Archive for December 10th, 2008
10-12-2008
அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்திருந்த போதிலும், ஆட்டோ பெயில்அவுட் அறிவிப்பு அருகில் இருக்கும்போது நமது சந்தை இன்று பாஸிட்டிவாக தான் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். சந்தையின் உயர்வுகளில் இலாபம் உறுதி செய்ய யாரும் தற்சமயம் தயங்குவதில்லை என்பதால், Selling Pressure நண்பகலில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் இருந்தாலும், நாளடைவில் இறங்க கூடும் என நினைக்கிறேன். சந்தையின் அடுத்த நிலைகளை பற்றி பல்வேறு விதமான டெக்னிகல் இலக்குகளை கொடுத்தாலும், இன்னும் இரு மாதங்கள் வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது.
இன்றைய சந்தை +85 முதல் -35 வரை ஆடலாம் என நினைக்கிறேன். முடிவு -15 முதல் +65 வரை முடியலாம்.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning to You All!
Post Market:
ஸ்டீல் பங்குகள் மற்றும் ஆட்டோ பங்குகளின் புண்ணியத்தால் இன்றைய சந்தை ஏறியது இறங்கவே இல்லை. தற்சமயம் பங்கு சந்தையை தவிர இந்திய அரசியல் சூழ்நிலை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் நிலைகளை கவனியுங்கள்.
வரும் இரண்டு வாரங்களில் சந்தை இதை வைத்தே நிலைக் கொள்ளும் என நம்புகிறேன். இன்றைய சந்தை மிக அதிகமான அளவில் இன்று ரீயாக்ட் செய்திருக்கிறது. இனி உலக சந்தைகளை தவிர உள்நாட்டு செய்திகள் பக்கம் சந்தை தன் கவனத்தை திருப்பும் என நினைக்கிறேன்.
Before long, think hard.
Good Night!
2 comments December 10, 2008