மாபெரும் ஹைக்கூ போட்டி

October 29, 2008

      சந்தை இறங்கி வருகின்ற நிலையில், முதலிட்டாளர்களில் பலர் கவிஞர்களாக ஆகி வருகின்றார்கள்.   அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மாபெரும் ஹைக்கூ போட்டி நடத்தப்படுகிறது.

      ஒவ்வொருவர் மனதிலும் கவிதை உண்டு என பிரபல கவிஞர் ஜெ. அலெக்ஸாண்டர் டைம்ஸ் இதழுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளதை நினைவு கூருங்கள். உங்கள் மனதில் பொங்கி, ததும்பி, அலைந்து கொண்டிருக்கும் அதனை பில்டர் செய்து மூன்று வரிகளில் இங்கே பின்னுாட்டமாக இட வேண்டியதுதான்.

      வெற்றி பெறும் ஹைக்கூவை எழுதியவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கூட பரிசு கொடுக்கலாம்தான். அதனை சந்தையில் முதலீடு செய்தால் தற்போது ஒன்றும் தேறாது என்ற நிலையில் வெற்றி பெற்றவர்களை வேறு வகையில் பாராட்டலாம் என முடிவு செய்திருக்கிறேன்.  உங்களுக்கு மறக்க முடியாத நினைவு பரிசாக வருங்கால அமெரிக்க துணை ஜனாதிபதி திருமதி சாரா பாலின் சென்னை வந்தால், அவருடன் முனியாண்டி விலாஸில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கு நண்பர் கிங் விஸ்வா உதவுகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார். எதற்கும் அவரின் புகைப்படத்தினை இங்கே பிரசுரிக்கிறேன்.

அன்னை சாரா பாலின்

அன்னை சாரா பாலின்

       இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறும் ஹைக்கூகளை தேர்ந்தெடுக்க கற்றறிந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  அதில் நானும், நண்பர் விஸ்வா (அவர் விரும்பினால். ஹைக்கூவில் நல்ல பரிச்சயம் அவருக்கு உண்டு. ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் என அவர் எழுதிய பின்னுாட்டத்தினை யாரும் மறந்திருக்க முடியாது). 

      பிரசுரம் ஆகும் எல்லா ஹைக்கூகளை எழுதியவர்களும் கவிஞர் என அழைக்கப்படுவார்கள்.  உங்கள் கற்பனை ஊற்றை திறந்து முத்தான மூன்று வரிகளில் வரலாறு படைக்க படை திரண்டு வாரீர்! வாரீர்!!

Entry Filed under: Hunter's Mind. .

32 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  October 29, 2008 at 7:09 pm

    Josh..

    எனக்கு ஓர் ஐயம். நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்

    //ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் //

    பழனி கோவிலில் நான் சாமி கும்பிட்ட பிறகு பட்டை போட்டு விட்டார்கள். அதுவும் மூன்று வரி தான் இருந்தது. அதற்கும் ஹைக்குவிற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

    **************************************************

  • 2. Karthikeyan G  |  October 29, 2008 at 7:11 pm

    Josh..

    எனக்கு ஓர் ஐயம். நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்

    //ஹைக்கூக்கு மொத்தம் மூன்று வரிகள்தான் //

    பழனி கோவிலில் நான் சாமி கும்பிட்ட பிறகு பட்டை போட்டு விட்டார்கள். அதுவும் மூன்று வரி தான் இருந்தது. அதற்கும் ஹைக்குவிற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

  • 3. sharehunter  |  October 29, 2008 at 7:14 pm

    மேற்கண்ட உங்களின் பின்னுாட்டம் ஐந்து வரிகளில் இருப்பதால் ஹைக்கூ அல்ல என தீர்மானிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது.

    நடுவர் குழு

  • 4. Karthikeyan G  |  October 29, 2008 at 7:17 pm

    அறம் செய்ய விரும்பு
    ஆறுவது சினம்
    இலையில் சோறு போடு.

  • 5. dg  |  October 29, 2008 at 7:59 pm

    katka
    katra pinbu nirka
    piraku duunkuka

  • 6. sharehunter  |  October 29, 2008 at 8:04 pm

    கார்த்தி,
    முதல் ஹைகூ இப்படி இருக்க வேண்டும.

    அறம்
    செய்ய
    விரும்பு
    இரண்டாவது கவிதை நிராகரிக்கப்படுகிறது.
    மூன்றாவது ஒரளவு தேறுகிறது,
    இது வேலைக்காவது, கார்த்தி, சாராவை நீங்கள் மறந்து விட வேண்டியதுதான்.

    ஸாரி, டிஜி, ஹைகூ தமிழில் எழுத வேண்டும்.

  • 7. dg  |  October 29, 2008 at 8:32 pm

    விள‌க்கேற்ற‌ வ‌ந்த‌ ம‌ரும‌க‌ள்
    வீட்டிற்கே வெளிச்ச‌ம் த‌ந்தாள்…

    தீக்குளித்து.

