Archive for January 13th, 2009

13-01-2009

     இன்றைய தினமும் சந்தைகள் சிகப்பாகவே காணப்படுகின்றன.  ஆனால் நம் சந்தையோ கடந்த ஒரு வாரமாகவே சிகப்பாக இருந்து வருகின்றது என்பதால், நேற்று ரெகவர் ஆகும் என எதிர்பார்த்தேன்.  அனைவரும் நிறைய விற்றிருக்கிறார்கள் என்பதால், சிறிது வாங்க ஆரம்பித்தாலே சந்தை முன்னேற்றம் அடையும்.  இதை நேற்றே எதிர்பார்த்தேன். 

      இன்று இன்போஸிஸ் காலாண்டு அறிக்கைகள் வரும் நாள்.  நல்ல அறிக்கைகள் வரும் என எதிர்பார்க்கிறேன்.  ஏனென்றால், அதன் மேலதிகாரிகள் சத்யம் குழுமம் சார்பாக சில கடுமையான வார்த்தை பிரயோககங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.  அதற்கேற்றார்போல் அவர்களுடைய காலாண்டு அறிக்கையும் நன்றாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.  இதன் மூலம் சந்தையில் யார் தலைவர் என காட்ட முயல்வார்கள். 

      எது எப்படியோ, இன்றைக்கும் சந்தை மேலேறும் என்பது என்னுடைய நம்பிக்கை.  குறைந்த பட்சம் 100 புள்ளிகள் வரையாவது மேலேறும் என நம்புகிறேன்.

     உங்களிடம் பழைய சத்யம் காலாண்டு அறிக்கைகள் ஏதும் இருந்தால் இந்த போகி அன்று அதை கொளுத்தி போகி கொண்டாடுவோம்.

மாலை விரிவாக எழுதுகிறேன்.  Disclaimer ர படிங்கய்யா

Good Morning To You All!

Post Market:

     இன்றைய சந்தை முழுவதும் வதந்திகளால் சூழப்பட்டிருந்தது.  முதலீட்டாளர்களிடம் பயம் இன்னும் விலக வில்லை என்பது தெளிவாக தெரிந்தது.  ரொல்டா பங்கில் நடந்ததை பார்த்தாலே தெரியும்.  இதுபோன்ற சமயங்களில்தான் பல பெரிய கரடிகளின் விளையாட்டை இன்று அதில் பார்த்தோம்.  ஆனால் சந்தை 50 புள்ளிகளை இழந்த போதும் மீண்டு விட்டது. 

    நண்பர்களுக்கு இனிய பொங்கல்  நல்வாழ்த்துகள்.  நாளை பங்கு சந்தையை பற்றிய பதிவு இருக்காது.  ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளப் போகிறேன்.  ஆனால் வேதாள நகரம் வெளிவந்தாலும் வரலாம் என எச்சரிக்கையும் இந்த சமயத்தில் செய்கிறேன்.

5 comments January 13, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031