Archive for December, 2008
24-12-2008
நேற்றைய தினமும் அமெரிக்க சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய ஆசிய சந்தைகளும் 1-2 சதவீதம் அளவிற்கு இறக்கத்துடன் காணப்படுகின்றன.
இன்று F & O Closing Date. Volume குறைவாக இருப்பதால் சந்தையின் முதல் இரண்டு மணி நேரத்தில் சந்தையை இறக்கத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். சரியாக Homework செய்து கொண்டு போனால் இன்று தின வணிகர்கள் நல்ல இலாபம் ஈட்டலாம்.
நிப்டி குறியீட்டில் இருக்கும் சத்யம் குழுமம் பற்றி மேலும் மேலும் மோசமான செய்திகள் அல்லது வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு இலக்கத்திற்கு வந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். Satyam has very strong foundation and let’s see how the management save from this crisis. Maybe we could learn a thing or two from this fiasco.
புதிய வருடம் ஜனவரி 2009 அவ்வளவாக உற்சாகமான மாதமாக பங்கு சந்தைக்கு இருக்காது என நினைக்கிறேன். புதிய பள்ளங்களை தொடப் போகும் மாதம் அது என்றே நினைக்க தோன்றுகிறது.
இன்றைய சந்தை -115 முதல் 45 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு Flat or Negative.
Good Morning to You All!
Merry Christmas!
9 comments December 24, 2008
23-12-2008
Futures Contract முடியும் நாள் நெருங்கியதையொட்டி, சந்தை வெகுவாக இன்று ஊசலாடும் நிலையில் இருக்கும். துவக்கம் Flat ஆக இருந்தாலும், சந்தை இறங்கவே வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்துடனே காணப்படுகின்றன. அவ்வாறே முடியும் என்றே நினைக்கிறேன்.
3000 என்ற நிலையை விட்டு சந்தை இன்று நழுவ வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் வரும் Selling Pressure எவ்வாறு, எதுவரை சந்தை சமாளிக்கும் என்று தெரியவில்லை.
ப்யூச்சர் முடிய இரு நாட்களே உள்ள நிலையில் புதிய தின வணிகர்கள் இன்று நிறைய எண்ணிக்கையில் வர்த்தகம் செய்வதை தவிர்த்தல் நலம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது காலம் காத்து முதலீடு செய்வதே நன்று.
இன்றைய சந்தை -85 முதல் 50 வரை ஆடலாம். முடிவு Flat or Negative ஆகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
Good Morning to you All!
Post Market:
நாளை Future முடியும் நாள். Closing Day முன் நாள் எவ்வித டெக்னிகல் விஷயங்களும் எடுபடாது. ஆனால் இன்றைய தினம் சமத்தாக சொன்ன பேச்சு கேட்டது ஆச்சரியமளிக்கிறது. வேறு என்ன சொல்வது?
ரிலையன்ஸ் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் தற்சமயம் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வரும்போது இது போன்ற வதந்திகள் சந்தையின் போக்கை திசை திருப்ப வல்லவை என நினைக்கிறேன்.
Good Night!
6 comments December 23, 2008
22-12-2008
எந்தவித க்ளுவும் கிடைக்காமல் ஆசிய சந்தைகள் தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. நமது சந்தை Flat or Negative ஆரம்பத்துடன் துவங்கும் என நினைக்கிறேன்.
Futures காண்ட்ராக்ட் முடியும் வாரம் என்பதால் சந்தையின் ஊசலாட்டம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில்தான் ஆபரேட்டர்கள் சந்தையை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார்கள். வால்யூம் குறைவாக உள்ள நிலையில் எது வேண்டுமானாலும் சாத்தியமே.
கிறிஸ்மஸ் தினம் வியாழனன்று வருவதால் தொடர் வணிக நாட்களில் ஒரு இடைவெளி வந்தால் சந்தையின் நிலை அலைகழிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. இன்றைய சந்தை -85 முதல் 55 வரை ஆடலாம் என்று நினைக்கிறேன்.
சந்தை 2500 என்ற நிலைக்கு வர வாய்ப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். முதலீடு செய்யும்போது ஒரு தடவை யோசித்து கொள்வது நல்லது.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning to you All!
Post Market:
இந்தியா-பாக்-அமெரிக்கா உள்துறை அமைச்சர்களிடையே நடக்கும் விவாதங்களை செய்திதாட்களில் கூர்ந்து கவனித்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏறக்குறைய கீழ்க்கண்ட மாதிரி தான் இருக்கும். அதற்காக கவனிக்காம இருக்காதீங்க.
ஒருவர் : நிறுத்திடு, வேண்டாம்.
இன்னொருவர் : முடியாது.
ஒருவர் : பலத்த அடி படும்.
இன்னொருவர் : யாருக்கு?
ஒருவர் : யாருக்கோ.
புதியவர் : சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துங்கப்பா.
ஒருவர் : எனக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னே தெரியாது.
இன்னொருவர் : என்ன நடக்கும்?
ஒருவர் : அதான் தெரியாதுன்னு சொல்றோம்லே.
இந்த ரேஞ்ச்ல நடந்தாலும் சுமுகமாக முடியாதுன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
5 comments December 22, 2008