Archive for December 19th, 2008

19-12-2008

      கடந்த இரு நாட்களாக வேலை பளு அதிகமாக இருந்ததால், Post Market சரியாக அப்டேட் செய்ய இயலவில்லை.  இணையம் பக்கமே வர முடியவில்லை.  எதையோ இழந்தது போல இருந்தது.  இணையமும் ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது. 

         நேற்றைய அமெரிக்க சந்தை டைவ் அடித்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் டைவிங் போர்ட்டில் இருக்கின்றன.  நமது சந்தை மட்டும்  கடந்த இரு நாட்களாக புதிய நிலைகளை எடுத்து வருகிறது.  அதாவது தொழிற்நுட்ப காரணிகளை எதிர்த்து முடிந்திருக்கிறது.  ரிலையன்ஸ் குருப் பங்குகளை கடந்த இரு நாட்களாக பார்த்தோமென்றால்  அதை வைத்துக் கொண்டு சந்தையை கீழே இறங்க விடாமல் செய்வது புரிகிறது.  இந்த நிலை கண்டிப்பாக மாறிவிடும்.  சிலரின் இலாப நோக்கத்திற்காக இவ்வாறு செய்கின்றனர். 

       இன்றைய தினம் சந்தையை இறக்கும்போது வெள்ளிக் கிழமை என வாங்கி திங்களன்று ஏறிவிடும் என்ற கணிப்பில் பங்குகளை வாங்கும்போது ஒரு தடவை யோசித்து விடுவது நல்லது.  திங்களன்றும் அவர்கள் சந்தையை இறக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

       இன்றைய சந்தை 3125 என்ற நிலையை தாண்டாது என்றே நினைக்கிறேன். பார்ப்போம். சத்யம் (விஷால் படம் இல்லை) மேலும் இறங்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

        இன்றைய மாலை எழுதுகிறேன்.  இன்றைக்கு வேதாள நகரத்தின் வெற்றிகரமான 10ம் பகுதியை எழுதி பதிவேற்ற முயற்சி செய்கிறேன்.  :)

        Good Morning to You All!

Post Market:

        சந்தையில் இன்று பெரிய அளவில் முன்னேற்றமில்லை.  அமெரிக்க அரசாங்கம்  ஆட்டோ செக்டாருக்கு பெயில் அவுட் பணம் கொடுத்துள்ளது.  தொகை பத்தாது என்றே நினைக்கிறேன்.  கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து வருகிறது.  பொதுவாக பார்த்தால் இது நல்ல விஷயம் என்ற தோன்றினாலும், உலக அளவில் பங்கு சந்தைகளுக்கு இது நல்லதில்லை.

         இந்த வாரக் கடைசியில் ஏதாவது எழுத முயற்சி செய்கிறேன். Till then. Enjoy the Weekend!

4 comments December 19, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031