Archive for December 11th, 2008

11-12-2008

       தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் தொடங்கியுள்ளன.  அடுத்த நிலை என்ன என்பதில் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது.  நமது இன்று 3000 என்ற இலக்கினை தாண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  சந்தையில் வணிகம் குறைவாக இருப்பதால், ஆபரேட்டர்கள் 3000 தாண்டி எடுத்து போனாலும் அந்நிலையில் நில்லாமல் கீழிறிங்கி விடும் நிலையே உள்ளது.

       இன்றைய சந்தை Flat or Negative என ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.  நேற்றைய பாய்ச்சலுக்கு பிறகு, இன்றைய சந்தை மிக கவனமாக தன்னுடைய அடுத்தக் கட்டத்தை ஆரம்பிக்கும்.  சந்தை 60 முதல் -85 வரை ஆட வாய்ப்பு உள்ளது.  முடிவு 10 முதல் -45 வரை நினைக்கிறேன்.

        சந்தையின் மத்தியில் வரும் செய்திகளால் சந்தையின் பாதை மாற்றி அமையக் கூடும்.  மாலை விரிவாக எழுதுகிறேன்.

      As I said earlier. we are not out of woods yet.  So. Before long. think hard.

  Good Morning to you All!

Post Market:

      இன்றைய சந்தை தொலைக்காட்சி சீரியல் மாதிரி இழுத்துக் கொண்டே சென்று முடிவடைந்தது.  காரணம்,  3000 என்ற நிலையை தாண்டும் அளவிற்கு வலு இல்லை.  அமெரிக்க சந்தையே 9000 என்ற நிலையை கடக்க படாதபாடு படும்போதும், நம்மால் 3000 என்ற நிலையை கடந்து அதை தக்க வைக்க முடியும் என்ற தோன்றவில்லை.  இன்றைய அமெரிக்க சந்தை இறக்கத்துடன்தான் முடியும் என தோன்றுகிறது.

        மும்பை சம்பவம் குறித்து எந்த பங்கு தரகு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க வில்லை என்று நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது.  இந்தியா தற்போது மிக வலுவான அரசியல் தலைவரை கொண்டுள்ளது.  பாகிஸ்தானில் அவ்வாறு இல்லை.  அவர் அறிக்கைகள் மிகவும் அபத்தமாக உள்ளன.  சென்ற கார்கில் பிரச்சினையின்போது இருந்த நவாஸ் ஷெரீப் அளவிற்கு கூட இவரால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை.  தற்போதைய மத்திய அரசாங்க்த்திற்கு இதை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் அமையாது என்றே தோன்றுகிறது.

      காந்தஹார் விமான கடத்தல் விஷயத்தில் கடத்தல்காரர்களுக்கு பணிந்தது இன்னமும் நிறைய பேர்களுக்கு உறுத்திக் கொண்டேயிருக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்னும் சில காரணங்களால் limited strike on terrorist camp நடக்குமென்றே தோன்றுகிறது.  இது கண்டிப்பாக பங்கு சந்தையை பாதிக்கும் என்றாலும், விரைவில் மீண்டு விடும் என்றே தோன்றுகிறது.

 Good Night!

4 comments December 11, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031