    சார் தமிழில் எழுதியாச்சு

    (பின் குறிப்பு : நான் எழுதியது அல்ல:
    எங்கோ படித்தது)

  • 8. paranee  |  October 30, 2008 at 2:00 am

    நீ
    நான்
    தமிழர்கள்

  • 9. Rajkumar  |  October 30, 2008 at 8:01 am

    கண்ணீர்த்துளி

    இனிக்கிறது

    கிளிசரின்

  • 10. nagu  |  October 30, 2008 at 11:18 am

    நானும் அவளும் காதலித்தோம்,
    இன்று – அவளுக்கு மட்டும்
    தலை தீபாவளி

    (எங்கோ, எப்பொழுதோ படித்ததாக நினைவு…….)

  • 11. dg  |  October 30, 2008 at 11:55 am

    நானும் அவளும் காதலித்தோம்,
    இன்று – அவளுக்கு மட்டும்
    தலை தீபாவளி good

  • 12. dgdg12  |  October 30, 2008 at 11:57 am

    good

  • 13. dgdg12  |  October 30, 2008 at 12:03 pm

    good good

  • 14. maharaja  |  October 30, 2008 at 12:21 pm

    கடவுளின்
    கடவுள்
    கோத்ரேஜ் பூட்டு !

  • 15. kalyankumar  |  October 30, 2008 at 1:00 pm

    எஸ்தரைக் காதலித்தேன்
    கன்னிகாஸ்திரியாய் அவள்
    சிலுவையில் நான்!

  • 16. sriram  |  October 30, 2008 at 2:57 pm

    நம்பினோர்
    கைவிடபடுவர்
    நிபிடியை

  • 17. dgdg12  |  October 30, 2008 at 3:39 pm

    yes sriram sir

  • 18. Karthikeyan G  |  October 30, 2008 at 4:15 pm

    நேற்று :-) )
    இன்று :-( (
    நாளை :-? ?

  • 19. Karthikeyan G  |  October 30, 2008 at 4:16 pm

    நேற்று :-)
    இன்று :-(
    நாளை :-?

  • 20. dgdg12  |  October 30, 2008 at 5:36 pm

    நேற்று
    இன்று
    நாளை
    sir idu eanna sir

  • 21. Karthikeyan G  |  October 30, 2008 at 5:57 pm

    சார், இது Structural modernisam வகை கவிதை சார். இதை படித்து விட்டு அறையின் மூலையில் குத்த வைத்து உட்கார்ந்து யோசித்தால் இந்த கவிதை பல வகை பொருள் தரும்.

  • 22. டுமீல்ஜி  |  October 30, 2008 at 6:29 pm

    வெங்காயம்
    சென்செக்ஸ்
    கண்ணீர்

    —-இரண்டும் முடிவில் ஒன்றும் இல்லை.
    —-கடைசியில் கண்ணீர்.

  • 23. sharehunter  |  October 30, 2008 at 6:29 pm

    ஹைகூவை தவிர மற்றதெல்லாம் எழுதுறீங்க, மக்களே! சாம்பிளுக்கு நான் ஒன்னு எழுதுறேன்.

    வராது
    எனக்கு
    ஹைக்கூ!

    :)

  • 24. sharehunter  |  October 30, 2008 at 6:30 pm

    சந்தை பற்றி இன்னொரு ஹைக்கூ

    6500
    1800
    அய்யோ!
    :(

  • 25. basheer  |  October 30, 2008 at 6:46 pm

    ஆசை
    பயம்
    நிப்டி!

  • 26. டுமீல்ஜி  |  October 30, 2008 at 6:47 pm

    21500ஆஹா
    7500ஐயோ
    4500????

  • 27. basheer  |  October 30, 2008 at 7:05 pm

    கவிதை
    தேய்ந்து
    ஹைக்கூவானது…

  • 28. Karthikeyan G  |  October 30, 2008 at 8:04 pm

    சார் ஹைக்கூ எனக்கு வரவில்லை.
    அடுத்த முறை British பொருளாதாரத்தின் உந்து சக்தியாய் விளங்கும் Britney Spears-ஐ சந்திக்க ஒரு ‘நேரிசை வெண்பா’ போட்டி வையுங்கள். நான் கடைசி பரிசாவது வாங்குவேன். (Confidence is life).

  • 29. basheer  |  October 31, 2008 at 2:54 pm

    இன்வெஸ்டர்
    டிரேடர்
    கவிஞர்!

  • 30. Anonymous  |  November 9, 2008 at 7:56 pm

    கருப்பர்
    ஆளும்
    வெள்ளைமாளிகை!

  • 31. BARANI  |  November 9, 2008 at 9:05 pm

    //மாபெரும் ஹைக்கூ போட்டி//

    ஒலியெளுந்ததே
    ஒளி
    ஒழிந்ததால்…!!!

    (ஹைக்கூவுக்கு விளக்கம் ஆர்காட்டாரைக் கேட்டால் மட்டுமே தெள்ளத் தெளிவாகத் புரியும்)

  • 32. NANDHA  |  July 13, 2009 at 7:03 pm

    soory enaku haikoo varathu but abouve haikoo fine

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031