Archive for November 5th, 2008
05-11-2008
சந்தை இன்று உற்சாகமாக தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஏற்றத்தை விற்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய அதிபர் பதவியேற்றவுடன் பொருளாதார மந்தம் முடிந்து போவதில்லை. இந்த உற்சாகத்தில் முழ்கி புதிய Positions எடுக்கும்போது கவனமாக இருங்கள்.
Short Covering செய்து சந்தை 3280 வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது. உலக சந்தைகள் அனைத்தும் இன்னும் பலவீனமாகவே உள்ளன. வேறு ஒன்றும் இன்று சொல்வதற்கில்லை. இரவு எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் முடிவு ஒருவழியாக அதற்குள் வந்திருக்கும்.
Have a Good Day!
Post Market:
மிக உற்சாகமாக ஆரம்பித்த சந்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் சரிய ஆரம்பித்தது. ஓபாமா வெற்றி நிரந்தரமானவுடன் சந்தை மீள எழுந்திருக்கவே இல்லை. மிக வலுவான ஒட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இன்னும் நான்கு ஆண்டு காலம் பதவி உண்டு. அதனால் மின்னல்வேக பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளுவார் என எதிர்பார்ப்பதில் பயனில்லை. தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் சரியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட பிடிக்கலாம். தின வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு (ஏறக்குறைய எல்லோருந்தான் அதில் இருக்கிறோம், இல்லையா?) இது மிகப் பெரிய காலமாக தெரியலாம். உண்மையான முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறுகிய காலமே.
ஆனால் இன்னும் ஆறு வருடங்கள் கழித்து இந்த காலத்தை நினைத்து பார்க்கையில் சில வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோமே என வருந்தக் கூடும். இது தற்சமயம் முதலீட்டாளர்களின் பொற்காலத்திற்கு முற்காலம் என கருதலாம்.
நமக்கும் இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வந்து முடிவுகள் தெரிந்து விடும். ஒரு கட்சி ஆட்சி என்றால் நம் நாட்டு பொருளாதாரமும் வெகு விரைவாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது. 2014-2018 வரை Economic Boom எதிர்பார்க்கலாம்.
La bienvenida, el Amigo,
சின்ட்டிகேட் வங்கி மற்றும் சம்பல் பெர்ட்டிலைசர் மட்டுந்தான் வாங்குவீர்களா? நிப்டி மீண்டும் 2200/2300/2400 என்ற புள்ளிகளில் இருக்கும்போது சிறிய எண்ணிக்கையில் வாங்க ஆரம்பியுங்கள்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கும் நேரம் அதுவே. எது வாங்கினாலும் சிறிய எண்ணிக்கையில் வாங்குங்கள். நீண்ட காலத்திற்கு என வாங்கிவிட்டு, ஒரு பத்து ரூபாய் ஏறிவிட்டால் விற்றுவிட்டு மீண்டும் வாங்கலாம் என்ற எண்ணமே வேண்டாம். நீண்ட கால முதலீட்டிற்கென வாங்கியதை குறைந்தபட்சம் ஒரு வருடமெனும் கைவசம் வைத்திருக்கக்கூடிய மனத்திடம் தற்போது தேவை.
ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இன்று சுரத்து இழந்துள்ளன. ஆசிய சந்தைகள் உற்சாகமாக முடிந்துள்ளன. நாளை அவர்களிடம் இந்த அளவு உற்சாகத்தை எதிர்பார்க்க முடியாது. நமக்கோ ரிலையன்ஸ் பங்கு பெருத்த அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதை சரிசெய்ய நாளைய சந்தையில் அவர்கள் ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
8 comments November 5, 2008