Archive for January 5th, 2009

05-01-2009

      வெள்ளியன்று அமெரிக்க சந்தை 250 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது.  இன்றைய ஆசிய சந்தைகளும் உற்சாகமாக தொடங்கியுள்ளன.  நமது சந்தையும் அவ்வாறே தொடங்கக் கூடும்.   சந்தையின் முடிவும் ஏற்றத்துடன் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

       ஆனால் பொருளாதார நிலை இன்னும் சரியாகாத பட்சத்தில் இந்த ஏற்றங்கள் எல்லாம் வெகு வேகமாக இறங்கவே வாய்ப்பு இருக்கின்றன.  பொதுவாக இதுபோன்ற Killjoy கமென்ட்களை தற்சமயம் சந்தை ஏறும் சமயத்தில் முதலீட்டாளர்கள் புறக்கணித்து விடுவார்கள்.      உள்ளே ஓடும் எச்சரிக்கை உணர்வை புறக்கணித்து BTST என்னும் மாயவலைக்குள் புகுந்து விடுவார்கள்.  

      பெரிய தலைகள் எல்லாம் நஷ்டத்தில் இருக்கும்போது, இந்த ஏற்றங்களை அவர்கள் விற்க பயன்படுத்திக் கொள்வார்கள்.  அதனால் சந்தை கீழே இறங்கும்போது வாங்கி சந்தையையும் கீழே போகாமல் இலாபமும் பெற்றுவிடுவார்கள்.  இந்த விளையாட்டில் அவர்களை வைத்தது தான் சட்டம் என்று இருக்கும் நிலையில் நாம் வெறும் டெக்னிகல் விவரங்களை  நம்பி அகல கால் வைத்து ஏமாந்து விடக் கூடாது என சுயக் கட்டுப்பாடு தற்போதைய சந்தையில் வணிகம் செய்யும்போது ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தேவை.

     இன்றைய சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்பு உள்ளது.  இந்த ஏற்றத்தை விற்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

       மாலை விரிவாக எழுதுகிறேன்.  Just stay away from Satyam!

        Good Morning to You All!

Post Market:

       அமெரிக்க சந்தை தற்சமயம் இறக்கத்துடன் காணப்படுகிறது.  150 புள்ளிகளுக்கு மேல் இறக்கத்துடன் முடியும் பட்சத்தில் நாளை நமது சந்தையில் Selling Pressure மிக கடுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.

        இன்றைய சந்தை பற்றி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.  உற்சாகமான ஒரு மனநிலையில் எல்லோருமே இருந்தததாக தோன்றுகிறது. பார்ப்போம்.

7 comments January 5, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031