல குழுமங்களின் பங்குகள் கூட கவனிப்பார் இன்றி கிடக்கின்றன.  நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். 

       இன்றைய சந்தை -128 முதல் 35 வரை ஆடலாம்.  இன்று சந்தையை திசை திருப்பும்படியான முக்கியமான குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் (டிசிஎஸ் காலாண்டு அறிக்கை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என நினைக்கிறேன்) எதுவும் வராத நிலையில், பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய செய்தி தான் வரும் என எதிர்பார்க்கலாம்.  ஆனால் அது சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

     மாலை விரிவாக எழுதுகிறேன்.   Disclaimer படிச்சுடுங்க.

   Good Morning To You All!

3 comments January 15, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031