Archive for November 3rd, 2008
03-11-2008
இன்றைய தினம் மிகவும் பாஸிட்டிவான தினம். ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்து ரூ.1,80,000 கோடிகள் அளவில் வங்கிகளிலிருந்து பணம் ரீலிஸ் செய்யப்படும் என்பது செய்தி. அமெரிக்க அதிபர் தேர்தல் அருகிலிருக்கும் போது இது போன்ற முடிவுகள் அரசியல் முடிவுகளாகவே பார்க்கப்படும். ரிசர்வ் வங்கி இந்த சமயத்தில் இவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. மேற்கண்ட கோடிகள் பெரிய தொகையாக தோன்றினாலும் அவ்வளவும் சந்தைக்கு வரும் என்பது நிச்சயமில்லை.
அமெரிக்க சந்தைகள் பெருத்த அடி வாங்கியிருக்கும் தருணத்தில் புதிய அதிபர் வந்தவுடன் அச்சந்தையை முன்னேற்றம் அடைய செய்யதான் பாடுபடுவார். அதில் ஒன்று, வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் தொகைகளை அமெரிக்காவிற்கு திருப்பி விடுவது. இன்றைய தினம் வெளிநாட்டு முதலீட்டாளர் விற்பது தொடரும் என்று நினைக்கிறேன்.
ஆசிய சந்தைகள் தற்சமயம் பச்சையாக இருந்தாலும் தின முடிவில் சற்று இறங்கக் கூடும் என நினைக்கிறேன். நமது சந்தை Short Covering காணப்படலாம். ரிலையன்ஸ், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன், செயில் போன்றவற்றில் பெருமளவு Short Covering காணப்படலாம். சந்தை +100 புள்ளிகளுக்கு மேல் துவங்கவும் வாய்ப்பு உண்டு. இந்த வாரம் உலக சந்தைகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டியே இயங்கக் கூடும்.
மிக கவனமாக சந்தையில் இன்று இறங்கவும். தின வணிகர்களுக்கு முதல் அரைமணி நேரம் முக்கியமானது.
Good Morning!
Post Market:
ரிசர்வ் வங்கியின் ரேட் கட் எதிர்பார்த்த அளவில் சந்தையை உயர்த்த வில்லை என தெரிகிறது. குறிப்பிட்ட சில பங்குகளை தவிர வேறு எதும் முன்னேற்றம் காணவில்லை. இந்த வாரம் உலக சந்தைகள் பெருத்த ஊசலாட்டத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும். நாமும் அதற்கும் தயாரவோம். டோ மங்களகரமாக ஆரம்பித்துள்ளது.
2 comments November 3, 2008